nalaeram_logo.jpg
(433)

வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.

பதவுரை

மாதவா

-

ச்ரிய: பதியானவனே!

நாரணா

-

(உலகங்கட்கெல்லாம்) ஆதிநாரணமானவனே!

கருளன்

-

பெரியதிருவடியை

கொடியானே

-

த்வஜமாகவுடையவனே!

வாக்கு

-

(என்னுடைய) வாய்மொழிக்கு

தூய்மை இலாமையினாலே

-

பரிசுத்தி இல்லாமையால்

உன்னை

-

(ஹேயப்ரதிபடனான) உன்னை

வாய்கொள்ள மாட்டேன்

-

வாய்கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனாயிரா நின்றேன்

(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)

நாக்கு

-

(ரஸமறிந்த எனது) நாக்கானது

நின்னை அல்லால்

-

உன்னை யொழிய மற்றொருவரை

அறியாது

-

(வாய்க்கொள்ள) அறியாது;

அது

-

அசுத்தமான நாக்கு இங்ஙனே உன்பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து

நான் அஞ்சுவன்

-

நான் அஞ்சுகின்றேன்;

(அது) அந்த நாக்கானது

என் வசம் அன்று

-

எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;

இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று

-

“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசாநின்றான்” என்று திருவுள்ளம்பற்றி

முணிவான் ஏலும்

-

நீ சிறியருளினாலும்

என் நாவினுக்கு ஆற்றேன்

-

என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்கவல்வேனல்லேன்;

காக்கை வாயிலும்

-

காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்

கட்டுரை

-

நற்சொல்லாக

கொள்வர்

-

(அறிவுடையார்) கொள்ளுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “எம்பெருமான் ஸந்நிதியிற் பொய் சொல்லுகை, க்ஷுத்ர ப்ரயோஜநங்களை விரும்புகை, க்ஷுத்ரர்களைப் புகழ்கை முதலியவையாகிற அசுத்திகள் என்னுடைய வாய்மொழிக்கு அளவற்றிருப்பதனால், அவ்வாய்மொழிகொண்டு உன் பெருமைகளைப் புகழுகைக்கு நான் அர்ஹனல்லதென்று ஒழித்தாலும், நாக்கு ரஸமறிந்ததாகையால், உன்னைத்தவிர்த்து மற்றொருவரை வாயிற்கொள்ள அறியமாட்டாது” என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்ய; அது கேட்டு எம்பெருமான், ‘ஆழ்வீர்! ஆகில் நீரம் அந்த நாக்குடன் கூடிச்சொல்லும்” என்று நியமிக்க! அதற்கு ஆழ்வார், “நாக்கின் தோஷத்தை நினைத்து நான் அஞ்சாநின்றேனே” என்ன; அதற்கு எம்பெருமான், ‘ஆழ்வீர்! நாக்கு ரஸமறிந்ததாகையாலே மேல்விழாநின்றது, அதன் தோஷத்தை அறிந்துள்ள நீர் அது மேல் விழாதபடி அதை உமக்கு வசப்படுத்தி நியமித்துக் கொள்ளும்” என்ன; அதுகேட்டு ஆழ்வார், “அந்த நாக்கு எனக்கு வரப்பட்டிருந்தாவன்றோ அதை நான் நியமிக்கவல்லேன்’ அதுதான் உனக்கு வசப்பட்டு விட்டதே” என்ன; அதற்கு பெருமாள், “ஆழ்வீர்! சால அழகிதாயிருந்தது; ‘உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்’ என்கிறீர், ‘நாக்கு நின்னையல்லாலறியாது’ என்கிறீர், ‘நான் தஞ்சுவன் என் வசமன்று’ என்கிறீர்; இவ்வாக்கியங்கள் ஒன்றோடொன்று சேருவது எங்ஙனே? ஆராய்ந்து பார்த்தால் நீர் பேசும் பேச்சுக்களெல்லாம் மூர்க்கர் பேசும் பேச்சாயிரா நின்றன! என்ன; ஆழ்வார், “அது உண்மையே; என்னுடைய பேச்சுக்கள் மூர்க்கப் பேச்சுகளாகத் தோற்றம்; அதனால் உனக்குச் சீற்றமும் பிறக்கும்; ஆகிலும் அச்சிந்தத்தை ஒருவாறு என்னால் ஸஹிக்க முடியும்; இந்நாக்குப்படுத்துகிற பாடு அப்பப்ப! ஸஹிக்கவே முடியவில்லையே” என்ன; அதற்கு எம்பெருமான், “அந் நாக்கைக்கொண்டு என்னை நீர் புகழத் தொடங்கீனராகில், அது எனக்கு அவத்யாவஹமாய்த் தலைக்கட்டுமே!” என்ன; அதற்கு ஆழ்வார் “எம்பெருமானே” மூர்க்கர் பேசும் பாசுரங்கள் அறிவுடையார்க்குக் குற்றமாகத் தோற்றதவளவேயன்றிக் குணமாகவுந் தோற்றும்; காக்கை ஓரிடத்திலிருந்துகொண்டு தனக்குத் தோன்றினபடி கத்திவிட்டுப்போனாலும், அதனை அறிவுடையார் கேட்டு, ‘இது நமக்கு (உறவினர் வரவாகிற) நன்மையைச் சொல்லாநின்றது’ என்று கொள்ளக் காண்கின்றோம்; அதுபோல அடியேன் நாவினுக்கு ஆற்றமாட்டாமல் வாய் வந்தபடி சிலவற்றைப் பிதற்றினாலும் அவற்றை நீ நற்றமாகவே கொள்ள வேணும்” என்றருளிச் செய்ய; எம்பெருமான், “ஆழ்வீர்! அப்படியாகிலும் குற்றத்தை நற்றமாகக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு என்ன உண்டு?” என்று கேட்க; (காரணா) அது கேட்டு ஆழ்வார், “அப்படியா! நன்று சொன்னாய்; உலகங்களை யெல்லாம் படைத்தவனல்லையோ நீ? ரக்ஷிக்கிறேனென்று கொடிகட்டிக் கிடக்கிறாயில்லையோ நீ?” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு.

மூக்கு – “***“ என்ற வடசொல்லடியாப் பிறந்தது, மூடத்தனம் என்பது பொருள். முனிதல் – கோபித்தல் “தாவினுக்கு ஆற்றேன்“ என்றது – நாவினுடைய பதற்றத்துக்கு ஆற்றேன் என்றபடி. காக்கைவாயிலும் – காக்கையில் நின்றும், ஐந்தாம் வேற்றுமை. கட்டுரை- ஏற்றச்சொல், பொருளுள்ள சொல். கருளன் “***“ என்ற வடசொல் விகாரம்.

English Translation

O Madhava! My language is impure, I dare not sing your praise; alas, my tongue knows nothing else, I fear cannot restrain it. If you become angry over my foolish words, I still cannot shut my mouth. Even a crow’s words are heard as omen. O  Lord of birds, O First-cause!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain