nalaeram_logo.jpg
(280)

செம்பெ ருந்தடங் கண்ணன்திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்

நம்பர மன்இந் நாள்குழ லூதக் கேட்டவர் கள்இட ருற்றன கேளீர்

அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீதவலை யால்சுருக் குண்டு

நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே.

பதவுரை

செம்பெரு தடகண்ணன்

-

சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களையுடையனாய்

திரள் தோளன்

-

பருத்த தோள்களையுடையனாய்

தேவகி சிறுவன்

-

தேவகியின் பிள்ளையாய்

தேவர்கள் சிங்கம்

-

தேவசிம்ஹமாய்

நம் பரமன்

-

நமக்கு ஸ்வாமியான பரமபுருஷனாயிராநின்ற கண்ணபிரான்

இ நாள்

-

இன்றைய தினம்

குழல் ஊத

-

வேய்ங்குழலை ஊத

கேட்டவர்கள்

-

(அதன் இசையைக்) கேட்டவர்கள்

இடர் உற்றன

-

அவஸ்தைப்பட்ட வகைகளை

கேளீர்

-

(சொல்லுகிறேன்) கேளுங்கள்

(அந்த இடர் யாதெனில்)

அம்பரம்

-

ஆகாசத்திலே

திரியும்

-

திரியாநின்ற

காந்தப்பர் எல்லாம் -

-

காந்தருவர் அனைவரும்

அமுதம் கீதம் வலையால் -

-

அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே

சுருக்குண்டு

-

அகப்பட்டு

நம் பரம் அன்று என்று

-

(பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு

(முன்பெல்லாம் பாடித்திரிந்ததற்கும்)

நாணி

-

வெட்கப்பட்டு

மயங்கி

-

அறிவழிந்து

நைந்து

-

மனம் சிதிலமாகப்பெற்று

சோர்ந்து

-

சரீரமுங் கட்டுக்குலையப் பெற்று

கை மறித்து நின்றனர்

-

(இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-கண்ணபிரானூதின குழலினோசை செவியில் விழப்பெற்ற கந்தருவர்கள் பட்ட பாட்டைப் பகருகின்றேன் கேளுங்கள்;--பரமபோக்யமான இக் குழலோசையாகிற வலையிலே அவர்கள் கட்டுப்பட்டு, “இனிப் பாட்டுத் தொழிலாகிற பெருஞ்சுமையில் நமக்கு யாதொரு அந்வயமுமில்லை” என்று நிச்சயித்தொழிந்ததுமன்றி, கீழுள்ள காலமெல்லாம் தாம் பாடித் திரிந்தபடியை நினைத்து அதற்காகவும் வெட்கப்பட்டு, மேல் ஒன்றும் நினைக்கவொண்ணாதபடி அறிவையுமிழந்து உடலும் மனமும் கட்டழிந்து இவ்வாறான தங்கள் தளர்த்திய வாயினாற் சொல்லவும் வல்லமையற்று “இனி நாங்கள் ஒன்றுஞ்செய்ய மாட்டுகிறிலோம்” என்பதைத் தெரிவிக்கிற பாவனையாக ஊமையர் ஸம்ஜ்ஞை காட்டுவது போலக் கையைமறித்துக் காட்டிநின்றனராம். கைமறித்தல்-குடங்கையைத் திருப்பிக் காட்டுதல்; என்னிடமொன்றுமில்லையே என்பதைத் தெரிவிக்க வேண்டுவார் இவ்வாறு காட்டுதல் உலகில் வழங்குவது காண்க.

உற்றன இடர் – உற்ற இடர்களை என்றபடி. அம்பரம் – வடசொல் “****“ என்ற வடசொல் காந்தப்பர் என மருவிற்று. அமுதகீதம் “***“ உவமைத்தொகை, பராங்முகமாகத் திரியுமவர்களையும் வலிய இழுக்குந்தன்மைபற்றி அமுதகீதவலை எனப்பட்டது. பரம்-“***“. போர்க்களத்தில் தோற்றவர்கள் “போர்செய்யும் பாரம் இனி நமக்குவேண்டா“ என்று கையெழுத்திட்டுப்பேசுவதுபோல, ஸங்கீத வித்தையில் தோற்ற கந்தருவரும் நம்பரமன்றென்றொழிந்தனரென்க.

English Translation

Our Lord of large red eyes and strong arms is Devaki’s child, lion of the gods. Listen to how the ones who heard him play his flute suffered misery: the Gandharvas roaming in the sky were caught in the net of his nectar-sweet songs; enchanted and shamed, they folded their hands and fell into meek submission. Saying this is beyond us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain