nalaeram_logo.jpg
(273)

கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில

வடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்

முடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும்

குடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

கொடி ஏறு

-

(ரேகாரூபமான) த்வஜத்தையுடைய

செந்தாமரை கை

-

செந்தாமரை மலர்போன்ற (கண்ணனது) திருக்கையும்

விரல்கள்

-

(அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டுநின்றதனால்)

கோலமும் அழிந்தில

-

(இயற்கையான) அழகும் அழியப்பெறவில்லை;

வாடிற்று

-

வாட்டமும் பெறவில்லை;

வடிவு ஏறு

-

அழகு அமைந்த

திரு உகிரும்

-

திருநகங்களும்

நொந்தில

-

நோவெடுக்கவில்லை;

(ஆகையால்)

மணிவண்ணன்

-

நீலமணிபோன்ற நிறத்தனான கண்ணபிரான்

(எடுத்தருளின)

மலையும்

-

மலையும்

(அம்மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்)

ஓர் சம்பிரதம்

-

ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது;

(அந்தமலை எது? என்னில்;)

முடி ஏறிய

-

கொடுமுடியின் மேலேறிய

மா முகில்

-

காளமேகங்களினுடைய

பல் கணங்கள்

-

பலஸமூஹங்களானவை

எங்கும் மழை பொழிந்து

-

மலைச்சாரல்களிலெல்லாம் மழைபெய்து (வெளுத்ததனால்)

முன் நெற்றி கரைத்தனபோல

-

(அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற்போல் தோற்றும்படி

குடி ஏறி இருக்கும்

-

(கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற

கோவர் *** குடையே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம் முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை; மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ? என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் - முன்னடிகளில்.  சம்பிரதம் - ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி மாஞ்செடி முளைக்கச்செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை.  இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால இச்செய்கை அபாரமார்த்திகம் என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் - பின்னடிகளால்.  அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு.  கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று; இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க.  குடியேறியிருந்து மழைபொழியும் - மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.  வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக.

இதற்கு உள்ளுறை பொருள் ;- வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை உபதேசித்துத் தாங்கள் சுத்தஸ்வரூபர்களாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.

English Translation

The fingers of his lotus-red hands were like fluttering pennons, but they neither lost their beauty nor became weak nor faded; nor did the shapely finger-nails hurt. The gem-hued Lord and the mount presented a spectacle. That mount is Govardhana, where the big clouds on the peaks in hordes everywhere appear to whiten at their temples, as they rain incessantly.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain