nalaeram_logo.jpg
(464)

பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின்

பிறவியென்னும் கடலும்வற்றிப் பெரும்பத மாகின்றதால்

இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்

அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.

பதவுரை

பறவை ஏறு

-

பெரிய திரவடிமேல் எறுமவனான

பரம்புருடா

-

புருஷோத்தமனே!

நீ

-

(ஸர்வரக்ஷகனான) நீ

என்னை

-

(வேறு கதியற்ற) என்னை

கைக்கொண்ட பின்

-

ஆட்படுத்திக்கொண்ட பிறகு

பிறவி என்னும் கடலும்

-

ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்

வற்றி

-

வறண்டுபோய் (அதனால்)

பெரும் பாதம ஆகின்றது

-

பெரிய தாம் பெற்றதாகிறது;

இறவு செய்யும்

-

(இவ்வாத்துமாவை) முடிக்கிற

பாலக்காடு

-

பாபஸமூஹமானது

தீக் கொளீஇ

-

நெருப்புப்பட்டு

வேகின்றது

-

வெந்திட்டது;

அறிவை என்னும்

-

ஞானமாகிற

அமுதம் ஆறு

-

அம்ருதநதியானது

தலைப்பற்றி வாய்க் கொண்டது

-

மேன்மேலும் பெருகிச் செல்லாநின்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டில், “இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்யவேண்டுவதெல்லாம் செய்து தலைக்கட்டியான பின்பு இனிப்பதறுவானென்? என்றுகேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடுநாளாகப் பற்றிக்கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே; ப்ராப்திக்கு உறுப்பான பரமபக்தி பிறக்கவில்லையே” என்ன;  இவையித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார் - நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு ஸம்ஸாரஸாகரமானது நிச்சேஷமாக வற்றிப்போனமையால், அடியோர் பெருத்தபாக்கியம் பண்ணினேனாகிறேன்; இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாபராசிகளும் தீயினிற்பட்ட தூசுபோல இவையெல்லாம் இங்ஙனொழிந்தமையால் ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு.

எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவதாகப் பெரிய திருவடியின் மேலேறிக்கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார். ‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்கவேணும்; பெரிய பதவியை யான் பெறாநின்றேன் என்றபடி. இன்றளவும் பிறவிக்கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீநபதவியிலிருந்த நான், இன்று அதனை வென்றமையால் உத்தமபதவியைச் சேர்ந்தேன் எனவிரிக்க.

ஆல் இரண்டும் மகிழ்ச்சிக் குறிப்பிடைச்சொல். தீக்கொளீஇ - தீக்கொண்டு; சொல்லிசையளபெடை ? ***- “போயபிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்ற திருப்பாவை இங்கு நினைக்கத்தக்கது. அறிவை என்ற சொல்லில், ஐ -சாரியை. இவ்விடத்தில் அறிவையென்று பரமபக்தியைச் சொல்லுகிறதென்பர். பிறவிக்கடலில் ஆழ்ந்திருந்த நான், அதனை வென்று வெளிக்கிளம்பி நின்றால், ஞானமாகிற ஒரு அழுதவாறு வாயையும் தலையும் சொல்நயத்தாற் போதருமென்க. தலைப்பற்றி வாய்ககொள்ளுதல் -மேல்மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்.

English Translation

O Lord who rides the Garuda bird. After you took me took me into your service the ocean of rebirth has dried up and become sanctified space. The death-trap thickets of karma are burning in a raging fire. Knowledge is flowing like a river of ambrosia, flooding the head and above.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain