nalaeram_logo.jpg
(285)

குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்

குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை

குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்

குழலை வென்றகுளிர் வாயின ராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.

பதவுரை

இருண்டு சுருண்டு ஏறிய

-

கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த

குழல் குஞ்சி

-

அலகலகான மயிர்களையுடையனான

கோவிந்தனுடைய

-

கண்ணபிரானுடைய

கோமளவாயில்

-

அழகிய வாயில்(வைத்து ஊதப்பெற்ற)

குழல்

-

வேய்ங்குழலினுடைய

முழஞ்சுகளினூடு

-

துளைகளிலே

குமிழ்த்து

-

நீர்க்குமிழிவடிவர்கக்கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று)

கொழித்து எழுந்த

-

கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின

அமுதம் புனல் தன்னை

-

அம்ருத ஜலத்தை

குழல் முழவம் விளம்பும்

-

குழலோசையோ டொக்கப் [பரமயோக்யமாக] அருளிச்செய்தவரும்

புதுவை கோன்

-

ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான

விட்டுசித்தன்

-

பெரியாழ்வார்

விரிந்த

-

விஸ்தாரமாகக் கூறிய

தமிழ்

-

இத்தமிழ்ப்பாசுரங்களை

வல்லார்

-

ஓதவல்லவர்கள்

குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி

-

திருக்குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியையுடையராய்

சாது கோட்டியுள்

-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில்

கொள்ளப் படுவார்

-

பரிக்ரஹிக்கப்படுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-குழல் எனினும் குஞ்சி எனினும் கேசத்துக்கே பெயராயினும் இங்கு இரண்டையுஞ்ச் சேரச்சொன்னது ஒருவகைக் கவிமரபு; ‘மைவண்ண நறுங் குஞ்சிகுழல் பின்றாழ” என்றார் திருமங்கையாழ்வாரும்; “குழலளக முகந்தாழ” என்றார் பிறரும். குழன்றிராநின்ற மயிர் எனப் பொருள்கொள்க. கண்ணபிரானுடைய வாயமுதமானது, குழலூதும்போது அதன் துளைகளிலே நீர்க்குமிழிபோலக் குமிழ்த்து உடனே அது திவலையாகத் திரிந்து பரந்தபடியை முன்னடிகளால் கூறியவாறு. அவ்வாயமுதத்தைப் பெரியாழ்வார் தாம் ஸாக்ஷாத் அக்குழலினுடைய ஓசையின் யோக்யதை போன்ற யோக்யதையையுடைய சொற்களால் அருளிச் செய்தனராம். கண்ணபிரான் குழலூதினபடியைப் பரமரஸ்யமாகச்சொன்ன என்பது கருத்து.

இப்பாசுரங்களைப் பயில்பவர் பரமயோக்யமாக உபன்யஸிக்கவல்ல வல்லமை பெற்று வாழாட்பட்டு நின்றார் குழுவினிற் புகப்பெறுவர் என்று பலன் சொல்லித் தலைக்க்கட்டினார். தமிழ் - தமிழினாலாகிய பாசுரங்கள்; கருவியாகு பெயர்.  ???????  வடசொற்றொடர்.

அடிவரவு:- நாவல் இடவான் தேனுகன் முன் செம்பெரும் புலி சிறு திரண்டு சுருங்குழல் ஐய.

English Translation

This decad of Tamil songs, sweet as the flute, by Vishnuchitta, King of Srivilliputtur, speaks of the river of ambrosia that came gushing through the holes of the flute that Govinda, with his dark curly tresses all over, placed on his tender lips and played. Those who master it will develop speech that excels the flute in coolness, and be counted in the motley group of saints.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain