(671)

உண்டி யேயுடை யேயுகந் தோடும்இம்

மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்

அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை

உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே

 

பதவுரை

உண்டியே

-

ஆஹாரத்தையும்

உடையே

-

வஸ்திரத்தையுமே

உகந்து ஓடும்

-

விரும்பி (க் கண்டவிட மெங்கும்) ஓடித்திரிகிற

இ மண்டலத்தொடும்

-

இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு

யான் கூடுவது இல்லை

அண்டம் வாழ்நன்

-

பரமபதத்திலே வாழ்பவனும்

வல்பேய் முலை உண்ட வாயன்

-

கல் நெஞ்சையுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயையுடையனுமான

அரங்கன் தன்

-

ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்

உன்மத்தன்

-

பைத்தியம் பிடித்தவனாயிரா நின்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஸ்ரீராமாயணம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? ஸ்ரீ பாகவதம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? பகவத்ஸேவை எங்கே கிடைக்கும்? பாகவதஸேவை எங்கே கிடைக்கும்? ’ என்று காதும் கண்ணும் தினவெடுத்து ஓடிக்களிக்கவேண்டியது ஸ்வரூபமாயிருக்க, அஃதொழிந்து ‘சோறு கொடுப்பது எங்கே?  கூறை கிடைப்பது எங்கே?’ என்று வாய்வெருவிக் கொண்டு பறந்தோடுகின்ற இப்பாவிகளோடு எனக்குப் பொருந்தாது.  விரோதிகளைப் போக்கித் தன்னை அருள்கின்ற எம்பெருமான் குணங்களையே நினைந்து நைந்து உள்ளுரைந்துருகுமவன் நான் என்கிறார்.

 

English Translation

I am not at ease with the worldly lot who run after gourmet food and fancy clothes. I crave for the Lord of the Universe, my Lord Aranga who sucked the ogress Putana’s breasts.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain