(635)

கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்

இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்

செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று

மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே

 

பதவுரை

கொம்மை முலைகள்

-

(எனது) கிளர்ந்தபருத்த முலைகளினுடைய

இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல்

-

குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை

செம்மை உடைய திருமார்விலே

-

(அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே

சேர்த்தானேலும்

-

(என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்

கன்று

-

(நல்லது)

ஒரு நான்று

-

ஒருநாள்

இம்மைப்பிறவி செய்யாதே இனி போய்

-

இந்த ஜன்மத்திலே செய்யப்பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேசவிசேஷத்திலே போய்

செய்யும்

-

செய்யக்கூடியதான

தவந்தான் ஏன்?

-

தபஸ்ஸு ஏதுக்கு?

முகம்நோக்கி

-

என் முகத்தைப்பார்த்து

மெய்ம்மை சொல்லி

-

மெய்யே சொல்லி

விடைதான் கரும் எல்

-

“நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளிவிட்டமைதோன்ற விடை கொடுப்பானாகில்

மிக நன்று

-

அது உத்தமோத்தமம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கொங்கைதன்னைக் கிழங்கோடு மள்ளிப் பறித்திடுவானேன்? விழங்கு என்றி ஆத்மவஸ்துவுண்டாகில் அவ்வாத்மவங்துதான் நித்யமாகையாலே ஒரு காலவிசேஷத்திலே ஒரு தேசவிசேஷத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறலாமே, அவ்வநுபவத்தைப் பெறுவதற்குப் பாரித்துக்கொண்டு இங்கே ஒருவாறு ஆறியிருக்கலாமே“ என்று சிலர்சொல்ல, பெற்ற இவ்வுடம்போடே இங்கே அநுபவிக்க ஆவல் கொண்டிராநின்றநான் தேஹாந்தரத்திலும் தேசாந்தரத்திலும் நேருவதொரு பேற்றைத் துப்புவேனோ வென்கிறாள்.

க்ஷாமகாலத்திலே சோறு சோறு என்று கதறும் ப்ரஜைகளைப்போலே “எமக்குவகுத்த விஷயத்தைக்காட்டு, எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு“ என்று நெருக்குகின்ற இம்முலைகளின்  பசிதீரும்படி இந்தப்பிறவியிலே இத்தஸரீரத்தோடே கோபாலக்ருஷ்ணனுக்குக் கைங்கர்யம்பண்ணாமல் வேறொரு பரபுருஷனுக்கு பண்ணுவதொரு கைங்கரியமுண்டோ? என்கிறாள் முன்னடிகளில்.

‘அம்மா! இப்படிஞ் சொல்ல்லாமோ? கண்ணபிரானுடைய அநுபவம் உனக்கு எளிதாயிருந்ததோ? அவன்தான் மிறுக்குப்பண்ணுகிறானே, துர்லபத்தில் ஆசைவைத்துக் தளர்வதனால் பயனென்? என்று உற்றார் சொல்ல, அதன்மேல் தன்னுடைய அத்யவஸாயத்தின் உறுதியை உரைக்கின்றாள் பின்னடிகளில். கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக்கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற என்விருப்பத்தின்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று, அப்படி அணைத்து கொள்ளத்திருவுள்ளமில்லையாகில், உன்னைக்கைவிட்டேன், நீ போ“ என்று வாய்திறந்தொன்று சொல்லிவிடட்டும், அஃது எனக்குமிகவுமு ப்ரியம் -என்கிறாள். அவனுடைய ஸம்ஸ்லேஷத்தையே அல்லும்பகலம் வாய் வெருவிக்கொண்டு கிடக்கின்றவிவள் “விடைதான் திருமேல் மிகநன்றே“ என்று சொல்லுகைக்கு கருத்து யாதெனில், உன்னைக் கை விட்டேனெறு சொல்லுகிற வார்த்தையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில், அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும், கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் கவர்ந்துகொள்ளலாமென்று நினைத்துச் சொல்லுகிறபடி. “பாவிநீயென்றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே“ (திருவாய்மொழி சஎந) என்றதோடு ஒக்குமிது. எம்பெருமான் சொல்லுகிறவார்த்தை எதுவாயிருந்தாலும் அதில் நிர்ப்பந்தமில்லை, கண்முன்னே வந்து தோற்றிச் சொல்லவேணு மென்பதொன்றிலேயாய்த்து நிர்ப்பந்தமுள்ளது ஆழ்வார், “பாவியேன் காணவந்தே -சொல்லாய்“ என்றார், இவளும் “முகம்நோக்கி” என்கிறாள்.

“இப்பாட்டில் சேர்த்தானேலும் என்ற பதத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியமானமருளிச்செய்யுமிடத்து, சேர்த்தானேலும் - அம்மார்வோடேசேர்த்து அணைக்கையாத்துப் பேறாவது, அதுசெய்திலனேயாகிலும்“ என்றருளிச் செய்திருப்பதுகொண்டு சிலர் “சேர்க்கானேலும்“ என்று திருத்துவர்கள், வியாக்கியானத்தில் எதிர்மறைப்பொருள் கூறப்பட்டிருத்தலால் அது சேர்த்தானேலும் என்ற பாடத்திற்கு பொருந்தாதென்று அவர்களுடைய கருத்துப்போலும். அத்திருத்தம் பொருத்தமுடைத்தன்று, வியாக்கியான விரோதம் யாதுமில்லை காண்மின் “அம்மார்வோடே சேர்த்தணைக்கை யாய்த்துப் பேறாவது“ என்றவளவே சேர்த்தானேலு மென்பதற்கான தாத்பர்யாத்தம். “அது செய்திலனேயாகிலும்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி மேலுக்கு அவதாரிகை போன்றதாம். இப்பாட்டில் பின்னடிகள் ஒரே வாக்யார்த்தம்போல் தோற்றுமாறு இருந்தாலும் இரண்டு வாக்யார்த்தமாகப் பிரித்து வ்யக்தமாக வ்யாக்யானித்து அருளியிருக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை, “சேர்த்தானேல் நன்றி. விடைதான் தருமேல் மிகநன்று“ என்று யோஜனையைக் காட்டி “தன் மார்வென்று அணையும்படி ஸம்ஸ்லேஷதிப்பித்தானாகில் அழகிது, நீ வேண்டா வென்று முகத்தைப்பார்த்து அநுமதிபண்ணிவிடுமாகில் நன்றி.“ என்று பொருளையுமு விளங்கக்காட்டியருளினர்.

மெய்மை சொல்லி விடை தருகையாவது - இவளுடைய பாவபந்தத்தைப் பரீக்ஷிப்பதற்காக வெறுமன் விடைதருகையன்றிக்கே, ஸத்யமாகவே இவளை கைவிடவேணுமென்று நெஞ்சார நிஷ்கர்ஷித்துக் கைவிடுதலாம். (முன்னடியில்) “முலைகளிடர்தீர“ என்ற சொல்நலத்தால் விளங்கும். ஸ்வாபதேஸத்தில் முலை என்பது பக்தியையிறே. தவம் - தவஸ்.

 

English Translation

If I cannot, in this life, serve my Govinda and satisfy my swollen breasts, what great purpose awaits me in the life hereafter? Good if he will brace me to his beautiful chest now. Or else let him face and answer me one day.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain