(596)

சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது

வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற

சுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த

செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே

 

பதவுரை

சந்தொடு

-

சந்தனக்கட்டைகளையம்

கார் அகிலும்

-

காரகிற்கட்டைகளையும்

சுமந்து

-

அடித்துக்கொண்டு

தடங்கள் பொருது வந்து

-

பலபலகுளங்களையுமு அழித்துக் கொண்டுஓடிவந்து

இழியும்

-

பெருகுகின்ற

சிலம்பாறு உடை

-

நூபுர கங்கையையுடைத்தான

மாலிருஞ் சோலைநின்ற சுந்தரனை

-

திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கிற அழகரைக்குறித்து

சுரும்பு ஆர் குழல்கோதை

-

வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடையளர்ன ஆண்டாள்

தொகுத்து உரைத்த

-

அழகாக அருளிச்செய்த

செம் தமிழ் பத்தும் வல்லால்

-

செந்தமிழிலாகிய இப்பத் துப்பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்

திருமால் அடி

-

ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளே

சேர்வர்கள்

-

அடையப்பெறுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைகட்டுகிறாள் பிறந்தகத்தில் நின்றும் புக்கத்துக்குப் போம் பெண்கள் வேண்டிய தனங்களைக் கொண்டுபோமாபோலே சந்தனமரங்களையும் காரகில் மரங்களையும் வேரோடே பறித்து இழுத்துக்கொண்டு, வழியிடையே உள்ள பலபல தடாகங்களையும் அழித்துக்கொண்டு பெருவேகமாக வந்து ப்ரவஹியா நின்ற சிலம்பாற்றையுடைய திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர் விஷயமாகச் சுரும்பார் குழற்கோதை யருளிச்செய்த இப்பத்துப் பாட்டையும் ஓதவல்லவர்கள் தன்னைப் போலே வருந்தாமல் ஸுகமாகத் திருமாலின் திருவடித்தாமரைகளை யணுகி நித்ய கைங்கரிய ஸம்பத்துடனே வாழப்பெறுவர்கள் - என்றாளாய்ந்து.

சந்து - ‘சந்தனம்‘ என்ற வடசொற் சிதைவு. தடங்கள்பொருது - தடம் என்று கரைக்கும் பெயராகையாலே, இருகரையையும் அழித்துக்கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. “ஒருமத்த கஜம் கரைபொருதுவருமா போலே“ என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.

சிலம்பாறு - நூபுரகங்கையென்று வடமொழிப்பெயர்பெறும், திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே ஸத்யலோகத்திற்சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமான் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அத்திருவடிச் சிலம்பில்நின்று தோன்றியதனால் சிலம்பாறு என்று பெயராயிற்று, நூபுரகங்கை என்ற வடமொழித்திருநாம்மும் இதுபற்றியதே. நூபுரம் - சிலம்பு; ஒருவகைக் காலணி.

இனி இதற்கு ரஸோக்தியாக ஒரு பொருள்கூறலாம்; அதாவது - ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில், “வகுள தரஸரஸ்வதீ விஷக்தஸ்வரரஸபாவயுதாஸு கிந்நரீஷு - த்ரவதி த்ருஷதபி ப்ரஸக்தகாநாஸ்விஹ வநஸைதழுஷு ஸுந்தரஸ்ய“ என்ற ருசிசெய்தபடி * மரங்களாமிரங்கும் வகை மணிவண்ணவோ வென்றுகூவின ஆழ்வார் பாசுரங்களைக் கின்னரிகள் பாட, அப்பாடலைக் கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால் சிலம்பாறென்று பெயராயிற்று, சிலம்பு - குன்றுக்கும் பெயர்; “சிலம்பொலிஞெகிழி குன்றாம்“ என்பது சூளாமணி நிகண்டு இப்பொருளை ரஸோக்திபாகவே கொள்க.

சுரும்பார்குழற்கோதை - தேன்நிறைந்த மலர்களையணிந்த குழல்முடியையுடைய ஆண்டாள் என்றபடி. ஒருகுழற்கற்றையாலே எம்பெருமானை மயக்கவல்ல வீறுடையளான இவள் தான் இப்படி மயங்கிவருந்தின்னே! என்று நாம் ஈடுபடுவதற்காகச் “சுரும்பார்குழல்“ என்ற அடைமொழி இட்டுக்கொண்டாளென்க. கோதை - “***“ ஸ்ரீஸூக்திகளைத் தந்தவள்.

தொகுத்து உரைத்த - தொகுத்தல் - ஒழுங்குபடுத்துதல், திரட்டுதலுமாம். அப்பொருளில் எம்பெருமானுடைய கல்யாணகுணங்களைத் திரட்டிப்பாசுரமாக்கி அருளிச்செய்த என்கை. இத்திருமொழியில் எம்பெருமானுடைய கல்யாணகுணம் விளங்கும்வகை என்? அவன் இவளை இப்படித் துடிக்கவிட்டான் என்கிற பழிப்பு இத்திருமொழியில் விளங்குமேயன்றி அவனது கல்யாணகும் விளங்குமோவெனில், ஸம்ஸாரத் தொல்லைகளில் ஈடுபடுத்தி வருந்தச்செய்யாமல் தன்திறத்தில் ஈடுபடுத்தி வருந்தச்செய்வதைக் கல்யாணகுணங்களிற் சிறந்ததாகக் கொள்ள வேண்டாவோ? “வேதாக்ஷராணி யாவந்தி - படிதாநி த்விஜாதிபி - தாவந்தி ஹரி நாமாநி கீர்த்திதாதி நஸம்ஸய“ என்றபடி வேதத்தில் ஒவ்வோரெழுத்தும் பகவந்நாமமாவதுபோல, அருளிச்செயலில் ஒவ்வோரெழுத்தும் பகவத்குணகர்ப்பிதம் எனக் கொள்க.

 

English Translation

These decad of pure Tamil verses by bee-humming flower-coiffured Goda, on the Lord residing in Malirumsolai amid lakes, where the raging Nupura Ganga washes Sandal and Rosewood, --those who can sing it will surely attain the feet of Tirumal.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain