nalaeram_logo.jpg
(308)

என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான்

தன்வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி

முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்

தன்வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் பாடிப்பற.

பதவுரை

என் வில் வலி கண்டு போ என்று

-

‘என்னுடைய வில்லின் வலியைக் கண்டுபோ’ என்று சொல்லிக்கொண்டு

எதிர்வந்தான் தன்

-

எதிர்த்துவந்த பரசுராமனுடைய

வில்லினோடு

-

வில்லையும்

தவத்தையும்

-

தபஸ்ஸையும்

எதிர்

-

அவன் கண்ணெதிரில்

வாங்கி

-

அழித்தருளினவனும்

முன்

-

இதற்கு முன்னே

வில்வலித்து

-

வில்லைவளைத்து

முபென்

-

(பரஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய

உயிர்

-

உயிரை

உண்டான் தன்  முடித்தருளினவனுமான இராமபிரானுடைய

வில்லின்

-

வில்லினது

வன்மையை

-

வலிவை பாடிப்பற

தாசரதி

-

சக்ரவர்த்தித் திருமகனுடைய

தன்மையை

-

ஸ்வபாவத்தை பாடிப் பற

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராமனுடைய ப்ரவணையாய் நின்ற ஆய்மகளின் பாசுரம்,இது ஸீதாகல்யாணத்தின்பின் தரசரதசக்ரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டு வருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை எதிர்த்து “முன்பு ஹரிஹரயுத்தத்தில் இறந்துபோன சிவதநுஸ்ஸை முறித்த திறத்தை அறிந்தோம். அதுபற்றிச் செருக்கடைய வேண்டா; இந்த ஸ்ரீ மஹா விஷ்ணு தநுஸ்ஸை வளை, பார்ப்போம். என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற்கொணர்ந்த ஒருவில்லைத் தசரதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்து “இந்தப் பாணத்திற்கு இலக்கு என்?” என்ற கேட்க, பரசுராமன் அதற்கு இலக்காகத் தன் தபோபலம் முழுமையையுங் கொடுக்க, அவன் க்ஷத்ரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்வனுமாயிருத்தல் பற்றி அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளி, அயோத்திற்குச் சென்றனன் என்ற வரலாறு இங்கு உணரத்தக்கது.

விஷ்ணுவின் தசரதவதாரங்களில் ஆறாவதாரமான பரசுராமனும், ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லுவதும் பொருந்துமோ? எனின்; துஷ்டர்களாய்க் கொழுத்துத் திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டு பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த விஷ்ணுசக்தி, அக்காரியம் முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட தாதலாற் பொருந்துமென்க. இதனால் ஆவேசாவதாரத்திலும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும். எதிர்வந்தான் தன்வில்லினோடும் - எதிர்வந்த பரசுராமன்றன்னுடைய வில்; அன்றி, எதிர்வந்தவன் கையிலிருந்த, தன்னுடைய வில் என்றுங்கொள்ளலாம்; (தன்னுடைய- விஷ்ணுவான தன்னுடைய என்றபடி; அவ்வில் வைஷ்ணவமாதல் அறிக.) “வில்லினோடும்” என்றவிடத்து உள்ள உண்மை, “தலத்தை” என்றவிடத்துக் கூட்டியுரைக்கப்பட்டது; உள்ளபடியே உரைத்தலு மொக்கும்.

மூன்றாமடியிற் குறித்த வரலாறு:- ஸுகேது என்னும் யக்ஷனது மகளும் ஸுந்தனென்பவனது மனைவியும் ஆயிரம் யானை வலிமைகொண்டவளுமான தாடகை, தன் கணவன் அகஸ்த்யமஹாமுனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்து தன் புத்திரர்களாகிய ஸுபாஹு மாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்றபொழுது அவனிட்ட சாபத்தால் தன் மக்களோடு இரக்கத் தன்மையடைந்தனள். பின்பு முனிவர்களுடைய யாகங்களைக் கொடுக்கின்ற இவர்களை அழித்துத் தன் வேள்வியைக் காக்கும்பொருட்டு விச்வாமித்ரமுனிவன் தசரதசக்ரவர்த்தியினிடம் அநுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமபிரானை லக்ஷ்மணனுடன் அழைத்துக் கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்திற்குச் செல்லும் வழியிடையே வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவரது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர் செய்து கொன்றனனென்பதாம். இத்தாடகை தீமைசெய்வதில் மிகவும் பழகினவளானதுபற்றி, முதுபெண் எனப்பட்டா; முதுமை பழமை, தாசரதி- தசரதன் மகள்; வடமொழித் தந்திரதாந்தநாமம் இப்பாட்டிற் கூறியுள்ள கதைகள் க்ரமவிலக்ஷையின்றித் தத்திரதாந்தநாமம் இப்பாட்டிற் கூறியுள்ள கதைகள் க்ரமவிவக்ஷையின்றிக் கூறப்பட்டன வென்றுணர்க: “வரிந்திட்டவில்லால் மரமேழு மெய்து மலைபோலுருவத் தொரிராக்கதிமூக்கு அரிந்திட்டவன்” என்ற பெரிய திருமொழியையுங் காண்க. மற்றும் பல....

English Translation

When parasurama stood in the way saying, ”See if you can wield my bow”, my Lord took his bow and his penance as well; earlier he wielded his bow and shot the ogress Tataka. Sing his glory and swing; sing Dasarathi’s glory and swing.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain