nalaeram_logo.jpg
(281)

புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து

அவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப

அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி

செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து  கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே.

பதவுரை

புவியுள்

-

பூமியிலே

நான் கண்டது ஓர் அற்புதம்

-

நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்)

கேளீர்

-

கேளுங்கள்; (அதுயாதெனில்)

பூணி

-

பசுக்களை

மேய்க்கும்

-

மேய்க்காநின்ற

இள கோவலர்

-

இடைப் பிள்ளைகள்

கூட்டத்து அவையுள்

-

திரண்டிருக்கின்ற ஸபையிலே

நாகத்து அணையான்

-

சேஷசாயியான கண்ணபிரான்

குழல் ஊத

-

குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது)

அமார் லோகத்து அளவும் சென்று

-

தேவலோகம் வரைக்கும் பரவி

இசைப்ப

-

(அங்கே) த்வனிக்க (அதைக்கேட்ட)

வானவர் எல்லாம்

-

தேவர்களனைவரும்

அவி உணா

-

ஹவிஸ்ஸு உண்பதை

மறந்து

-

மறந்தொழிந்து

ஆயர் பாடி நிறைய புகுந்து

-

இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து

ஈண்டி

-

நெருங்கி

செவி உள் நா

-

செவியின் உள் நாக்காலே

இன்சுவை

-

(குழலோசையின்) இனிய ரஸத்தை

கொண்டு

-

உட்கொண்டு

மகிழ்ந்து

-

மனங்களித்து

கோவிந்தனை

-

கண்ணபிரானை

தொடர்ந்து

-

பின் தொடர்ந்தோடி

என்றும்

-

ஒரு க்ஷணகாலமும்

விடார்

-

(அவனை) விடமாட்டாதிருந்தனர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பூலோகத்தினுள் நான் கண்ட அற்புதமொன்றுண்டு, கேளுங்கள்; கண்ணபிரான் இவ்வுலகிலூதின குழலினோசை மேலுலகத்தளவும் பரந்து செல்ல, அங்கு அதனைக் கேட்ட தேவர்களில் ஒருவர் தப்பாமல் தமது மேன்மைக்கேற்ப அந்தணர் யாகங்களில் தரும் ஹவிஸ்ஸுக்களையும் உண்ண் மறந்து ‘கண்ணன் பிறந்து வளருகின்ற ஊர்’’ என்று கொண்டு திருவாய்ப்பாடியேறத் திறண்டுவந்து புகுந்து கூட்டத்தின் மிகுதியினால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று அக்குழலினோசையைக் காதுகளால் நன்கு பருகி அக்கண்ணபிரான் சென்றவிடங்களுக்கெல்லாந் தாங்களும் பின்னே சென்று அவனை ஒரு நொடிப் பொழுதும் விட்டகலமாட்டாதொழிந்தனர்; இதிலும் மிக்க அற்புதமுண்டோ? என்றவாறு தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது. தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது ஹவிஸ்ஸானமைப்பற்றியென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு. கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென்? எனில்; கீழ்க்கச்சிக் கோயிலில் நடக்கும் பேரருளாளனது பெரிய திருவடி திருநாளுக்கென்று வந்த திரள் கூட்டத்தின் மிகுதியால் அங்கேறப் புகுரமாட்டாது, மேற்க்கச்சிப் புறத்தளவிலே நிற்குமாபோலக்கொள்க; எனவே, இக்குழலோசை கேட்கவந்து திரண்டுள்ள ஜனங்கள் கண்ணபிரானைச் சுற்றிப் பற்பல காததூரத்தளவாக நின்றனரென்று திரளின் மிகுதி கூறியவாறாம். திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனிருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்டால், இனித் தேவர் நிற்குமிடம் எதுவாகக்கூடுமென்று ஆய்ந்துணர்க. (செவிஉள்) நாவில் -என்று ஒரு சொல்லாக்கொண்டு நாவினால் என்று உரைத்தலுமொன்று; ”செவிக்கு நாவுண்டோவென்னில், ‘செவியுணா நீட்ட’ என்னக்கடவதிறே; சேதநஸமாதியாலே சொல்லுகிறது; அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான **** பூஜித்து என்னவுமாம்; ’செவுக்குணவில்லாதபோழ்து’ (குறள்) என்றானிறெ” என்ற ஜீயருரை இங்கு அறியத்தக்கது. ரஸத்தை கிரஹிப்பது எதுவோ, அது நாக்கு என்று கொண்டு, இசையின் சுவையை கிரஹிக்குங் கருவியைச் செவியுள்நா என்றதாகக்கொள்க. ஒளபசாரிகப் பிரயோகமரத்தனை. உணா - உணவு என்பதன் விகாரம். அமரலோகம் - வட சொற்றொடர்.

English Translation

Listen to this miracle that I saw on Earth; in the midst of young cowherd-lads grazing calves, the serpent-reclining Lord played his flute that resounded in high heaven. All the gods forgot to partake of the fire oblations and came down in hordes to the cowherds’ Appadi, to drink the sweet music with their ears and followed Govinda wherever he went.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain