(674)

எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அச்

சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்

பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

 

பதவுரை

செம் கண்மால்

-

புண்டரீகாக்ஷனான எம்பெருமான்

எத்திறத்திலும்

-

எந்த விஷயத்திலும்

யாரொடும்

-

கண்ட பேர்களோடே

கூடும் அச்சித்தம் தன்னை

-

சேர்ந்து கெட்டுப்போவதற்கு உறுப்பான நெஞ்சை

தவிர்த்தனன்

-

நீக்கியருளினான்; (ஆதலால்)

அத்தனே

-

ஸ்வாமியே!

அரங்கா

-

ஸ்ரீரங்கநாதனே!

என்று அழைக்கின்றேன்

-

என்று கூவாநின்றேன்;

எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வீர்! அயலாரோடு பொருந்தாமைக்கடியான நன்மை உமக்கு வந்தபடிஏன்?’ என்று சிலர் கேட்க; இது நானே ஸம்பாதித்துக் கொண்டதல்ல; ஸர்வேச்வரனது அருளடியாகக் கிடைத்ததென்கிறார். ‘ஒரு அவைஷ்ணவனோடு பேசினால் ஸகல புருஷார்த்தங்களும் கொள்ளைகொள்ளையாகக் கிடைக்கும்’ என்று ஒரு ஆப்தன் சொன்னபோதிலும் அப்போதும் அவர்களை த்ருணமாகக் கருதி, ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீரங்கநாதா!’ என்றே எப்போதும் வாய்வெருவிக் கொண்டிருக்குமாறு எம்பெருமான் எனக்கு அருள்புரிந்த பாக்கியம் மற்றையோர்க்குக் கிடைக்குமா என்கிறார். எம்பெருமான் என்னை ஒருதடவை குளிரக் கடாக்ஷித்த மாத்திரத்திலே இந்த பாக்கியம் வாய்த்தது என்பார் “செங்கண்மால்.” என்கிறார்.

 

English Translation

The Lord weaned me away from mixing with just anyone for just anything.  “My Mater!”, “My Aranga!”, I call, mad for the love of my own sweet Lord.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain