nalaeram_logo.jpg

(378)

கூடிக் கூடிஉற் றார்கள் இருந்து குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து

பாடிப் பாடிஓர் பாடையி லிட்டு நரிப்ப டைக்குஒரு பாகுடம் போலே

கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்து வமுடைக் கோவிந்த னோடு

கூடி யாடிய உள்ளத்த ரானால் குறிப்பி டம்கடந் துஉய்யலு மாமே.

பதவுரை

(மரணமான பின்பு)

உற்றார்கள்

-

பந்துக்களானவர்கள்

கூடி கூடி இருந்து

-

திரள்திரளாகக் கூடியிருந்துகொண்டு

குற்றம் நிற்

-

(செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றையெல்லாம் விட்டு விட்டு)

நற்றங்கள்

-

(சிறிது) நன்மையாகத் தோன்றும்படியான கூற்றை

பறைந்து

-

சொல்லி,

பாடிப் பாடி

-

(அழுகைப்பாட்டுக்களைப்) பலகால் பாடி

ஓர் பாடையில் இட்டு

-

ஒரு பாடையிலே படுக்கவைத்து

கோடி மூடி

-

வஸ்திரத்தையிட்டு மூடி

நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல

-

நரிக்கூட்டத்துக்கு ஒரு பாகுக்குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப்பிணத்தைப் கொடுக்கைக்காக,)

எடுப்பதன் முன்னம்

-

(சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே,

கௌத்துலம்

-

கௌஸ்துபத்தை

உடை

-

(திருமார்பிலே) உடைய

கோவிந்தனோடு

-

எம்பெருமன் பக்கலில்

கூடி ஆடிய

-

சேர்ந்து அவகாஹித்த

உள்ளத்தர் ஆனால்

-

நெஞ்சையுடையவர்களாக ஆனால்,

குறிப்பு இடம்

-

யமலோகத்தை

கடந்து

-

(அதிக்ரமித்து,(பரமபதம் போய்ச் சேர்ந்து)

உய்ய்லும் ஆம்

-

உஜ்ஜீவிக்கப் பெறலாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் ஒருவன் மரணமடைந்தானாகில், அவனுடைய சுற்றத்தார்கள் அங்குக் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு,

அப்பா! நீ-

காலையெழுந்து குளஞ்சென்று நீராடி

மாலை வணங்கி மனமகிழ்ந்த மகன்ன்றோ?

பாகவதபாரதங்கள் பாஷ்யங்கள் பளபளவென்

றோதியுணர்ந்திவ்வுலகில் உகந்துய்ந்தகமகன்ன்றோ

சவைநடுவிற் சதிராகச் சென்று நீ வாய்திறந்தால்

கவிகளெல்லாமாந்ந்தக் கண்ணநீர் சொரியாரோ?

சேலத்துச் சேலையை நீ சீருறவேயுடுத்தக்கர்ல்

ஞாலத்து மாதரெல்லாம் நெஞ்சுருகி வையாரோ?

அடியிணையுமங்கைகளு மகல்மார்புமந்தோளும்

முடியணியுமலரழகும் ஆர்க்கேனும் வாய்க்கும்மோ?

இரந்தவர்கட் கெப்பொருளுமில்லையெனச் சொல்லாதே

சுரந்துநீ பெற்றபுகழ் சொல்லித்தான் முடியும்மோ?

வெள்ளென்ற வேஷ்டியோடும் விளங்குபுரி நூலினொடும்

மெள்ளநீ புறப்பட்டால் மன்மதனும் மறையானோ?

என்றாற்போல, அவன் விஷயமாகச் சில நன்மைகளை யேறிட்டுப் பாட்டுப் பாடிப் பின்பு பாடையிற்படுக்கவைத்து அதனை வஸ்திரத்தினால் மூடிக்கட்டிக் காட்டுக்கெடுத்துக்கொண்டு போவார்கள்; பின்பு பகவந் நாமஸங்கீர்த்தநத்துக்கு அவகாசம் பெறாது யமகிங்கரர்கையில் அகப்பட்டுத் திகைக்கவேண்டி வருமாதலால், மரணகாலத்துக்கு முன்னமே எம்பெருமான் பக்கலில் நெஞ்சைச் செலுத்தினால் யமலோகத்துக்குத் தப்பிப்பிழைக்கலா மென்றவாறு.

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து - துஷ்கர்மாக்கள் எத்தனை செய்யப்பட்டிருந்தாலும், அவற்றிலொன்றையுஞ் சொல்லமாட்டார்கள்; ஸத்கர்மம் ஒன்று செய்யப்பட்டிருப்பினும், அதனைப் பலவாகப்பன்னிப் பகர்வர் என்க. (நரிப் படைக்கொரு பாகுடம்போலே.) வீட்டிலிருந்து பாடையை மூடிக்கொண்டு போவதைப்பார்த்தால், சுடுகாட்டிலுள்ள நரிப்படைகளுக்கு உணவாம்படி பாகுக்குடங்கொண்டு போகிறார்களோ என்று நினைக்கும்படியாயிருக்குமென்க;  அன்றி, ‘யமலோகத்திற் பாபிஷ்டர்களை நலிவதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள நரிப்படைகளுக்குப் பாகுக்குடம் கொண்டுபோவதுபோல’ என்றும் உரைக்கலாமென்பர் சிலர்; பாகு - குடம், பாகுடம், தொகுத்தல் விகாரம்: “ஒண்சங்கதை” போல. இனி, பாகுடம் என்கிறவிது- “***” என்ற வடசொல்லின் விகாரமென்றுங்கொள்ளலாம்; அப்போது, நரிப்படைகளுக்குப் பாத காணிக்கை கொண்டுபோவதுபோல என்பது பொருள்; ***- பாத காணிக்கை; “***” என்று தயாசதகத்தில் தூப்புல்பிள்ளை அருளிச்செய்தமைகாண்க. கௌத்துவம் - ***- குறிப்பிடம்- பாவங்களின் பயனை அநுபவிப்பதற்கென்று குறிக்கப்பட்ட இடம்; எனவே, யமலோகமாயிற்று. கடத்தல் - அங்குச்செல்லாதொழிதல்.

English Translation

Relatives will gather, sing dirges extolling virtues and ignoring vices, then place you in a pitcher, cover you with a shroud and take you away as meal for the foxes. Before that happens, if the heart joins the mirthful Govinda in singing and dancing, it is possible to escape the burial ground and become free.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain