(672)

தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்

நீதி யாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்

பேதை மாமண வாளன்றன் பித்தனே

 

பதவுரை

தீது இல் நல் நெறி நிற்க

-

குற்றமற்ற நல்வழி இருக்கச் செய்தே

(அவ்வழியில் போகாமல்)

அல்லாது செய் நீதியாரொடும்

-

நல்வழிக்கு எதிர்த்தட்டானவற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு

யான் கூடுவது இல்லை

ஆதி

-

(உலகங்கட்கு) முதல்வனாய்

ஆயன்

-

ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வஸஞ்லபனாய்

அம் தாமரை பேதை மா மணவாளன்

-

அழகிய தாமரைப் பூவில் அவதரித்த

பிராட்டியின் வல்லபவனான

அரங்கன் தன்

-

ஸ்ரீரங்கநாதன் திறத்தில்

பித்தன்

-

மோஹங் கொண்டிரா நின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி; எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை;  நல்ல நெறி; ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபுருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை, தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க. அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு, ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப்பொருந்த மாட்டா தென்றாராயிற்று.

 

English Translation

I will not be one with those who abandon the virtuous path and do wrong things. I am mad for the first-Lord Aranga, the cowherd-Lord, the bridegroom of lotus-dame-Lakshmi.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain