(588)

போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்

தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற

கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்

ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே

 

பதவுரை

போர் களிறு

-

போர் செய்வதையே தொழிலாகவுடைய யானைகள்

பொரும்

-

பொருது விளையாடுமிடமான

மாலிருஞ் சோலை

-

திருமாலிருஞ் சோலை மலையினுடைய

அம்பூ புறவில்

-

மிகவுமழகிய தாழ்வரைகளிலே

தார் கொடி முல்லைகளும்

-

அரும்புகளையுடைய கொடி முல்லைகளும்

தவளம் நகை

-

(அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை

காட்டுகின்ற

-

நினைப்பூட்டா நின்றன, (அன்றியும்)

கார் கொள்

-

சினைகொண்ட

படாக்கள்

-

படா என்னுங் கொடிகள்

நின்று

-

பூத்து நின்று

கழறி சிரிக்க

-

‘எமக்கு நீ தப்பிப்பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக்கொண்டே சிரிப்பது போல விகஸிக்க

தரியேன்

-

(அதுகண்டு) தரிக்கமாட்டுகின்றிலேன்

தோழீ

-

எனது உயிர்த்தோழியே!

அவன் தார்

-

(நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது

செய்த

-

உண்டுபண்ணின

பூசலை

-

பரிபவத்தை

ஆர்க்கு இடுகோ

-

யாரிடத்து முறையிட்டுக்கொள்வது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யானைகள் கரைபொருது விளையாடா நிற்கப்பெற்ற திருமாலிருஞ்சோலை மலைச்சாரல்களில் அரும்புகொண்டு விளங்குகின்ற கொடி முல்லைகளானவை, அவ்வெம்பெருமான் ஸம்போக ஆரம்ப ஸமயத்திற் பண்ணும் புன்முறுவலை நினைப்பூட்டிக்கொண்டு என்னைத் துன்பப்படுத்தாநின்றன. அதற்குமேலே, படாக்களானவை புஷ்பித்து, ஸம்ஸ்லேஷம் நடந்தேறின பின்பு ஒரு தலையில் வெற்றிக்கு ஈடாகப்பண்ணும் பெருஞ்சிரிப்பை நினைப்பூட்டாநின்றுகொண்டு என்னை உருவழிக்கின்றன. தோழீ! அவ்வெம்பெருமான் திருத்தோளில் சாத்திக் கொண்டிராநின்ற மாலையை ஆசைப்பட்டமையாலன்றோ நான் இப்படிப்பரிபவப்பட நேர்ந்தது! இந்தபரிபவத்தை நான் யாரிடத்திற்சென்று முறையிட்டு ஆறுவேன் என்கிறாள்.

புறவு - சோலைகள் நிரம்பிய ஆராமம். தவளம் - யவனா என்றவடசொல் விகாரம். காட்டுகின்ற - வினைமுற்று. படாக்கள் - பெருங்கொடிகள் கார்க்கொள்ளுகை - அழகுகொண்டிருக்கையுமாம்.

 

English Translation

In the rolling groves of Malirumsolai where heavy tuskers play, the winsome smile of the full-blossomed Mullai creeper, and the hearty laugh of the twining Pata flowers are unbearable. Woe to me that I desired his Tulasi garland, O Sister!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain