nalaeram_logo.jpg
(466)

கடல்கடைந்து அமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்

உடலுருகி வாய்திறந்து மடுத்துஉன்னை நிறைத்துக்கொண்டேன்

கொடுமைசெய்யும் கூற்றமும்என் கோலாடி குறுகப்பெறா

தடவரைத்தோள் சக்கரபாணீ சார்ங்கவிற் சேவகனே.

பதவுரை

தட வரை

-

பெரிய மலைபோன்ற

தோள்

-

தோள்களை யுடையவனும்

சக்கரபாணீ

-

திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுடையனுமானவனே!

சார்ங்கம் வில்

-

சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட

சேவகனே

-

வீரனே!

கடல்

-

திருப்பாற் கடலை

கடைந்து

-

(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து

அமுதம் கொண்டு

-

(அக்கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து

கலசத்தை

-

கலசத்தில்

நிறைந்த ஆ போல்

-

(நீ) நிறைந்ததுபோல

(அடியேன்)

உடல் உருகி

-

உடல் உருகப்பெற்ற

வாய் திறந்து

-

வாயைத் திறந்துகொண்டு

உன்னை

-

(ஆராவமுதாகிய) உன்னை

மடுத்து நிறைந்துக் கொண்டேன்

-

உட்கொண்டு தேக்கிக் கொண்டேன்;

(இனி)

கொடுமை செய்யும்

-

கொடிய தண்டங்களை நடத்துமவனானா

கூற்றமும்

-

யமனும்

என் கோல் ஆயி

-

எனது செங்கோல் செல்லுமிடங்களில்

குறுகப் பெரு

-

அணுகவல்லவனல்லன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக்கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் - தற்சமவடசொல்; பாத்திரமென்று பொருள் - நிறைந்தாப்போல் = நிறைத்த,  ஆ, போல், எனப்பிரியும்; ஆற என்றசொல்: ஆ எனக்குறைந்துகிடக்கிறது; ஆறு - பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச்சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம்.

(உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக்கேடு படாமைக்காக இட்ட கரைபோன்ற சரீரமும் உருகப்பெற்றது. எனவே, இவ்வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது  போதரும். “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால் உடலுருகச் சொல்லவேணுமோ? “ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ்வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க; ‘விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம்.

(கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவேயன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை செல்லுமிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார். ‘கூற்றமும் .........குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ?” எனின்; ‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக்குறையாகக் கொள்க; “கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று). கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் . கோலாடி - ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் - செங்கோல்.

English Translation

Like churning the ocean and filling the pot with ambrosia, I melted out my mouth, drank deep and filled myself with you. O Lord with mountain-like arms, bearing the discus and the bow. Now the evil-intending Yama cannot enter the bounds of my domain.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain