nalaeram_logo.jpg
(445)

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

வராஹரூபியாய் திருவதரித்தபோது.)

எயிற்றிடை

-

(தனது) கோரப்பல்மேல்

மண்

-

பூமியை

கொண்ட

-

தாங்கியருள

எந்தை

-

எம்பெருமான் (அடியேனுக்கு)

வயிற்றில் தொழுவை

-

வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கையாகிற கர்ப்ப வாணத்தை

பிரித்து

-

கழித்தளியும்

புலம்

-

இந்திரியங்களால்

வல்சேவை

-

கடுயைமான ரிஷபங்களை

அதக்கி

-

(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்

கயிறும்

-

நரம்புகளும்

அக்கு

-

எலும்புகளுமேயாயிருக்கின்ற

ஆணி

-

சரீரத்தில் (ஆசையை)

கழித்து

-

ஒழித்தருளியும்

பாசம்

-

(யமதூதர்களுடைய) பாசங்களை

காலிடை கழற்றி

-

காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,

இரா பகல்

-

இரவும் பகலும்

ஓதுவித்து

-

நல்லறிவைப் போதித்து

பயிற்றி

-

(கற்பித்தவற்றை) அனுஷ்**

பணி செய்ய

-

நித்திய கைங்கர்யம் பண்ணும்படி

என்னை கொண்டான்

-

அடியேனைக் கைக்கொண்டருளினான்;

பண்டு அன்று பட்டினம் காப்பு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “பக்தர்க்கமுதடியேன்” என்று எம்பெருமானுக்கு தம்மை அடிமைப்பட்டவராக அருளிச்செய்து,இப்பாட்டில் அவ்வெம்பெருமான் தம்மை அடிமைகொண்ட ப்ரகாரங்களை அருளிச் செய்கிறார். அவன் செய்தருளின உபகாரபரம்பரைகளைக் கூறுகின்றவாறு. (வயிற்றில் இத்யாதி.) இனி யான் கருவிருத்தக் குழியில் விழாதபடி செய்தருளினான்; அப்படி கர்ப்பவாஸம் நேராøமைக்குடலாக,இந்திரியங்களாகிய காளைகளைப் பட்டிமேய்த்து திரியவொட்டாமல் பாதுகாத்தருளினான்; தீண்டாவழும்புஞ் செந்நீருஞ்சீயும் நரம்புஞ் செறிதரையும் வேண்டாநாற்ற மிருமுடலில் விருப்பமொழியும்படி செய்தருளினான்; இப்படியெல்லாம் அருள் செய்கையினால், யமபடக் கையும் பாசமுமாய் வந்து புகுந்து பாசங்களைக் காலிலே துவக்கி முழங்கீழ்படத்தள்ளி இழுத்து கலிகையாகிற பரலோகஹிம்ஸைகளுக்கும் ஆளாகாதபடி அருளினவாயாயிற்று; இவ்வகை அருள்களைச் செய்தபடி எங்ஙனே எனனில்? இரவும் பகலும் ஓய்வின்றி என் நெஞ்சிற் குடிகொண்டிருந்து ஸ்வரூபஞானத்தைப் பிறப்பித்து, அதன் பிறகு அறிந்தபடியே அனுட்டிக்கும்படியாகவுங் கற்பித்து, அநவரதம் அடியேன் தனது திருவடிகளின் கீழ் அடிமைகளையே செய்து உய்யும்படி செய்தருளினானாதலால் இவ்வகை நன்மைகள் எனக்கு வாய்த்தன என்பதாக விரித்த கருத்தறிக.

குற்றஞ் செய்தவர்களைத் தொழுமரத்தில் அடைப்பதும் விலங்கிடுகையேயாதலாலும், வயிற்றிற்கிடப்பது விலங்கிடுவதைப் போல்லதனாலும், கர்ப்பவாஸத்தை “வயிற்றில் தொழு” என்றனரென்க. இரண்டாமடியில் எதுகை  நயம்நோக்கி “கயிற்றும்” என வலித்துக்கிடக்கிற தென்க. கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். “காலிடைப் பாசங்கழற்றி’ என்பதற்கு நான்குவகையாகப் பொருள் கூறுவர்; அவற்றுள் ஒன்று பதவுரையிற் கூறப்பட்டது. இனி இரண்டாவது பொருள்- கால் என்று காற்றாய், அதனால் பிராண வாயுவைச் சொன்னபடியாய், பாசம் என்று ஆத்துமாவைக் கட்டிக்öகோண்டிருக்கிற ஸூக்ஷம சரீரத்தை சொல்லுகிறதாய், பஞ்சவ்ருத்திப்ராணனாலே ப்ரேரிதமான ஸூக்ஷ்மசரீரத்தில் நகையறுத்தபடி சொல்லுகிறது; எனவே, கீழ் ‘கயிற்றுமக்காணி கழித்து’ என்றது- ஸ்தூலசரீரத்தில் நசையறுத்தபடியைச் சொல்லியவாறாம் ***  என்ற ஸூக்தி இங்கு நினைக்கத்தக்கது. இனி மூன்றாவது பொருள்:- காற்கட்டான புத்ரதாரக்ருஹ க்ஷேத்ராதிகளிலுள்ள பற்றைப் போக்கின்படி சொல்லுகிறது. இனி, நான்காவது பொருள்:- *******  என்றபடி- உலகமுழுவதையும் மயக்கக்கூடியதும் இரண்டு காலினிடையிலுள்ளதுமான ஹேயஸ்தாகத்தின் விருப்பத்தை ஒழித்தபடி சொல்லுகிறது; உலகத்தை மோஹத்தினாற் கட்டுண்டதுபோலச் செய்கின்ற அதனைப் பாசமென்றால் பொருந்தத் தட்டில்லையே.

English Translation

O Ye weak forces of karma! You have finally found a match, just see! Do not enter here, not here, not here, not so easy Just see! Know that this is the sacred temple where the man-lion lord my master, reclines. Now run and save your lives. No more like old, the fortress is on guard!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain