nalaeram_logo.jpg
(290)

நாடும் ஊரும் அறிய வேபோய் நல்ல துழாயலங்கள்

சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்

கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவ னோடுஇவளை

பாடு காவ லிடுமி னென்றென்று பார்தடு மாறினதே.

பதவுரை

நாடும்

-

விசேஷ ஜ்ஞாநிகளும்

ஊரும்

-

ஸாமான்ய ஜ்ஞாநிகளும்

அறிய

-

அறியும்படியாக [பஹிரங்கமாக]

போய்

-

வீட்டை விட்டுப் புறம்பேபோய்

நல்ல

-

பசுமை மாறாத

துழாய் அலங்கில்

-

திருத்துழாய்மாலையை

(பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக்கொண்டு)

சூடி

-

தரித்துக்கொண்டு

நாரணன் போம் இடம் எல்லாம்

-

எம்பெருமான் போகிற இடம் முழுவதும்

சோதித்து உழிதருகின்றாள்

-

தேடித்திரியாநின்றாள்;

கேடு வேண்டுகின்றார்

-

“இக்குடிக்குக்) கேடு விளையவெணுமென்று கோருமவர்கள்

பலர் உளர்

-

பலபேருண்டு;

(ஆகையால்)

இவளை

-

எம்பெருமானைத்தேடித் திரிகிற இவளை

கேசவனோடு

-

(அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.)

பாடுகாவல் இடுமின்

-

அருகு காவலிடுங்கள்”

என்று என்னை

-

என்று இதையே பல காலும் சொல்லிக்கொண்டு

பார்

-

பூமியிலுள்ள அநுகூல ஜநமானது

தடுமாறினது

-

மனங்குழம்பிச் செல்லாநின்றது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-இம்மகள் ஏகாந்தமாகக் காரியங்கள் நட்த்திக்கொண்டால் பாதகமில்லை; உலகத்தாரனைவரு மறியுமாறு எம்பெருமானுடைய துழாய் மாலையைச் சூட்டிக்கொண்டது மல்லாமல், அவன் எங்கிருக்கிறான்? என்று அவன் போகக்கூடிய இடங்களிற்போய்த் தேடித்திரிதலும் செய்யாநின்றாள்; இனி இவள் நமக்கு அடங்காள் என்று நான் கையொழிந்தபோது, இவ்விடத்துள்ள அநுகூலர்கள் எனக்குச் சொல்லியது யாதெனில்; இவ்வாறு பஹிரங்கமாக ப்ரவர்த்திக்கின்ற இவளை நாம் நோக்காதொழிலில் இக்குடிக்குப் பெருங்கேடு விளையும்; எந்த வேளையில் என்ன கேடு விளையப்போகிறதென்று எதிர்பார்க்கும் பாவிகள் இங்கு ஒருவரிருவரல்லர்; ஆகையால் நாம் இவளை இப்படி ஸ்வந்திரையாக விடலாகாது; பின்னை என்செய்வதென்னில் இவள் தானே அவனிடம் போய்ச் சேர்ந்தாளாகாமல் இவளை நீங்கள் கொண்டுபோய் அவனுக்கு ஆஸந்நமான அந்தப்புரத்தில் விட்டு, அங்கிருந்தும் இவள் பதறி ஓடவொண்ணாதபடி பாதுகாவலிடுங்கள் என்று இதனையே திருப்பித்திருப்பிச் சொல்லா நின்றார்களேயொழிய, இவளை வீட்டினுள் நிறுத்தி அடக்குங்கள் என்று சொல்லவல்லார் யாருமில்லையே! யென்கிறாள்.

கேடு- முதனிலை திரிந்த தொழிற்பெயர். பாடு-பக்கம். பார்-ஆகுபெயர். (தடுமாறினதே.) வரனுடைய வேண்டுகோளின்படி வதுவைக் கொடுத்தல் பலகவியற்கையாயிருக்க. இவளை நாமாக வருந்திக்கொடுக்க வேண்டிவந்த்தே என்று அனுகூலர் மனங்குழம்புவரென்க.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்தம் பணிந்து” என்றபடி பாகவதர்களின் புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமானைப் பற்றுதல் முறைமையாயிருக்க, தனது அவாவின் மிகுதியாலே பதறி அம்முறையை மீறி எம்பெருமானைப் பற்ற நினைத்த ஆழ்வாருடைய ப்ரவ்ருத்தி சைலிகளைக்கண்ட அன்பர் ‘ப்ரபந்ந ஸந்தாநத்திற்கு இது ஸ்வரூப விருத்தம்’ என்ற்றுதியிட்டு, பாகவத புருஷகார புரஸ்ஸரமாக இவரை அங்குச் சேர்க்கலுற்றபடியைக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள்.

English Translation

Wearing a Tulasi garland. She roams everywhere searching for Narayana wherever he went, letting the town and country know. “Keep a close watch over her and Kesava, many would wish to see her ruin”. This is the talk of the town everywhere.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain