nalaeram_logo.jpg
(437)

தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடவை யும்கிண றும்இவை யெல்லாம்

வாட்ட மின்றிஉன் பொன்னடிக் கீழே வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன்

நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது நச்சு வார்பலர் கேழலொன் றாகி

கோட்டு மண்கொண்ட கொள்கையி னானே குஞ்ச ரம்வீழக் கொம்பொசித் தானே.

பதவுரை

கேழல் ஒன்று ஆகி

-

ஒப்பற்ற வராஹரூபியாய்க் கொண்டு

கோடு

-

(தனது) கோரப்பல் நுனியில்

மண்கொண்ட

-

பூமியைத் தாங்குகையாகிற

கொள்ளுகையினாளே

-

காலபாவத்ந யுடையவனே

குஞ்சாரம்

-

(குவலயாபீடமென்ற) யானையானது

வீழ

-

முடியும்படி

கொம்பு

-

(அதன்) தந்தத்தை

ஓசித்தானே

-

முறித்தெறிந்தவனே!

தோட்டம்

-

தோட்டமும்

இல்லவள்

-

மனைவியும்

-

பசுக்களும்

தொழு

-

மாட்டுத்தொழுவமும்

ஓடை

-

குளமும்

துடவையும்

-

விளை நிலமும்

கிணறும் இவை எல்லாம்

-

கிணறுமாகிற இவையெல்லாவற்றையும்

வாட்டம் இன்றி

-

குறைவில்லாமல்

அவர்

-

அடியேன்

உன் பொன் அடி கீழே

-

உனது அழகிய திருவடியிலே

வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்

-

திரள வகுத்துக்கொண்டிரா நின்றேன்

எனக்கு

-

(எல்லாம் உன்திருவடியே என்றிருக்கிற) எனக்கு

நாடு மானிடத்தோடு

-

நாட்டிலுள்ள மநுஷ்யரோடு

அரிது

-

(ஸஹவாஸம் செய்வது) அஸஹ்யம்;

பலர்

-

பலபேர்

நச்சுவார்

-

(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், தாரகபதார்த்தம் (-சோறு) கைங்கர்யாஸத்தில் அந்தர்ப்பூதமென்றார்; இப்பாட்டில், போஷக பதார்த்தங்களும் உன் திருவடிகளை அநுபவிக்கையாகிற ரஸத்தில் அந்தர்ப்பூதங்ளென்கிறார்.

தோட்டம் முதலிய போஷக வஸ்துக்களனைத்தும் உன் திருவடிகளே யெனள்று அறுதியிட்டிரா நின்றேன் என்பது முன்னடிகளின் தேர்ந்த கருத்து. இல்லவள் - வடமொழிடியில் ‘***-’ என்ற சொல்லின் பொருள் கொண்டது. துடவை - ஸுக்ஷேத்ரம் . வளைப்ப+அகம், வளைப்பகம் ; தொகுத்தல் விகாரம். தோட்டம் முதலியவற்றைப் பொன்னடிக்கீழ் வளைப்பவகுத்துக் கொண்டிருக்கையாவது- எம்பெருமான் திருவடியை ஏழுவகுப்பாகப் பிரித்து, ஒருவகுப்பைத் தோட்டமாகவும், மற்றொருவகுப்பை இல்லவளாகவும், ..... மற்றொரு வகுப்பைக் கிணறாகவும் பிரதிபத்தி பண்ணுகையோயாம். எம்பெருமானது திருவடியையொழிய வேறொன்றைப் போஷகமாக மதிப்பதில்லை யென்றவாறு.

இனி முன்னடிகளுக்கு வேறுவகையாகவும் பொருள் கொள்ளத்தக்கதாகும்; அதாவது;- தோட்டம் ..... கிணறுமாகிய இவையெல்லாதம், வளைப்பு அகம்- சூழ்ந்திருக்குமிடம், உன் பொன் அடிக்கீழ் - உனது திருவடிநிழலிலே (என்று), வகுத்துக்கொண்டிருந்தேன். (என்நெஞ்சினால் அத்திருவடியைச்) சூழ்ந்துகொள்ளா நின்றேன், என்பதாம். உன்திருவடி நிழலையே எல்லாப் பொருளுமாக ப்ரதிபத்திபண்ணி, அத்திருவடியை நெஞ்சினால் வளைத்துக்கொண்டேன் என்பது கருத்து. “உன் பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன்” என்று மேல் அருளிச்செய்வது காண்க. இப்பொருளில், அகம் என்பதற்கு, ‘இருப்பிடம்’ என்று பொருள். (தொகுத்தல் விகாரமுமில்லை.)

இங்ஙனருளிச்செய்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான், “ஆகில் இனி உமக்கு ஒரு குறையுமில்லையே” என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “என் அப்பனே! பிறர்பொருள் தார மென்றிவற்றை நம்பி அலைந்தோடுகின்ற பிராகிதர்களின் நடுவே எனக்கு இருக்க முடியவில்லை. இவ்விருப்பை ஒழித்தருளவேணும்” என்று வேண்ட; அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் இங்ஙனமே வேண்டலாகாது, இவ்வுலகவிருப்பை வேண்டுவார் எத்தனை பேருளர் பாரீர்  அவர்களொடொக்க நீரும் இவ்விபூதியிலேயே இருந்தால்குறையென்?” என்ன; அதற்கு ஆழ்வார்; ***- ஆகையால் பலர் இவ்விருப்பை விரும்பினார்களாகிலும், எனக்குப் பாம்போடொரு கூறையிலே பயின்றார்போ லிராநின்றது; ஆகையால் இவ்விருப்பை ஒழித்தேயருளவேணும்” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாசுரம்.

ஸம்ஸார ஸாகரத்தினின்றும் அடியேனை எடுத்து, ஸ்வஸ்தாலமான உன் திருவடிகளிற் சேர்த்துக்கொள்ளவல்ல வல்லமையும், அச்சேர்த்திக்கு விரோதியான கருமங்களை யொழித்தருளவல்ல வல்லமையும் உனக்கு உண்டென்பார், “கேழலொன்றாகிக் கோட்டுமண்கொண்ட கொள்கையினானே” என்றும், “குஞ்சரம்வீழக் கொம்போசிந்தானை” என்றும் விளிக்கின்றார். ***-***-***-மென்றபடி, ஹிரயாக்ஷனால் பாயாகச் சுட்டிக் கடலினுள் கொண்டுபோகப்பட்ட பூமியைத் “தானத்தே வைத்தானால்” என்கிறபடியே இப்பிறவிக்கடலினின்று மெடுத்து ஸ்வஸ்தாநமாகிய உன் திருவடிகளில் வைத்தருள வேணும்; கம்ஸனுடைய ஏற்பாட்டுக்கிணங்க வஞ்சனை வகையாற்கொல்ல நினைத்தெதிர்ந்த குவலயாபீடத்தைக் கொன்றருளியவாறுபோல, எனது ஊழ்வினைகளையும் கொல்லவேணுமென வேண்டியவாறு, குஞ்சரம்- வடசொல். “சாவு” என்னாமல், வீழ என்றது- மங்கல வழக்கு; துஞ்ச என்பதுபோல.

English Translation

O Lord who came as a boar and lifted the Earth on tusk-teeth, O Lord who broke a tusk and killed the rutted elephant! ‘This hard for me with people of the world, though many relish worldly life. Orchards, wife, cattle, shed, fields and well, all these without a lack I have found in the refuge of your lotus-feet.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain