(675)

பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்

பேய னேயெவர்க் கும்இது பேசியென்

ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்

பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

 

பதவுரை

யாவரும்

-

இவ்வுலகத்தாரடங்கலும்

எனக்கு

-

என் வரைக்கும்

பேயரே

-

பைத்தியக்காரர்கள் தான்;

யானும்

-

(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்

எவர்க்கும்

-

எவர்களுக்கும்

ஓர் பேயனே

-

ஒரு பைத்தியக்காரன் தான்;

இது

-

இவ்விஷயத்தை

பேசி

-

(விரிவாகச்) சொல்வதனால்

என்

-

என்ன ப்ரயோஜநமுண்டு?

ஆயனே

-

‘ஸ்ரீகிருஷ்ணனே!

அரங்கா

-

ஸ்ரீரங்கநாதனே!’

என்று அழைக்கின்றேன்

-

என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) கூவாநின்றேன்;

எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ???? ???????? ?????? ????????  (கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத்தக்கவனாவன்) என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற, அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.

 

English Translation

To the world I am mad. To me the world is mad. Alas! What use dilating on this? “O Cowherd-Lord!”, I call, mad with love for the Lord of Arangam, My master.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain