nalaeram_logo.jpg
(269)

செப்பா டுடைய திருமா லவன்தன் செந்தா மரைக்கை விரலைந் தினையும்

கப்பா கமடுத் துமணி நெடுந்தோள் காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை

எப்பா டும்பரந் திழிதெள் ளருவி இலங்கு மணிமுத் துவடம் பிறழ

குப்பா யமென நின்றுகாட் சிதரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

செப்பாடு உடைய

-

செவ்வைக் குணத்தையுடையனாய்

திருமால் அவன்

-

ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்

தன்

-

தன்னுடைய

செம் தாமரை கை

-

செந்தாமரை மலர்போன்ற திருக்கையிலுள்ள

விரல் ஐந்தினையும்

-

ஐந்து விரல்களையும்

கப்பு ஆக மடுத்து

-

(மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக்கொம்புகளாக அமைத்து

மணி நெடுதோள்

-

அழகிய நீண்ட திருத்தோள்களை

காம்பு ஆக கொடுத்து

-

(அந்த மலைக்குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து

கவித்த மலை

-

தலைகீழாகக் கவித்த மலையாவது,

-

எப்பாடும்

-

எல்லாப் பக்கங்களிலும்

பரந்து இழி

-

பரவிப் பெருகாநின்ற

தெள்ளருவி

-

தெளிந்த சுனைநீரருவிகளானவை

இலங்கு மணி முத்துவடம் பிறழ

-

விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித்தனியே ப்ரகாசிக்

குப்பாயம் என நின்று

-

(கண்ணபிரானுக்கு இது ஒரு) முத்துச்சட்டையென்று சொல்லும்படியாக,

காட்சி தரும்

-

காணப்படப்பெற்ற

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கோவர் *** குடையே

செப்பாடாவது - இந்திரனுக்கிட்ட சோற்றையடங்கத் தானமுது செய்து மழைபெய்வித்து ‘இவை பட்டதுபடுக’ என்று ஈரமற்ற நெஞ்சனாயிருக்கையன்றிக்கே தான் முன்னின்று ரக்ஷித்தருளின் செவ்வைக்குணமா இக்குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்ததென்பார்.  திருமால் என்றார்.  அவன் - முதல் வேற்றுமைச் சொல்லுருபு.  கப்பு -குடைக்காம்பினடியிற் கிளை விட்டாற் போன்றுள்ள வேத்ரதண்டங்கள்.  கோவர்த்தன மலையை ஒரு குடையாக உருவகப்படுத்தியதற்கேற்பத் தடங்கை விரலைந்தும் மலரவைத்த கண்ணபிரான் கைவிரல்களைக் கப்பாகவும் பாஹுதண்டத்தைக் காம்பாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க.  பின்னடிகளின் கருத்து; - (மலைகளில் சுனைநீரருவிகள் இன்றியமையாதன வாகையால்) இம்மலையில் கண்டவிடமெங்கும் பரவிப்பெருகுகின்ற தெள்ளருவிகளானவை அமைந்துள்ள படியைப் பார்த்தால் கண்ணபிரானுக்காக முத்துச்சட்டை ஸித்தப்படுத்தப் பட்டுள்ளது போலும் என உத்ப்ரேக்ஷித்தவாறென்க.  குப்பாயம் - சட்டை; “மெய்ப்பை சஞ்சுளி கஞ்சுகம் வாரணம், குப்பாயமங்கி சட்டையாகும்”  என்பது - திவாகரம்.  இங்குச் சந்தர்ப்பம் நோக்கி முத்துச்சட்டை எனப்பட்டது.  காட்சி - சி விகுதிபெற்ற தொழிற்பெயர்.

English Translation

The benevolent Lord Tirumal upturned a mount like an umbrella, spread the five fingers of his lotus-hand it like the spokes and help up his beautiful long arm like its stem. The streams of cool water flowing down over the rim formed a tassel; the spray formed a jacket of pearls over him. That mount is Govardhana, the Lord’s victory-umbrella.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain