nalaeram_logo.jpg
(271)

சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச் சரமா ரிபொழிந் துஎங்கும்பூ சலிட்டு

நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல் நாரா யணன்முன் முகம்காத் தமலை

இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய

கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

சலம் மா முகில்

-

நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய

பல் கணம்

-

பல திரளானது,

எங்கும்

-

இடைச்சேரியடங்கலும்

பூசல் இட்டு

-

கர்ஜனை பண்ணிக்கொண்டு

போர் களத்து சரம் மாரி பொழிந்து

-

யுத்தரங்கத்தில் சரமழை பொழியுமாபோலே நீர் மழையைப் பொழிந்து

நலிவான் உற

-

(ஸர்வஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே

நாராயணன்

-

கண்ணபிரான்

கேடகம் கோப்பவன் போல்

-

கடகு கோத்துப் பிடிக்குமவன்போல

(குடையாக எடுத்துப் பிடித்து)

முன்

-

முந்துற வருகிற

முகம்

-

மழையினாரம்பத்தை

காத்த

-

தகைந்த

மலை

-

மலையாவது,

கொலை வாய்

-

கொல்லுகின்ற வாயையும்

சினம்

-

கோபத்தையுமுடைய

வேங்கைகள்

-

புலிகளானவை

இலை வேய் குரம்பை

-

இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில்

தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று

-

இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர

(அங்குள்ள ரிஷிகள்)

அணார் சொறிய

-

(தமது) கழுத்தைச் சொறிய

(அந்த ஸுகபாரவச்யத்தினால், அப்புலிகள்)

நின்று உறங்கும்

-

நின்றபடியே உறங்கப்பெற்ற

கோவர் *** குடையே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சலம் -ஜ?ம்  கணம் - ?ணம். களம் - வ?ம். சரம் - ?ரம்.  தவம் - தவ@. சரமாரி என்றவிடத்து உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது.  பூசலிடுதல் - இடியிடித்தல்.  நலிவான் - நலிவதற்காக.  வீரர்கள் போர்க்களத்தில் நெறுநெறென அம்புகளைப் பொழிவதுபோல மேகங்கள் திரள்திரளாக நீர்கொண்டெழுந்து முழங்கிக் கொண்டு இடைச்சேரியடங்கலும் நீரைப்பொழிந்து வருத்தப்புக, கண்ணபிரான் மலையைக் குடையாக எடுத்துக்கையிற்கொண்டு நின்றது - கேடயம் என்னுமாயுதத்தைக் கையிற்கோத்துக் கொண்டு நிற்றலை ஒக்கும்.  கேடயம் பகைவரை அணுகவொண்ணாதபடி தடுப்பதிற் சிறந்த கருவியாவதுபோல இம்மலையும் மாரிப்பகையைத் தடுத்தலில் வல்லதாதலால் இவ்வுவமை ஏற்குமெனக.  கேடகம் எனினும், கேடயம் எனினும் ஒக்கும்.  முன்முகம் காத்தமலை - முகமென்று வாயைச் சொல்லிற்றாய் அது இலக்கணையால் வாய்மொழியைச் சொல்லக்கடவதாய், முன்பு இடையர்கள் இந்திர பூஜை செய்யப் புகுந்தபோது அதனை விலக்குங்கால் “இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம்”  என்று தான்சொன்ன வாய்மொழியைத் தவறாமல் காப்பாற்றிக் கொள்வதற்குக் காரணமான மலை என்றுமுரைக்க இடமுண்டு.  நாராயணன் - கருத்துடையடைகொளி; பரிசுராங்குராலங்காரம்.  புலிகளானவை பர்ணசாலைகளில் தவம் புரியாநின்ற ரிஷிகள் கோஷ்டியிற்செல்ல, அவற்றின் கழுத்தை அந்த ரிஷிகள் சொறிந்ததாகக் கூறுவது அவர்களின் தவ உறுதிக்குக் குறைகூறியவாறாகாதோ? எனின்; எல்லாப் பதார்த்தங்களும் எம்பெருமான் தன்மையனவேயாம் என்று கைகண்டிருக்கும் ரிஷிகளாதலால் ஒரு குறையுமில்லையென்க; ??? என்ற சாஸ்த்ரார்த்த அநுஷ்டாநத்தைக் கூறியவாறுமாம்.  புலிகளின் கழுத்தை ரிஷிகள் சொறியும் போது அவை பரமாநந்தத்துக்குப் பரவசப்பட்டன என்பார், நின்றுறங்கும் என்றார்.  இருந்தார் தவமாமுனிவர் - இருந்த  தவமாமுனிவர் என்றபடி; தெரிநிலை முற்றுப் பெயரெச்சமாய் வருதலும் நன்னூலார்க்கு உடன்பாடாம்.  சென்று - செல்ல என்றபடி; எச்சத்திரிபு.

இதற்கு உள்ளுறைபொருள்; - காமம், குரோதம், மதம், மாச்சரியம் முதலிய தீயகுணங்களுக்கு வசப்பட்டொழுகுகின்ற ஸம்ஸாரிகள் அருந்தவ முனிவரான நாதமுனிகள் போல்வாருடைய திருவோலக்கத்திலே புகுந்து  வருத்தந்தோற்ற நிற்க, அவர்கள் கருணைகூர்ந்து உய்யும்வழிக்கு உடலான பொருள்களை நெஞ்சில் எளிதிற் பதியுமாறு உபதேசிக்க, அதனால் அவர்கள் திருந்தி உலகவுணர்ச்சி லுறக்கமுற்றுப் பேரின்பம் நுகருமாற்றைப் பெறுவித்தவாறாம்.

English Translation

When dark laden warring clouds gathered and poured like arrows in a battlefield, wreaking havoc everywhere, the Lord Narayana stood in the forefront and held the mount like a shield. That mount is Govardhana where fierce deadly tigers enter the hermitage; the austere Rishis living in leaf huts stroke their dewlap and put them to sleep standing.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain