nalaeram_logo.jpg
(288)

பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்

சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு மல்லது இழைக்க லுறாள்

கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை

சங்கை யாகிஎன் னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.

பதவுரை

(இவள்)

பொங்கு

-

நுண்ணியதாய்

வெள்

-

வெளுத்திராநின்ற

மணல்கொண்டு

-

மணலாலே

முற்றத்து

-

முற்றத்திலே

சிற்றில்

-

கொட்டகத்தை

இழைக்கலுறிலும்

-

நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும்

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது

-

சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களையொழிய (மற்றொன்றையும்)

இழைக்கலுறாள்

-

இழைக்க நினைப்பதில்லை;

(இவளுக்கோவென்றால்)

இன்னம்

-

இன்றளவும்

கொங்கை

-

முலைகளானவை

குவிந்து எழுந்தில

-

முகம் திரண்டு கிளர்ந்தனவில்லை;

இவளை

-

இப்படி இளம்பருவத்தளான இவளை

கோவிந்தனோடு சங்கை ஆகி

-

கண்ணபிரானோடு சம்பந்தமுடையவளாகச் சங்கித்து

என் உள்ளம்

-

என் நெஞ்சமானது

நாள்தொறும்

-

ஸர்வகாலமும்

தட்டுளுப்பாகின்றது

-

தடுமாறிச் செல்லா நின்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இம்மகளை வெளியிற் புறப்படவொட்டிலன்றோ இவள் தீயிணக்கிணங்காடி வருகின்றாள், இனி உள்முற்றத்திலிருந்துகொண்டே விளையாடச் சொல்லுவோமென்று, தாயாகிய நான் அங்ஙனமே நியமித்து வைத்தால், இவள் முற்றத்தில் சிற்றிலிழைக்க ஒருப்பட்டாலும் எம்பெருமானது பஞ்சாயுதங்களை இழைக்கின்றாளேயொழிய வேறுகிற்றிலிழைப்பதில்லை; தலைமகனை வசப்படுத்துதற்கு முக்கியஸாதநமான முலைகளோ, ஆண் முலைக்கும் பெண்முலைக்குமுள்ளவாகி தோற்ற முகந்திரண்டு இவளுக்குக் கிளரவில்லை; இப்படிக்கொத்த இவளது இளமையைப் பார்த்தால் “தலைமகனோடு இவள் இணங்கினாள்” என்ன முடியவில்லை; இவள் செய்யும்படிகளைப் பார்த்தால் இவ்விணக்கம் சங்கிக்கும்படியாயிருக்கின்றது; ஆகையால் ஒன்றையும் நிர்ணயித்தறியமாட்டாமையாலே என் நெஞ்சு தடுமாறா நின்றதீ! என்கிறாள்.  சிற்றிலும் என்ற விடத்துள்ள உம்மை - இழைக்கலுறில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.  தட்டுளுப்பு  - தடுமாற்றம்.

ஸ்வாபதேசத்தில் சிற்றில் என்று ??? தேஹத்தையும், வாஸஸதாநமான வீடு முதலியவற்றையுஞ் சொல்லுகிறது.  இவ்வாழ்வார் ப்ராக்ருதமான சமுரத்தைப்பூண்டு இல்லற வாழ்க்கையாயிருக்கச் செய்தேயும் விஷயாந்தரங்களில் öநஞ்சைச் செலுத்தாது, எம்பெருமானது திவ்யாயுதங்களின் அம்சமாக அவதரித்துள்ள மஹாபாகவதர்களையே தியானித்துக்கொண்டிருக்கும்படியைக் கூறுதல், முன்னடிகளுக்கு உள்ளுறை பொருள்; இனி, முலை என்று ஸ்வாபதேசத்தில் பக்தியைச்சொல்லுகிறது; எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான பக்தி முதிர்ந்து பேற்றுக்குச் சாதனமான பரமபக்தியாகப் பரிணமித்ததில்லை; இப்படியிருக்கச் செய்தே இவருக்கு பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகஹம் வாய்த்தவாறு எங்ஙனே? என்று சிலர் சங்கித்தல், பின்னடிகளுக்கு உள்ளுறைபொருள்.

English Translation

When she makes sand castles in the portico and decorates them with fine white sand, she cannot think of any motif other than conch, discus, mace, dagger and bow. Her breasts have hardly risen. Yet every time I suspect she was with Govinda, my heart misses a beat.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain