nalaeram_logo.jpg
(352)

மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த

காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை

கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்

பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே.

பதவுரை

மா வலி தன்னுடைய

-

மஹாபலியினுடைய

மகன்வாணன்

-

புத்திரனாகிய பாணாஸுரனுடைய

மகன் இருந்த

-

மகளான உஷை இருந்து

காவலை

-

சிறைக்கூடத்தை

கட்டு அழித்த

-

அரனோடே அழித்தருளினவனும்

தனி காளை

-

ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்

கருதும் மலை

-

விரும்புகிற மலையாவது;

கோவலர்

-

இடையர்களுக்கும்

கோவிந்தனை

-

கோவிந்தாபிஷேகம் பண்ணப்பெற்ற கண்ணபிரான் விஷயமாக

குற மாதர்கள்

-

குறத்திகளானவர்கள்

குறிஞ்சி மலர்

-

குறிஞ்சிராகத்தோடு கூடின

பா

-

பாட்டுக்களை

ஒலிபாடி

-

இசைபெறப் பாடிக்கொண்டு (அப்பாடடுக்குத் தகுதியான)

நடம்பயில்

-

கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற்பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசை பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்தப்புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும், பிரத்யுநனது புத்திரனுமாகிய அநிருந்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுவதற்கு உபாயஞ்செய்ய வேண்டும்’ என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன்  யோகவித்தை மஹிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர,  இச்செய்தியைக் காவலாளரால் அறிந்த அந்தப் பாணன் தன் சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொது நமாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது, நாரதமுனிவனால் கடந்த வரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீக்ருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே, அப்பட்டணத்தின் ஸமீபத்திற் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது பரிமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வாதேவதை மூன்று கால்களும், மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யகதங்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை உண்டாக்கி, அதன் சக்தியினாலே அவனைத் துரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும்  நாசஞ்செய்து, பர்ணாஸுரனோடு போர்செய்யத் தொடங்க, அவனு“குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ்செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்ஊகாரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அனேகமாயிரஞ் சூரியர்க்குச் சமமான தனது சக்ராயுதத்தையெடுத்து பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருந்தனுக்கு உஷையைச்  சிறப்பாக மணம்புரிவிக்க அதன்பின் மீண்டு வந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது. உஷை அநிருத்தனுக்குச் சேஷமானது வாணனை வென்ற பின்னரேயாதலால் “வாணன் மகளிருக்க காவலைக் கட்டழித்த” எனப்பட்டது. தனிக்காளை. காமனைப்பெற்ற பின்பும் யௌவனப் பருவம் நிகரற்று இருக்குமவன் என்க. “காளையே எருதுபாலைக்கதிபன் நல்லிளையோன் போரம்” என்ற நிகண்டு அறிய.

English Translation

The exceedingly youthful Lord, who destroyed the fetters over Usha the daughter of Bana the son of Mabali, resides by his own sweet will in Malirumsolai, the hill where gypsies sing of the cowherd Govinda in shrill tones on the Pann Kurinji and dance to it.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain