nalaeram_logo.jpg
(473)

வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித் தன்மனத்தே

கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை

ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்த மமுதத்தினை

சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.

பதவுரை

வேயர் தங்கள்

-

வேயர்களுடைய

குலத்து

-

வம்சத்து

உதித்த

-

அவதரித்த

விட்டு சித்தன்

-

பெரியாழ்வாருடைய

மனத்து

-

ஹ்ருதயத்தில்

கோயில்கொண்ட

-

திருக்கோயில்கொண்டெழுந்தருளியிருக்கிற

கோவலனை

-

கோபாலனும்

கொழு குளிர் முகில் நன்னனை

-

கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தையுடையனும்.

ஆயர் எந்தை

-

இடையர்களுக்குத் தலைவனும்

அமரர் கோவை

-

நித்யஸூரிகளுக்கு நிர்வாஹம்

அந்தநத்தம்

-

சனகர் முதலிய மஹரிஷிகளுக்கு

அமுதத்தினை

-

அம்ருதம்போல் இனியதுமான எம்பெருமானை

பாடவல்லார்தாம்

-

(இத்திருமொழியினால்) பாடவல்லவர்கள்

சாயைப்போல

-

நிழல்போல

அனுக்கர்கள்

-

(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும். ‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத்திருநாமத்தின்பொருள் ஒன்றரையடிகளால் விரிக்கப்பட்டது.

(வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்; “முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச்செய்த திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது.

எம்பெருõமன் இடைக்குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானதுபோல ஆழ்வார் தமக்கும் எளியனானபடியைக் கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார்நெஞ்சிற் புகுந்தபின்பு, விலக்ஷணமானதொரு புகரைப்பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது. கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலையவமை கூறினானென்றுங் கொள்வர். ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளைபோலச் செருக்குற்றிருப்பவன். ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ்பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க. அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப்பொருளுரைத்தனர்; “அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில் “கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல். இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர். “அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது. “நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால், அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும்.

அமுத்திரனே- அத்து, இன் என்ற இரண்டும் சாரியை; ‘அந்தணர்கள் அமுதை’ என்றபடி; உவமையாகுபெயர். சுவையின் மிகுதிபற்றியும் பெறற்கருமைபற்றியும் விபுதகர்கட்கே போக்யமாயிருக்குந் தன்மைபற்றியும், பருகினவர்களை மயக்குந்தன்மை பற்றியும் எம்பெருமானை அமுதமாகக் கூறுதல் ஏற்குமென்க.

ஈற்றடியில் ஒரு ஐதிஹ்யம்- பண்டு எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க, எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக்கேட்டு உங்களுக்குச் சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளையெடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று, “அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம். தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர் என்றவாறு, இனி, ‘சாயைபோல- குளிர்த்தி உண்டாம்படி, பாடவல்லார்தாம் அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர் என்ப, சாயை- ஷாயா பெருமாள்கோயில் பிரதிவாதியங்கரம்

English Translation

Gopala, the dark cloud-hued Lord, the cowherd-chief, the king of celestials, has his temple in the Jeeva of Vishnuchitta, scion of the Veyar clan. These songs in his praise are like Amrutam for the learned. Those who can sing it will become inseparable from eh Lord, like his shadow.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain