nalaeram_logo.jpg
(454)

வளைத்துவைத் தேன்இனிப் போகலொட்டேன்  உந்த னிந்திர ஞாலங்களால்

ஒளித்திடில் நின்திரு வாணைகண் டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை

அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று

தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

பதவுரை

நாடும்

-

நாட்டிலுள்ளாரும்

நகரமும்

-

நகரத்திலுள்ளாரும்

எங்கும்

-

மற்றெங்குமுள்ளவர்களும்

அளித்து

-

நெருங்கி

தம்முடைய

-

தங்கள் தங்களுடைய

தீ வினை

-

துஷ்டகர்மங்களை

தீர்க்கல் உற்று

-

ஒழிப்பத்தில் விருப்புற்று

தெளித்து

-

ஆரவாரித்துக்கொண்டு

வலம் செய்யும்

-

பிரதக்ஷிணம் செய்யப்பெற்ற

தீர்த்தம் உடை தீர்த்தம் விசேஷங்களையுடைய

திருமாலிருஞ்சோலை

-

திருமாலிருஞ்சோலையில்

(எழுந்தருளியிருக்கிற)

எந்தாய்

-

எம்பெருமானே!

வளைத்து வைத்தேன்

-

(உன்னைச்) சூழ்ந்துகொண்டேன்

இனி

-

இனிமேல்

போகல் ஒட்டேன்

-

(நீ வேறிடந்தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்கமாட்டேன்.

உன்தன்

-

உனக்கு உள்ள

இந்திர ஞாலங்களால்

-

மாயச்செய்கையினால் வல்லமையினால்

ஒளித்திடில்

-

(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்

நின் திருஆணை

-

உனது பிராட்டியின்மேலாணை.

(அப்படி ஒளிக்கலாகாது)

நீ

-

நீ

ஒருவர்க்கும்

-

ஒருவரிடத்திலும்

மெய்யன் அல்லை

-

உண்மையான உக்தி அனுஷ்டானங்களையுடையவனல்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - ஏழையாயிருப்பவர் செல்வர் மாளிகைவாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னை விடமாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைத்துக் கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரகூடந்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற்போலவும் நான் உன்னை வளைத்துக்கொண்டேன்; உன்னால் தப்பிப்போக வொண்ணாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்; *** - *** -  யா’ என்ற என் மாயையில் உலகமுழுவதையும் பிணிப்புண்டிருக்கச் செய்யவல்ல யான், உம்முடைய வளைப்பில் நின்றும் என்னைத் தப்பவைத்துக் கொள்ளவல்லேனல்லனோ” என்ன; அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின்மேலாணை; நீ தப்பிப்போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட; எம்பெருமான், “ஆழ்வீர்! இது என் காணும்? ஆணையிடுவதற்கு இப்போது என்ன பிரஸத்தி?” என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! ‘*** -  (அடியார்களை ஒருபடியாலும் கைவிடமாட்டேன்) என்று நீ ஓதிவைத்ததெல்லாம் பொய்யாய்த்தலைக்கட்ட நேரிட்டதே என்று ஆணையிடுகிறேன்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டின் முன்னடி. “என்னெஞ்சத் துள்ளித்திங்கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் வளைத்து வைத்தேன்” என்ற கலியனருளிச்செயல், முதல் அரையடியோடு ஒப்புநோக்கத்தக்கது. இந்த்ரஜாலம்- கண்கட்டுவித்தை. ஒளித்திடில் - நீ மறைந்தாயாகில் என்றபடி. (நின்திருவாணைகண்டாய்.) “மாயஞ்செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை, வாசஞ்செய் பூங்குழலாள், திருவாணை நின்னாணை கண்டாய்” என்ற திருவாய்மொழி அறிக. ஆணையிட்டால் அதை மறுக்கமுடியாதென்று கருத்து. (நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை.) “கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக் கடைக் கணித்தாங்கே ஒருத்திதன்பால், மருவினம்வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒரு பேதைக்குப் பொய்குறித்துப் புரிகுழன்மங்கை யொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை,  மருதிறுத்தாயுன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயைதானே” என்ற பெருமாள் திருமொழியை நினைக்க. அல்லை - முன்னிலையொருமை வினைமுற்று.

பின்னடிகளின் கருத்து: - உலகத்தாரனைவருந் திரண்டு, தம்முடைய பாவங்களையெல்லாம் தொலைத்துக்கொள்ள விரும்பிப் பேராரவாரஞ் செய்துகொண்டு திருமாலிருஞ்சோலையிலுள்ள சிலம்பாறுமுதலிய பல தீர்த்த விசேஷங்களைப் பிரதக்ஷிணம் செய்வதைக் கூறியவாறு. வலஞ்செய்தலைக் கூறியது - மற்றுள்ள வழிபாடுகளுக்கெல்லாம் உபலக்ஷணமென்க. இனி வலஞ்செய்வதற்கு உரியதும், தீர்த்தவிசேஷங்களை யுடையதுமான திருமாலிருஞ்சொலைமலையென்று பொருள் கொள்ளிலுமாம்; அப்பொருளில் “வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை, வலஞ்செய்துநாளும் மருவுதல் வழக்கே” என்ற திருவாய்மொழி நினைக்கத்தக்கது. பின்னடிகளுக்கு வேறுவகையாகவும் பொருளவருளிச் செய்வர் பெரிய வாச்சான்பிள்ளை.

English Translation

O Lord of Tirumalirumsolai, my Master! Cutting asunder the snares, pulling me out of a whirlpool of misery, you have entered my person, I know it. Now will I let you go? Devaki has lost her six children through Kamsa’s cruelty but in a thrice you entered her womb, and were born to her as her child!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain