nalaeram_logo.jpg
(4)

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து

கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ

நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று

பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.

பதவுரை

வந்து

-

(கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து

எங்கள் குழாம் புகுந்து

-

(அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய

கோஷ்டியிலே அந்வயித்து

கூடும் மனம் உடையீர்கள்

-

ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்

-

பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே

வரம்புஒழி வந்து

-

(ஆதமாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற) வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து

ஒல்லை

-

சீக்கிரமாக

கூடுமின்

-

எங்களோடு சேர்ந்து விடுங்கள்

(அப்படியே சேர்ந்தபின்பு)

நாடும் நகரமும் நன்கு அறிய

-

நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும் (உங்களுடைய) நன்மையை அறிந்து கொள்ளும்படி

நமோ நாராயணாய என்று

-

திருமந்திரத்தைச் சொல்லி

பாடும் மனம் உடைபத்தர்

-

பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள்

உள்ளீர் வந்து

-

சேர்ந்தவர்களாயிருந்து

பல்லாண்டு கூறுமின்

-

(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - இப்பாட்டில், ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸநத்துக்கு அழைக்கிறார்.  கீழ்ப்பாட்டில் கூழாட்பட்டவர்களை விலக்கினாப்போலே இவர்களையும் விலக்க வேண்டியிருந்தாலும், இவர்கள் கைவல்யமாகிற ஸ்வப்ரயோஜநம் பெறுவதற்காகவாகிம் எம் பெருமானைச் சரணமடைந்தார்களேயென்கிற மகிழ்ச்சியினால் அவர்களையும் அழைத்து, கிரமமாக உபதேசங்களாலே ஐச்வர்யார்த்திகளும் ப்ரயோஜநாந்தரபரர்களாயிருக்க, அந்த ஐச்வர்யார்த்திகளை முதலில் அழைப்பதைவிட்டுக் கைவல்யார்த்திகளைக் கூப்பிட்டது ஏனென்னில்; கேண்மின்; - ஐச்வர்யார்த்திகளை ஸாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்; கைவல்யார்த்திகளை அப்படி ஸாவகாசமாகத் திருத்திக்கொள்ள முடியாது.  ஏனென்றால், கைவல்யார்த்திகளின் உபாயாநுஷ்டாநம் முடிந்துவிட்டால், ஆத்மாநுபவத்துக்காக ஏற்பட்ட மோக்ஷலோகத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்; மறுபடியும் அங்கிருந்து ஒருநாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே இப்போதே அவர்களைத் திருத்திக்கொள்ளாமல் சிறிது விளம்பித்தாம் அந்த அதிகாரிகள் பாழாய்ப்போவர்களே! என்கிற அநுதாபத்தினால் ஆலஸ்யம் ஸஹியாமல் ஐச்வர்யார்த்திகளுக்குமுன்னே கைவல்யார்த்திகளை யழைக்கிறார்.

ஏடுநிலம் என்று கைவல்யஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; பிரகாணபலத்தினால் சொல்லும்; பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள் அன்றியே, ஏடு -  ஸூக்ஷ்மசரீரமானது, நிலத்தில் -  தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே, இடுவதன்முன்னம் -லயிப்பதற்குமுன்னே, என்றும் பொருள் கொள்ளலாம்.  ஸ்தூலசரீரமென்றும் ஸூக்ஷ்மசரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்; பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்; தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் - ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.  ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீஸ்நாநத்தால் நீங்கியபின்புதான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்.  இவ்விரண்டில் எதையடைந்தபின்பும் திரும்பி வருவதல் இல்லை.  (இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற்காட்டிலும் பிரதானமாய் அதனுடைய ஸாரமுமாயிருப்பதால், பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி ‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும். ‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது.  வரம்பொழியவந்து என்றபடி.  இவ்விடத்தில், வரம்பாவது - அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை; ‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது; பகவானை யநுபவிக்கப்போகக்கூடாது’ என்று நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்றழைக்கிறார்.

கைவல்ய நிஷ்டர்கள் ‘‘. . . . . . . . . . . . . . . . . . . . . .  ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்’’என்கிற சாஸ்திரப்படி தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்காகப் பிரணவத்தை மாத்திரம் உச்சரிப்பார்கள்; இனி அப்படியல்லாமல் திருவஷ்டாக்ஷரத்தையும் பூர்த்தியாகக் கோஷித்துக்கொண்டு வரவேணுமென்று பின்னடிகளால் அழைக்கிறார். பத்தர் - பக்தர்.

English Translation

Before you place your trust on infirm ground, come! Join us! O, Like-hearted man, give up your temporal aims and join us quickly!  Let town and country resound with the chant ‘Namo Narayanaya’.  Ye Devotees, who wish to sing, come! Join us in singing Pallandu.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain