(592)

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

 

பதவுரை

நறு பொழில் நாறும்

-

பரிமளம் மிகுந்த பொழில்கள்மணங்கமழா நிற்கப்பெற்ற

மாலிருஞ் சோலை

-

திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற)

நம்பிக்கு

-

எம்பெருமானுக்கு

நான்

-

அடியேன்

நூறு தடாவில்

-

நூறு தடாக்களில் நிறைந்த

வெண்ணெய்

-

வெண்ணெயை

வாய் நேர்ந்து

-

வாயாலே சொல்லி

பராவி வைத்தேன்

-

ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)

நூறு தடா நிறைந்த

-

நூறு தடாக்களில் நிறைந்த

அக்கார அடிசில்

-

அக்காரவடிசிலும்

சொன்னேன்

-

வாசிகமாக ஸமர்ப்பித்தேன்

இவை

-

இந்த வெண்ணெயையும் அக்காரவடிசிலையும்

ஏறு திரு உடையான்

-

(நாட்செல்லநாட்செல்ல) ஏறிவருகிற ஸம்பத்தையுடையரான அழகர்

இன்று வந்து

-

இன்று எழுந்தருளி

கொள்ளும் கொல்

-

திருவுள்ளம்பற்றுவரோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டும் மேற்பாட்டும் இத்திருமொழியில் விலக்ஷணமாக அமைந்த பாசுரங்கள். கீழ்ச்சென்ற பாசுரங்களின் ஸைலியும் மேல்வரும் பாசுரங்களின் தீயமான அமைந்திருக்கிறபடியைக் காண்மின். கீழ்பாட்டில் “எனக்கோர் சரண் சாற்றுமினே“ என்றவாறே தளர்ந்து த்வயாநுஸந்தானம் பண்ணினாள், உத்தரகண்டத்தை நன்றாக அநுஸந்தித்தாள், அதற்கு அர்த்தாதகிய கைங்கரிய ப்ரார்த்தனையிலே ஊன்றினாள், காயிகமான கைங்கரிய மென்றும் செய்யமுடியாதபடி தளர்ந்திருக்கும் தஸையாகையாலே வாசிகமான கைங்கரியம்செய்ய விரும்பினாள். அது செய்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில், இப்பாட்டுக்கு ஸேஷபூதம் மேற்பாட்டு.

மணங்கமழாநின்ற சோலைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையில் அவாப்த ஸமஸ்தகாமனாய் எழுந்தருளியிருக்கும் எம்பிரானுக்கு அடியேன் நூறுதடா நிறைந்த வெண்ணெயும் நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் வாசிகவுள்ளம் பற்றுவனா? என்கிறாள்.

எம்பெருமானார், நாய்ச்சியார் திருமொழி காலக்ஷேபம் ப்ரஸாதித்தருளும்போது இப்பாட்டளவிலே வந்தவாறே “ஆண்டாளுடைய மநோரதம் வாசிகமாத்ரமாகப் போச்சுதே யொழிய, கார்யபர்யவஸாயியாகவில்லை, அதனை நாம் தலைக்கட்டவேணும்“ என்று அப்போதே புறப்பட்டுத் திருமாலிருஞ்சோலைமலைக்கு எழுந்தருளி * நூறுதடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளி அப்படியே ஸ்ரீவில்லிபுதுதூரேற வெழுந்தருளி ஆண்டாளை அடிவணங்கி நிற்க, தன் நினைவறிந்து இவர்செய்த காரியத்துக்கு மனமுகந்து “நம் அண்ணரே!“ என்று சொல்லி இதுபற்றியே “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள்வழியே“ என்று ஆண்டாள் வாழ்த்தப்படுவதும்.

“அந்யத் பூர்ணாதபாம் கும்பாத் அந்யத் பதாவ்நேஜநாத் - அந்யத் குஸலஸம் ப்ரஸ்நாத் நசேச்சதி ஜநார்தந்“ என்கிறபடியே ஒரு பூர்ணகும்பத்துக்கு மேற்பட் அதிகப்படியானவற்றை விரும்பாத எம்பெருமான விஷயத்திலே நூறு தடாநிறைந்த வெண்ணெயும் நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் ஸமர்ப்பிக்க வேண்டுவானேன்? -என்று நஞ்ஜீயா ஸந்நிதியிலே நம்பிள்ளைகேட்க; “திரு வாய்ப்பாடியிற் செல்வத்துக்கு இதெல்லாம் கூடினாலும் ஒரு பூர்ண கும்பத்துக்குப் போராதுகாணும்“ என்று ஜீயர் அருளிச்செய்தாராம்.

தடா - பானை, பராவுதல் - வணங்குதல், துதித்துல்  பரப்புதல், ஏறுதிருவுடையான் - “***“ என்று மொழிபெயர்த்தார் கூரத்தாழ்வான் ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவத்தில்.

இன்றுவந்து இவை கொள்ளுங் கொலோ? - “இது ஒரு வாங்மாத்ரமேயாய்ப் போகாமே இத்தை அநுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீகரிக்கவல்லானோ?; அத்ரிபகவானா ஸரமத்திலே ஸாயம்ஸமத்திலே சென்று ‘நான் ராமன், இவள் மைதிலி இவன் லக்ஷ்மணன்.‘ என்று நின்றாப்போலே வந்து நின்று இவற்றை ஸ்வீகரிக்கவல்லனோ?“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கத்தக்கது.

 

English Translation

To the Lord of Malirumsolai surrounded by fragrant groves, I give my word to offer a hundred pots of buffer today, and a hundred pots of sweet morsel filled to the brim. Will the Lord of growing affluence deign to accept them?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain