nalaeram_logo.jpg
(436)

நெடுமை யால்உல கேழு மளந்தாய் நின்ம லாநெடி யாய்அடி யேனைக்

குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறுஇவை வேண்டுவ தில்லை

அடிமை யென்னுமக் கோயின்மை யாலே அங்கங் கேஅவை போதரும் கண்டாய்

கொடுமைக் கஞ்சனைக் கொன்றுநின் தாதை கோத்த வன்தளை கோள்விடுத் தானே.

பதவுரை

நெடுமையால்

-

(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்

உலகு எழும்

-

எல்லா வுலகங்களையும்

அளந்தாய்

-

அளந்தருளினவனே!

நின்மலா

-

பரிசுத்தமானவனே!

நெடியாய்

-

(அனைவர்க்கும்) தலைவனானவனே!

கொடுமை கஞ்சனை

-

கொடிய கம்ஸனை

கொன்று

-

உயிர்க்கொலை செய்து,

நின் தாதை கோத்த வன்தனை கோன்விடுத்தானே

-

உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில் பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் போகட்டவனே!

அடியேனை

-

(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை

குடிமை கொள்வதற்கு

-

சிங்கரனாகக் கொள்வதற்கு

ஐயுறு வேண்டா

-

ஸந்தேஹகிக்க வேண்டியதில்லை;

உறை சோறு இல்லை

-

இக்கூறையை புஞ்சோற்றையும்

வேண்டுவது இல்லை

-

(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;

அடிமை என்னும்

-

அடிமையென்ற

அ கோயின்மையாலே

-

அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்

அவை

-

அக்கூறை சோறுகள்

அங்கு அங்கு

-

அவ்வவ்விடங்களில்

போதரும்

-

(தாமாகவே) கிடைக்கும்

(கண்டாய்- முன்னிலையசைச்சொல்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெடுக வளர்ந்த திருவடியினால் அளந்தாய் என்னாமல், “நெடுமையால் அளந்தாய்” என்றது- ஒருவகை சமத்காரமென்க. அவிகார ஸ்வரூபனான தன்னைச் சிறியனாகவும் பெரியனகாவும் ஆக்கிக்கொண்டவிதனால் தனக்கொரு கொத்தையுமில்லை யென்பார், நின்மலா! என்று விளிக்கின்றார். ஐச்வரியத்தை விரும்பின தேவேந்திரனது வேண்டுகோளாற் செய்த உலகளப்பையிட்டு விளித்தது ‘அவ்விந்திரனைப்போல் நான் ஐச்வரியத்தை விரும்பி வேண்டுகிறேனில்லை’ என்று ஸ்வஸ்வரூபத்தின் வாசியைத் தெரிவித்தவாறாம். அன்றி, உனது திருவடி ஸ்பர்சத்தில் விருப்பமற்றிருந்தார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ, உன் திருவடியையே பரமப்ராப்யமாக ப்ரதிபத்திபண்ணியிருக்கிற அடி÷÷னே ஆட்படுத்திக்கொள்ளாதொழிவது தகுதியன்றென்று உணர்த்துகிறவாறுமாம்.

“திரிவிக்கிரமாபதாகத்தில் அனைவரையு மடிமைகொண்ட நீ அடியேனையுமடமை கொள்ளவேணும்” என்று ஆழ்வார் பிரார்ததிக்க; அதற்கு எம்பெருமான், “உம்முடைய ஸ்வரூபத்தின் உண்மை எனக்கு விளங்கவில்லையே” என்ன; அதற்கு ஆழ்வார, “அடியேனுக்கு ஸ்வாதந்திரியமும் ஸ்வப்ரயோஜாபாத்யமும் உண்டென்று நீ ஸந்தேஹக்கவே (வேண்டியதில்லை அடியேன் அநந்யப்ரபோதுõன்” என்று அதுகேட்டு எம்பெருமான் “நீர் அன்று ப்ரயோஜநம் என்றால், அதை நான் என்றனே ஏற்றுக்கொள்வேன், நீர் தேஹமுடையவரன்றோ? அத்தேஹத்திற்குத் தாரகமாயுள்ளவற்றில் உமக்கு விருப்பமின்றி யொழியுமோ?“ என்ன, அதற்கு ஆழ்வார், “தேஹதாரகமாக சோறு கூறை முதலியவற்றை நான் உன்னிடத்துப்பெற விரும்புகிறிலேன்“ என்ன, “ஆகில் அவை பெறுவதற்காகச் சில அரகர்களைத்தேடி ஓடுகிறீரோ? என்று எம்பெருமான் கேட்க, அதற்கு ஆழ்வார், “அவற்றை நான் அபேக்ஷித்துப் பெறவேண்டிய அருமையில்லை, அவற்றுக்காக்க் குக்கர்களைத் தேடித்தான் ஓடவேண்டியதில்லை,  உனக்கு  நான் அடிமைப்பட்டேன் என்கிற சிறப்பு என்னிடத்துள்ளதாலலால் ஆங்காங்கு அவரவர்கள் தாமாகவே என்னை அழைத்து அவற்றைத் தந்திடுவர்கள்; ஆகையால் நான் பிரயோஜந்தரத்தை நச்சித் திரிபவனல்லன்; அநந்யப்ரயோஜனனே; இனி அடியேனை அடிமை கொண்டருள வேணும்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

