(630)

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்

காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை

ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே

 

பதவுரை

ஆயர்பாடி

-

திருவாய்ப்பாடி முழுவதையும்

கவர்ந்து உண்ணும்

-

கொள்ளைகொண்டு அநுபவிக்கிற

கார் ஏறு

-

ஒரு கறுத்தகாளை போன்ற கண்ணன்

உழக்க

-

ஹிம்ஸிக்க

உழக்குண்டு

-

(அதனால்) துன்பப்பட்டு

தளர்ந்தும் முறிந்தும்கிடப்பேனை

-

பலவகையான் சைதில்யங்களையடைந்து நொந்துகிடக்கிற என்னை

உலகத்து

-

இவ்வுலகத்திலே

ஆற்றுவர்

-

தேறுதல்சொல்லி ஆறச்செய்பவர்

ஆரே

-

ஆருண்டு (யாருமில்லை) (“நாங்களிருக்கிறோமே, அம்மா! உனக்கு என்ன செய்யவேணும் என்று தாய்மார் கேட்க

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராமபிரானிடத்து ஆசைப்பட்டோமாகில் “***“ (பஹவோ! கல்யாணகுணா, புதுரஸ்ய ஸந்திதே) என்படி அவன் குணங்கடலாகையாலே அந்த்தருணங்களை நம்பியநுஸந்தாநஞ்செய்து கொண்டு ஒருவாறு தத்தத்திருங்கள் (பிராட்டி தரித்திரதார்போல்) க்ருஷ்ணலுடையதீபில் வுண்பட்டவர்கள் அப்படித்தரித்திருதாற்போ)க்ருஷண்னஐடய தீம்பீலே புண்பட்டவர்கள் அப்படித் தரித்திருக்க முடியமோ? திருவாய்ப்பாடியிலுள்ள அஞசுலக்ஷங்குடிற் பெண்களளவிலே செய்யவேண்டிய தீபுகளையெல்லாம் அவன் ஒருமடைசெய்து.“ என்னொருத்தியளவிலே செய்யாநின்றான்நான் எப்படி பிழைக்கமுடியும்? அம்புபட்ட புண்வாயை மருந்திட்டு ஆற்றலாம் அவனது தீம்புகட்கு விஷயமாகித் தளர்ந்தும் முறிந்துவிடக்கிடக்கின்ற என்னை இவ்வுலகத்தில் ஆறுவாருண்டா? என்று சொல்லிக்கொண்டே இளைத்து வீழ்த்து நெடும்போது ஷம்ஜஞையிற்க்கிடந்தாள் ஆண்டாள். அவ்வளவிலே நிதானமறிந்த, சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாமென்றெனண்ணி ஆராமுவது இத்யாதீகளான பசுவந்நாமங்களைச் செவிப்படவுரைக்க அதுகேட்டவாறே தெளிந்தெழுந்து பின்னடிகளருளிச் செய்கின்றாள்.

அமுதத்திலேயுண்டான ஓரமுதத்தைக் கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்துபோவதற்குமுன்னே என்னைப் பானம் பண்ணுவித்து என்னுடைய இளைப்பை நீக்கப்பாருங்களென்கிறாள்.

 

English Translation

A black bull called Krishna has run amuck in Ayppadi; I lie gored and mauled by him, hopelessly beyond repair. Go bring the ambrosial spittle from his sweet lips, my insatiable delight, and help me lap it before it dries; that alone can save my life.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain