(631)

அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்

தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே

 

பதவுரை

அழகிலும்

-

அமுதாலும்

தொழிலும்

-

தொலுதாலும்

உரு காட்டன்

-

தன் வடிவைக் காட்டாதவனாயும்

அஞ்சேல் என்னானவன்

-

(உருவைக் காட்டாவிடினும் “அஞ்செல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள

ஒருவன்

-

ஒருமஹாநுபாவன் (கண்ணன்

புகுந்து

-

இங்கே வந்து

என்னை தழுவி முழுசி

-

என்னை நெருக்கியணைத்து

சுற்றி சுழன்று

-

முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து

போகான்

-

போகாமலிருக்கான்

ஆல்!

-

இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநு பவமாத்ரமான உருவெளிப்பாடாகையாலே துக்கம்

தழையின் பொழில் வாய்

-

பீலிக் குடைகளாகிற சோலையின்கீழே

நிரை பின்னே

-

பசுக்கூட்டங்களின் பின்புறத்திலே

நெடு மால்

-

வ்யாமுத்தனான கண்ணபிரான்

ஊதி வருகின்ற

-

ஊதிக்கொண்டு வரப்பெற்ற

குழலின் துளைவாய்

-

புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற

நீர்கொண்டு

-

நீரைக் கொணர்ந்து

முகத்து

-

என்னுடைய முகத்திலே

குளிர தடவீர்

-

குளிர்த்தியாகத் தடவுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அப்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்றும் அவன் சோதிவாயாலே அபயப்ரதாநம் அருளப்பெறவேணுமென்றும் ஆசை கரைபுரண்டு அதற்காகச் சிறுபயல்கள் செய்யும் உபாயத்தையுஞ் செய்வேன், மேலையார் செய்யுமுபாயத்தையும் செய்வேன், (அதாவது -கண்ணீரைப் பெருகவிட்டு அழுவேன், ப்ரஹ் நேரிலேவந்து திருவுருவைக்காட்டுவதுமில்லை, ஆகாஸ வாணிசொல்லுமாபோலே அஸரீரியாகவாகிலும் நின்று “அஞ்சேல்“ (பயப்படாதே, நானிருக்கிறேன்) என்றொரு வார்த்தை சொல்வதுமில்லை, இப்படி ஸர்வாத்மநா உபேக்ஷைபண்ணிக் கிடக்கிற அவனை மறந்தாகிலும் ஒருவாறு ஆறியிருப்போமென்று பார்த்தாலோ, அப்படியுமிருக்க வொண்ணாதபடி உருவெளிப்பாட்டாலே ஹிம்ஸிக்கின்றானே!, (உருவெளிப்பாடாவது -மெய்யாகவந்து ஸம்ஸ்லே ஷம்கொடாமல் மாநஸாநுபவ மார்ரத்துக்கு விஷயமாம்படி தனது எல்லா அவயவங்களையும் அருகே உலவச் செய்தல், இத்தகைய அநுபவம் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியில், எங்ஙனேயே வன்னைமீர்காள்!“ -“ஏழையராவியுண்ணும்“ என்ற இரண்டு திருவாய்மொழிகளில் நிகழ்ந்தமை அறியத்தக்கது.

இந்தஹிம்ஸைக்குப் பரிஹாரமுறைவுறுவன பின்னடிகள். பெரியாழ்வார் திருமொழியில் “தழைகளுந் தொங்கலுந் ததும்பியெங்கும் தண்ணுமையெக்கம் மத்தளிதாழ்பீலிக், குழல்களுங் கீதமுமாகி யெங்குங் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு“ என்றுதொடங்கிப் பத்துப்பாட்டாலும் விஸ்த்ர்ரரமாக அருளிச்செய்தபடியே) பசுக்களின் பின்னே பரமபோக்யமாக எழுந்தருளாநின்ற கண்ணபிரான் குழலூதிக்கொண்டே வருவனே, அக்குழலின் துளைகளிலே அவனது துசோதிவாயின் அழுதப்புனல் நிரம்பிக்கிடக்குமே அந்த நீரைக் கொண்டுவந்து, குளிர்த்தியுண்டாம்படி என்முகத்திலே தடவுங்களென்கிறாள். “குழலிருண்டு சுருண்டேறியகுஞ்சிக் கோவிந்தனுடைய கோமளவாயில், குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த வமுதப்புனல் தன்னை“ விரும்புகிறாளாய்த்து வேய்ங்குழலை வாயில்வைத்து ஊதும்போது வாயைக்கொப்பளித்தால், உமிழ்நீர் குழலின் துளைவழியாக வெளிவருமென்க.

அழிலுந்தொழிலும் என்றவிடத்து வியாக்கியானத்திலே -“பக்திப்ரபத்திகளிரண்டுக்கும் வாசியறுத்தான்“ என்றருளிச்செய்வர். பெரியவாச்சான் பிள்ளை. அழுகையாவது காயக்லேஸரூபமாகையாலே தாத்ருஸமானபக்தியைச் சொன்னபடி, தொழுகையென்று ப்ரபத்தியைச் சொன்னபடி “***“ (த்ரௌபத்யா ஸஹிதாஸ்ஸர்வே நமஸ்சக்ருர்ஜநார்த்தநம்) என்றவிடத்து நமஸ்காரமாவது ப்ரபத்தி -என்றதிறே.

அவனொருவன் என்கிறாள் - பேரையிட்டுச் சொல்லவும் வெறுப்புமிக்கது போலும் ஹிமஸையின் கொடுமை தோற்றும் இதனால்.

 

English Translation

I weep and pray; the fellow does not even show his face to say, “Fear not”, nor ever comes to caress, embrace, roll and leave. Grazing cows in the dense forest, he plays his flute endlessly. Go bring the trickle from its hole and wipe the fever from my brow.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain