(593)

இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

 

பதவுரை

தென்றல்

-

தென்றல் காற்றானது

மணம் கமழும்

-

மணத்தைக் கொண்டு வீசுகின்ற

திரு மாலிருஞ் சோலைதன்னுள்

-

திருமாலிருஞ்சோலை மலையிலே

நின்ற

-

எழுந்தருளியிருக்கிற

பிரான்

-

ஸ்வாமியான அழகர்

இன்று

-

இன்றைக்கு

வந்து

-

இவ்விடமெழுந்தருளி

இத்தனையும்

-

நூறு தடாநிறைந்த வெண்ணெயையும் அக்காரவடிசிலையும்

அமுதுசெய் திட பெறில்

-

அமுது செய்தருளப்பெற்றால் (அவ்வளவுமன்றி)

அடியேன்மனத்தேவந்து நேர்படில்

-

அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்யவாஸம் பண்ணப்பெற்றால்

நான்

-

அடியேன்

ஒன்று

-

ஒரு தடாவுக்கு

நூறு ஆயிரம் ஆ கொடுத்து

-

நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து

பின்னும்

-

அதற்கு மேலும்

ஆளும் செய்வன்

-

ஸகலவித கைங்கரியங்களும் பண்ணுவேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?“ என்று (கீழ்ப்பாட்டில் மநோரதித்தபடியே திருமாலிருஞ்சோலை யெம்பெருமான் இன்று இவ்விடமெழுந்தருளி, அடியேன் (வாவா) வாசா ஸமர்ப்பித்த நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்காரவடிசிலையும் அமுதுசெய்தருள்வனாகில் இந்த மஹோபகாரத்துக்குக் கைம்மாறாக அடியேன் இன்னும் நூறாயிரம் தடாநிறைந்த வெண்ணெயும் அக்காரவடிசிலும் ஸமர்ப்பிப்பேன்; அவ்வெம்பெருமான் இங்கெழுந்தருளி இவற்றை அமுது செய்துவிட்டு மீண்டு போய்விடாமல் என் ஹ்ருதயத்திலேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாக இருந்துவிடும் பக்ஷத்தில் “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்“ என்று பெரியார் மநோரதித்த கைங்கரியங்கள் எல்லாவற்றையும் குறையறச் செய்திடுவேன் என்கிறாள்.

“தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக கொடுப்பேன், அடியேன் மனத்தே வந்து நேர்படில் பின்னுமாளுஞ் செய்வேன்“ என்று யோஜிப்பது.

ஒன்றுநூறாயிரமாகக் கொடுத்தலாவது - தான் ஸமர்ப்பித்த தடாக்களில் ஒரு தடாவை அமுது செய்தால் அதற்குக் கைம்மறாறாகப் பின்னும் நூறாயிரம் (லக்ஷம்) தடா ஸமர்ப்பித்தல். இப்படியே பார்த்துக்கொள்க. இதனால், ஆண்டாள் தனது பாரிப்பின் மிகுதியை வெளியிட்டபடி.

“இன்று உவந்து“ என்றும் பிரிக்கலாமென்ப.

 

English Translation

If he comes to accept my offering today, I shall render it a hundred-thousand-fold, and then serve him as well. Ah, but the Lord lives in groves of wafting fragrance; would he come to reside in my lowly heart?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain