nalaeram_logo.jpg
(435)

நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நார ணாஎன்னும் இத்தனை யல்லால்

புன்மை யால்உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வா னன்றுகண் டாய்திரு மாலே

உன்னு மாறுஉன்னை ஒன்றும் அறியேன் ஓவா தேநமோ நாரணா என்பன்

வன்மை யாவதுஉன் கோயிலில் வாழும் வைட்ட ணவனென்னும் வன்மைகண் டாயே.

பதவுரை

திருமாலே

-

ச்ரிய: பதியானவனே!

நாரணா என்னும் இத்தனை அல்லால்

-

‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய

நன்மை தீமைகள் ஒன்றும்

-

(வேறு) நன்மை தீமை ஒன்றையும்

அறியேன்

-

அறிகிறேனில்லை.

புன்மையால்

-

(எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத்தனத்தினால்

உன்னை

-

உன்னைக் குறித்து

புள்ளுவம் பேசி

-

வஞ்சகமான சொற்களைச் சொல்லி

புகழ்வான அன்று கண்டாய்

-

புகழுவனல்லன் (அடியேன்)

உன்னை

-

உன்னை

உண்ணும் ஆறு

-

இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத்தக்க வழிகளில்

ஒன்றும்

-

ஒரு வழியையும்

அறியேன்

-

அறிந்தேனில்லை;

ஓவாறே

-

(ஒரு நொடிப்பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)

நமோ நாராயணா என்பன

-

நமோ நாராணாய என்னா நின்றேன்

வன்மை ஆனது

-

அடியேனுக்கு மிடுக்காவது

உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்

-

உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு

கண்டாய்

-

முன்னிலையசைச் சொல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற இதொன்னை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமஞ் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ, அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் றிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமஞ் சொல்லாநின்றீர்? பிரயோஜநாந்தரபாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன்காண்” என்ன; அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில், மோக்ஷமாகிகற பரமபுருஷார்த்தத்தை விரும்பி, அது  பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப்பாரீர்” என்ன; அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்குடலாக நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப்ö பாழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்; ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற; அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்!  நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில் ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்; இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன; அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி உள்கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு, நன்மை- ஸ்வரூபாநுரூபம். தீமை- அவத்யாவஹம். புள்ளுவம்- வஞ்சகம். வைட்டணவன்- öவெஷவ? என்ற வடசொல் விகாரம் வன்மை- திண்ணியதான அத்யவஸாய மென்றும் கொள்க.

English Translation

O Tirumal! Right and wrong I do not know, “Narayana” is all I know. I cannot utter false words of praise with deceit in my heart. I do not know how to meditate on you. Repeatedly I call ‘Namo Narayana’. My only strength lies in the fact that I am your devotee residing in your temple, please note.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain