(632)

நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்

கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு

புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே

 

பதவுரை

கடைஒன்று இல்லா உலகத்து

-

(ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ்வுலகத்தில்

கந்தகோபன் மகன் என்னும்

-

ஸ்ரீகந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்

குளப்புக்கூறு கொளப்பட்டு

-

மிகவும் துன்பப்படுத்தப்பட்டு

புடை பெயரவும் கில்லேன்

-

அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தையாயிரா நின்றேன் (ஆனபின்பு,)

போட்கன்

-

சுணைகேடனான அக்கண்ணபிரான்

கொடி

-

இரக்கமற்றவனாய்

கடிய

-

ஸ்வார்த்தபரனான

திருமாலால்

-

ச்ரிய, பதியாலே (கண்ணாலே)

நான்

-

அபலையான நான்

மிதித்த அடிப்பாட்டில்

-

திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான

பொடி தான்

-

ஸ்ரீபாத்தூளியையாவது

கொணர்ந்து

-

கொண்டுவந்து

யோகா உயிர் என் உடம்பை பூசீர்கள்

-

வீட்டுப் பிரியாதவுயிரையுடைய என் உடம்பிலே பூசுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏற்கனவே உலகத்தல் மரியாதையெல்லாம் சீர்குலைந்து கிடக்கின்றன. அதுக்குமேல் ஒன்றுபத்தாய்ச் சீர்குலையும்படி ஈந்தகோபன் மகனென்கிற ஒரு மஹாநுபாவன் வந்து தோன்றினான். பரமஸாதுவான நந்தகோபனுக்கு இந்தக் கொடியவன் எங்ஙனே பிள்ளையாகப் பிறந்தானோ அறியேன், அவனால் மிகவும் துன்பப்படுத்தப்பட்ட நான் புடைபெயரவும் ஒண்ணாதபடி துவண்டுபோனேன், இந்ததுவட்சி தீருவதற்கு மருந்துயாதெனில், அந்தச் சுணைகேடன் நடந்து சென்ற நிலத்திலுள்ள பொடியைக் கொணர்ந்து என்னுடம்பிலே பூசப்பாருங்கள் அதுவே உற்றமருந்தாகும் என்கிறாள்.

கொடியகடிய திருமால் -கொடுமையாவது பிறரை வருந்தச் செய்கையாகிற க்ரூரத்தனம், கடுமையாவது தன் காரியத்தை மாத்திரம் விரைந்து முடித்துக்கொள்ளுகையாகிற ஸ்வகார்யபரத்வம், (“கடியன் கொடியன் நெடியமால்“ அநுஸந்திப்பது - இக்கொடுமைகடுமைளெல்லாம் இவனால் அவளிடத்திலிருந்து தான் கற்றுக்கொள்ளப்பட்டனவென்று அவளையும் சேர்த்து வெறுக்கின்றமையைக் கொட்டுமென்ப, “இழவேயாய்ப்போருகிற ப்ரகரண மாகையாலே பேற்றுக்குப் பரிகரமாகச் சொல்ல்லாமவற்றையெல்லாம் இழவுக்குப் பரிகரமாகச் சொல்லுகிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்திகாண்க.

குளப்புக்கூறுகொளப்பட்டு - அடிப்பட்ட இடத்திலே மேன்மேலும் அடிபடுதல் குளப்புக்கூறுகொள்ளுகலாம், (குளம்புகூறு, குளப்புக்கூறு) கால் நடைகளின் குளம்புகள் எப்போதும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலால் அதுபோல் மேன்மேலும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலைக் குளப்புக்கூறு கொள்ளுதலாகக் கூறுவர், கூறு என்னுஞ் சொல்லுக்குள்ள பலபொருள்களில் “தன்மை“ என்ற பொருள் இங்கே கொள்ளத்தக்கது, “குளம்பின் தன்மையை உடையேனாகி“ என்று ஸப்தார்த்தமாய், “துகையுண்டவிடத்திலேயே மேன்மேலும் துகையுண்டு“ என்று தாத்பர்யாத்தமாகக்கடவது.

புடைபெயர்தல் - பக்கங்களில் அசைதல், நோவின்கனத்தினால் அசையவும் மாட்டாதிருக்கின்றே னென்கிறாள் “படையும்பெயரகில்லேன்“ என்று அடிப்பாட்டில் பொடி - திருவடிபட்டவிடத்திலுண்டான துகள் என்றபடி அடிப்பாடு எனறு வழிக்குப்பெயர். அவனுடையதிருமேனியில் ஸாக்ஷாத் ஸம்பந்தம்டிபற்றவஸ்துவே வேணுமென்றகிற நீர்ப்பந்தமல்லை, பரம்பராஸம்பந்தம் டிபற்ற வஸ்துவாயிருந்தாலும் உத்தேஸ்யமேயாம் என்று இதனால் தெரிவித்தவாறு.

போகாவுயிரென்னுடம்பு - எத்தனை விஷங்களை வாங்கித் தின்றாலும், எத்தனை கத்திகளையெடுத்துக் குத்திக்கொண்டாலும் இந்தப்பாழும் உயிர் என் உடம்பையிட்டுப் போகமாட்டேனென்கிறதேயென்று மிக்க வருத்தந் தோற்றங் கூறுகின்றபடி பாரீர். போகாவுயீர் - போகாதவுயிரையுடைய, என்று பொருள் படுதலால் அன்மொழித் தொகை வடமொழிநடை.

 

English Translation

The self-willed Lord Tirumal was born in a lawless world, as the undisciplined unscrupulous lad of Nandagopala. Brutally kicking me over my injuries he has crippled me. Plaster me with the mud trodden by the rascal and save me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain