nalaeram_logo.jpg
(276)

இடவணரை யிடத்தோளொடுசாய்த் திருகைகூடப் புருவம்நெரிந்தே*

குடவயிறுபட வாய்கடைகூடக் கோவிந்தன் குழல்கொடடூதினபோது*

மடமயில்களோடு மான்பிணைபோலே மங்கைமார்கள் மலர்க்கூந்தலவிழ*

உடைநெகிழ வோர்கையால்துகில்பற்றியொல்கி யோடரிக்க ணோடநின்றனரே(உ).

பதவுரை

கோவிந்தன்

-

கண்ணபிரான்

இட அணஸா

-

(தனது) இடப்பக்கத்து மோவாய்க்கட்டையை

இட தோளொடு சாய்ந்து

-

இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து

குடம்பட

-

குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும்

வாய்

-

வாயானது

கடைகூட

-

இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக)

குழல்கொடு

-

வேய்ங்குழலைக் கொண்டு

ஊதின போது

-

ஊதினகாலத்திலே

மடம் மயில்களொடு

-

அழகிய மயில்களையும்

மான் பிணை போலே

-

மான் பேடைகளையும் போன்றுள்ள

மங்கைமார்கள்

-

யுவதிகள்

இரு கை

-

இரண்டு திருக்கைகளும்

கூட

-

(குழலோடு) கூடவும்

புருவம்

-

புருவங்களானவை

நெரித்து ஏற

-

நெறித்து மேலே கிளறவும்

வயிறு

-

வயிறானது

மலர் கூந்தல்

-

(தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது

அவிழ

-

அவிழ்ந்து அலையவும்

உடை

-

அரைப்புடவையானது

நெகிழ

-

நெகிழவும்

துகில்

-

(நெகிழ்ந்த) அத்துகிலை

ஓர் கையால்

-

ஒரு கையாலே

பற்றி

-

பிடித்துக்கொண்டு

ஒல்கி

-

துவண்டு

அரி ஓடு கண் ஓட நின்றார்

-

செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குழலூதும்போது மோவாய்க்கட்டையின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்புதலும், இரண்டு கையும் குழலோடு கூடுதலும், புருவம் நெரித்தலும், வயிற்றிலே காற்றை நிறைத்து நிறுத்தி, அதனைத் திருப்பவளத்தாலே கிரமமாக விட்டு ஊதவேண்டுகையாலே வயிறு குடம்போலே எடுப்பாகத் தோன்றுதலும், குழலின் துளைகளின் அளவுக்கு ஏற்ப வாய் குவிந்து குமிழ்த்துப் போதலும் இயல்பாமென்க. அணர்-தாடி;அதுக்கு உரிய இடத்திற்கு ஆகு பெயர். கடை கூட-(வாயின்) இரண்டு ஓரங்களும் ஒன்றாய்க்கூட; எனவே, குவிந்து என்றதாயிற்று; கடைவாய்கூட - இரண்டு கடைவாய்களும் ஒன்றோடொன்று கூட. கொடு-கொண்டு என்பதன் சிதைவு.

இவ்வாறு கண்ணபிரான் குழலூதுவதைக் கேட்ட இளம்பெண்கள் இருந்த விடத்தில் நின்றே உடல் விகாரமடைந்து மயிர் முடியவிழவும், அரை உடை நெகிழவும் பெற்று “இந்த ஸன்னிவேசத்துடனே நாம் இவ்வாறு வெளிப்புறப்படக்கடவோம்” என்னும் ஸங்கோசமுமற்று நெகிழ்ந்ததுகிலை ஒரு கையாலும், அவிழ்ந்த முடியை ஒரு கையாலும் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்துடனே ஓடிவந்து அக்கண்ணனைக் கண்ணாற காணப்பெற்றனராம். மடமயில் போல மலர்க் கூந்தல் அவிழவும், மான்பிணை போல ஓடரிக்கணோடவும் என்று இயைப்பர். ஒல்குதல்-ஒடுங்குதல் கண்ஓடநிற்றல் - அவனைக்காட்டு, காட்டு என்று கண்கள் விரைந்தோடி நிற்றல். “ஸ்த்ரீத்வம் பின்னாட்டினாறும் ஓடுகிற கண்ணை நிஷேதிக்கப்போமோ” என்ற ஜீயருரை அறியத்தக்கது.

English Translation

When Govinda played his flute, he threw his weight on his left shoulder; his two hands came together; his eyebrows knitted, his belly rose, his mouth closed in. Deer-like and peacock-like maidens,--their flowered coiffure loosening, their dress slipping, their Sarees held with one hand,--stood shyly apart, running their collyrium-lined eyes over him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain