nalaeram_logo.jpg
(468)

உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழி யாமல்எல்லாம்

என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்

மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பீ

என்னிடைவந்து எம்பெருமான் இனியெங்குப் போகின்றதே.

பதவுரை

மன்

-

(துஷ்ட) க்ஷத்திரியர்கள்

அடங்க

-

அழியும்படி

மழு

-

மழு என்னும் ஆயுதத்தை

வலம் கை கொண்ட

-

வலக்கையில் ஏந்தியிரா நின்றுள்ள

இராமன்

-

பாசுராமனாய்த் திருவவதரித்த

விராமநம்பீ

-

குணபூர்த்தியை யுடையவனே

உன்னுடைய

-

உன்னுடைய

விக்கிரமம்

-

வீரச் செயல்களில்

ஒன்று ஒழியாமல்

-

ஒன்று தப்பாமல்

எல்லாம்

-

எல்லாவற்றையும்

என்னுடைய

-

என்னுடைய

நெஞ்சகம் பால்

-

நெஞ்சினுள்ளே

சுவர்வழி எழுதிக் கொண்டேன்

-

சுவரில் சித்திரமெழுதுவதுபோல எழுதிக்கொண்டேன்;

எம்பெருமான்

-

எமக்குத் தலைவனே!

என்னிடை வந்து

-

என்பக்கலின் எழுந்தருளி

இனி

-

இனிமேல்

போகின்றது

-

போவதானது

எங்கு

-

வேறு எவ்விடத்தைக் குறித்து?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால், அந்த மல்லவதம் முதலிய சிறுச்சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க. “உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக் கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு; கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும்,  மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும் மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க.

விக்கிரம் - வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில் அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி. ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க.

“மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது “இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரியகுல மடங்கலும் பாழ்பட்டவாறு போல, உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து. ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால் இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற  எம்பெருமான் கருதியதாகக் கொண்டு, அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால் “மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கிளிப்போய்ப் பிறரொருவர். என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும். போகின்றது- தொழிற்பெயர். “ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும், அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும், அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது” என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது.

English Translation

Like inscriptions on the temple wall, I have written into my heart, all the valiant deeds of yours without omission. O Lord Rama who wielded the axe to subdue insolent kings! My Master! Having come unto me, now where can you go?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain