nalaeram_logo.jpg
(434)

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்துகை யானே பிழைப்ப

ராகிலும் தம்மடி யார்சொல் பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே விழிக்கும்

கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொ ருவரோடு என்மனம் பற்றாது

உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.

பதவுரை

சங்கு சக்கரம் ஏந்து கையானே!

ஊழி

-

பிரளயக் காலத்தில்

ஏழ் உலகு

-

எல்லாவுலகங்களையும்

உண்டு

-

திருவயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)

உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!

சழக்கு நாக்கொடு

-

பொல்லாத நாக்கினால்

புன் கவி

-

அற்பமான பாசுரங்களை

சொன்னேன்

-

நான் சொன்னேன்;

பிழைப்பர் ஆகிலும் (தாஸபூதர்கள்) பிழை செய்தவர்களேயாகிலும்

தம் அடியார்

-

தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய

செயல்

-

சொல்லை.

பொறுப்பது

-

பொறுத்தருளுகை

பெரியோர் கடன் ஆனதே

-

பெருந்தன்மையுடையவர்களுக்கு கடமையன்றோ

நின் கண் அல்லான்

-

உன்னுடைய

மற்று விழிக்கும் கண் இலேன்

-

வேற்றோருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;

(அன்றியும்)

வேறு ஒருவரோடு

-

மற்று ஒருவர் பக்கலிலும்

என் மனம்

-

என் நெஞ்சானது

பற்றாது

-

பொருந்தமாடட்õது

உழைக்கு

-

புள்ளிமானுக்கு

ஓர் புள்ளி மிகை அன்ற கண்டாய்

-

ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமலுதன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! நீ கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்புக் கண்ட நான் உன்னைக் கவிடாதிருக்கமாட்டாமல் எனது பொல்லாத நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும் உமக்கு யோக்யதைவுண்டோ?” என்ன; அதற்கு ஆழ்வார், “அநக்யார்ஹ சேஷபூதர்கள் பேசும் பாசுரம் அவத்யாவஹமாயிருந்தாலும் அதனைப் பொறுக்கவேண்டிய கடமை பெரியோர்க்கு உளதன்றோ?” என்- அதுகேட்டு எம்பெருமான், ஆழ்வீர்! அப்படி நான்பொறுக்கும்படி அடியார் ஹசேஷபூரோ என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷமொழிய மற்றொருவருடைய கடாக்ஷத்தையும் நான் ஒரு பொருளாக மதிப்பவனல்லேன்; உன்னைப்போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும்,உன்னிடததில் எனக்குள்ள தாஸ்யம் குணமடியாகப் பிறந்ததன்றி ஸ்வரூபப்ரயுந்தமானதனால், அவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்ன; அதற்கு எம்பெருமான் “உமக்குப் புறம்பு போத்தில்லையாகில் ஆயிடுக; பலகுற்றங்களுக்குக் கொள்கலமாக உம்மை கைப்பற்றினால் அது எனக்கு அவத்யாவஹமாகாதோ?” என்ன; அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே! புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என்? குறைந்தால் என்? எல்லா உயிர்களுடையவும் அபராதங்களைப் பொறுப்பதற்கென்றே காப்புக்கட்டிக்கொண்டிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுத்தருளுகை அவதயாவஹமாய் விடப் போகிறதோ?” என்ன; அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித் விடம் உண்டோ?” என்று கேட்க; ஆழ்வார், ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் பண்ணதிருப்பார் யாரேனுமுண்டோ? அவர்களது அபராதங்களைப் பாராதே அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்தருளினவனல்லையோ? அப்படியே அடியேனையும் அங்கீகரித்தருள வேணும் என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

(உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய்) உடம்பு முழுவதும் புள்ளிமயமாயிருக்கிற மானுக்கு ஆரோபிதமாக ஒரு புள்ளி ஏறி அதிகமாகத் தோற்றினால், அதனால் அந்த மானுக்கு ஒரு குற்றமுமில்லை; அதுபோல, அபராதஸஹத்வமே வடிவாயிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுப்பதனால் ஒரு குற்றமும் வாராது என்றவாறு. இவ்வகைப் பொருளில், உழையின் ஸ்தானத்தில் எம்பெருமான் நின்றதாகப் பெறலாகம்; அன்றி, அந்த ஸ்தானத்தில் ஆழ்வாரோ நின்றதாகவுங் கொள்ளலாம்; புள்ளிமானுக்கு ஒருபுள்ளி அதிகமானால் அதனால் அதற்கொரு குற்றமில்லாதவாறு போல, அபராதமயனா அடியேனுக்கு ஒரு அபராதமேறினால், அதனால் என்னுடைய அங்கீகாரத்திற்கு ஒரு குறையுமில்லைகாண் என்றவாறாம். முன்னர் உரைத்தபடியே வியாக்கியானப் போக்குக்கு ஒக்குமென்க. மிகை - குற்றத்துக்கும் பெயர்; “மிகையே குற்யமுங் கேடுங் துன்பமும், மிகுதியும் வருத்தமுமைமபொருட்டாகம்” என்பது நிகண்டு. இனி, இங்க மிகை என்பதற்கு கேடு என்று பொருள் கொள்ளுதலும் பொருந்துமென்க.     ...    ...      (உ)

English Translation

O Lord bearing the conch and discus. I have sung foul poems with a defiled tongue. Is it not bounded on the master to tolerate his servant’s words, even if they be wrong? Other than you, I have none that would look over me; my heart does not go to anyone else. O Lord who swallows the seven worlds and all else, then brings them out! A spot on a deer is not a burden to it, just see!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain