nalaeram_logo.jpg
(286)

ஐய புழுதி உடம்ப ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்

செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்

கையி னில்சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்

பைய ரவணைப் பள்ளி யானோடு கைவைத்து இவள்வருமே.

பதவுரை

இவள்

-

இச் சிறுபெண்ணானவள்

ஐய புழுதியை

-

அழகிய புழுதியை

உடம்பு அளைந்து

-

உடம்பிலே பூசிக்கொண்டு

பேச்சும் அலந்தலை ஆய்

-

ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சையுமுடையளாய்

செய்ய நூலின் சிறுஆடை

-

சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை

செப்பன்

-

செம்மையாக

[அரையில் தங்கும்படி]

உடுக்கவும் வல்லன் அல்லன்

-

உடுக்கவும் மாட்டாதவளாயிராநின்றாள்;

இவள்

-

இப்படியொரு பருவத்தையுடையளான இவள்

சிறு தூதையோடு

-

(மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும்

முற்றிலும்

-

சிறு சுளகையும்

கையினில்

-

கையில் நின்றும்

பிரிந்து இவள்

-

விட்டொழிகின்றிலள்;

இவள்

-

இப்படிக்கொத்த விளையாட்டையுடைய இவள்

பை அரவு அனை பள்ளியானொடு

-

சேஷசாயியான எம்பெருமானுடனே

கைவைத்து வரும்

-

கைகலந்து வாரா நின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவள் யௌவநபருவத்தை யடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க.  தலைமகனை வசப்படுத்துவது உடலழகாலேயாதல் உரையழகாலேயாதல் உடையழகாலேயாதல் கூடுவதாயிருக்க, உடலும் புழுதிடிந்து, சொல்லும்திருத்தமற்ற குதலைச் சொல்லாய், ஆடையும் செவ்வனுடுக்க அறியாத இப்போதைக்கு தலைவனோடு கைகலவி உண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்படுகிறபடி.

இதற்கு உள்ளுறை பொருள் யாதெனில்;  இவ்வாழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் “எம்பெருமானைச் சேரப்பெறுதற்கு வேண்டிய உபாயங்கள் பூர்ணமன்றியிருக்க, இவருக்கு அவ்விஷயத்திலுண்டாகிய அவகாஹம் என்னோ?” என்று சொல்லும் வார்த்தை - ஸ்வாபதேசம்.  எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான சரீரம் பிரகிருதிஸம்பந்தத்தினால் சுத்த ஸாத்விகமாகப் பெறவில்லை; அவனுடைய ஸ்வரூப ரூபகுணாதிகளை அடைவுபடச்சொல்ல வல்லமையில்லை; “மடிதற்றுத் தான் முந்துறும்” (திருக்குறள்) என்றபடி அரையில் ஆடையை இறுக உடுத்துக்கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சியில்லை; (முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார்.) இந்திரியங்கள் போன்ற போகோபகரணங்களை மீறவில்லை; இப்படியிருக்க இவர்க்குப் பகவத் விஷயீகாரம் நேர்ந்தது.  நிர்ஹேதுக கிருபையினாலத்தனையென்று அறுதியிட்டவாறு.  ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானாலல்லது செல்லாமை இப்பாட்டில் வெளியாம்.  ஐய என்பதைப் பெயரெச்சமாகக் கொள்ளாமல், அஹஹ! என்னும் பொருளதாகக் கொள்ளவுங்கூடும்.  அலந்தலை - மயக்கம்.  செப்பன் - செப்பம் என்றதன்போலி.  தூதை - மகளிர் மணலில் விளையாடும்போது மணலால் சோறு சமைப்பதாகப் பாவனை பண்ணுமிடத்து அந்த மணற்சோறாக்குகைக்குக் கருவியாவது; சிறுமுட்டியென்பர்.  முற்றில் - சிறுமுறம்.  இப்பாட்டில் “இவள்” என்ற சுட்டுப்பெயர் மூன்று தடவை பிரயோகித்தது என்னோவெனில்; பருவத்துக்கும் செயலுக்கும் உள்ள பொருத்தமின்மையை இவள் இவள் இவள் என்று பல தடவைகளால் காட்டுகிறபடி.

English Translation

She is covered with the dust of the playpen all over, her speech is broken, and she can hardly keep her red cotton Saree from falling. She has not left playing with her small pots and plates. Oh, she comes holding hands with the Lord who sleeps on a serpent couch!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain