(359)
மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை
நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.
பதவுரை
மாலிருஞ்சோலை என்னும் |
- |
திருமாலிருஞ்சோலை என்கிற |
மலையை |
- |
திருமலையை |
உடைய |
- |
(தனக்கு இருப்பிடமாக) உடையவனும் |
மலையை |
- |
ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும் |
கால் இரு மூர்த்தி தன்னை |
- |
திருவஷ்டாக்ஷா ஸ்வரூபி யானவனும் |
நால் வேதம் கடல் அமுதை |
- |
நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும் |
மேல் இருங் கற்பகத்தை |
- |
(ஸ்வர்க்கலோகத்திலுள்ள கல்பவ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும் |
வேதாந்தம் |
- |
வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற |
விழுப்பொருளில் |
- |
சிறந்த அர்த்தங்களுள் |
மேல் இருந்த |
- |
மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும் |
விளக்கை |
- |
தனக்குத்தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து |
விட்டுசித்தன் |
- |
பெரியாழ்வார் |
விரித்தன |
- |
அருளிச் செய்தவை இப்பாகங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டாதொழிந்தது- இப்பாசுரங்களின் பொருளை அறிகையே இது கற்கைக்குப் பயனாமென்று திருவுள்ளம் பற்றி யென்க. (நாலிருமூர்த்தி தன்னை.) வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்று நால்வகையாக கூறப்பட்ட பெரிய வடிவையுடையவனென்பதும் பொருளாம்; அப்போது, இரு என்பதற்கு- இரண்டு என்று பொருளன்று; இருமை- பெருமை. மூர்த்தி- வடசொல் ........................ என்ற பிரமாணத்தின்படி ‘அஷ்டாக்ஷா ஸ்வரூபியானவனை’ என்று உரைப்பதும் பொருந்துமென்க. நால்வேதக் கடலமுது என்று- திருமந்திரத்தைச் சொல்லிற்றாய், அதனால் கூறப்படுகிறவன் என்கிற காரணங்கொண்டு, ஆகுபெயரால் எம்பெருமானைக் குறிக்கின்றதென்றது மொன்று.
English Translation
These songs by Vishnuchitta praise the eight-syllable Mantra personified, the Amruta from the ocean of the Vedas, the excellent Kalpaka tree, the lamp that light the maze of Upanishadic thoughts, and the mountain of goodness that rules the mountain of Malirumsolai!