இனி, “கூறை சோறிவை வேண்டுவதில்லை. என்பதற்கு ‘உண்டியே நடையே உகந்தோடுகின்ற இம்மண்டலத்தவர்களால் விரும்பப்படுகிற கூறையும் சோறும் எனக்குத் தாரங்களல்லாமையாலே, இவை எனக்கு வேண்டியதில்லை என்று வருத்தாமிடத்து, மூன்றாமடிக்கு வேறுவகையாப் பொருள்கொள்ள வேணும்; அதாவது;- அடிமை என்னும் அக்கோயின்மையாலே- அங்கு  அங்கு- அந்த அந்தக் கைங்கரியங்களுக்குள்ளே, அவை- அக்கூறை சோறுகள், போதரும்- அந்தர்ப்பவிக்ஞகும்; என்று. இதன் கருத்து; ஒழிவில் காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலா வடிமை செய்தையே எனக்கும் கூறையுடுக்கையும் சோறு உண்மைகயு மென்கிறார் என்பதாம். “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாக்கண்ணன்” என்றது இங்கு நினைக்கத்தக்கது.

ஆழ்வார் தம்மை அடிமை கொள்ளுகையாவது- பிரகிருதி ஸம்பந்தத்தையும்- ஊழ்வினைத் தொடர்களையும் ஒழித்தருளுகையே யென்பதை, ஈற்றடியிலுள்ள இரண்டு ஸம்போதக வாக்கியங்களினால் ஸூசிப்பிக்கிறார்; கஞ்சனைக் கொன்றதுபோலப் பிரகிருதி ஸம்பந்தத்தைக் கொல்லவேணும்; தந்தை காலில் விலங்கையறுத்ததுபோல ஊழ்வினைத் தொடர்களை அறுக்க வேணுமென்றவாறு.

தாதை கோத்தவன்றளைக்கோள் விடுத்தது முன்னும், கஞ்சனைக்கொன்றது பின்னுமாயிருக்க, மாறுபடக்கூறியது- சிரமவிவக்ஷை யில்லாமையாலாம்; அன்றி, கண்ணபிரான் திருவவதரிதத்ருளினவன்றே கம்ஸன் ஜீவச்சீவமானமையால் அங்ஙன் கூறக்குறையில்லையெனிலுமாம். தாதை- தாத:- இங்குத் தாதையென்றது, தாய்க்கு முபலக்ஷணம். கோள்- முதனிலை திரிந்த தொழிற்பெயர். “வன்றனைகோள்விடுத்தானே” என்றும் ஓதுவர்.

தேவகியினுடைய அஷ்டமனிப்பம் தனக்கு விநாசகமென்றறிந்த கம்ஸனால் விலங்கிட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த தேவகி வஸுதேவர்களுடைய கால் விலங்குகள் கண்ணபிரான் அவதரித்தவுடனே இற்று முறிந்தொழிந்தனம் அறிக.

English Translation

O Pure Lord who rose tall and straddled the seven worlds! You need have no doubt in engaging me in your service. I do not care for food and raiment; --these will come when necessary, simply by virtue of service to you. O Lord, you killed the cruel Kamsa and freed your father from shackles, pray heed me!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain