(3966)

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய

நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே

பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

 

பதவுரை

திருமாலிருஞ் சோலை மேய

-

தெற்குத் திருமலையில் வாழ்கின்ற

நங்கள் கோனே

-

எம்பெருமானே!

யானே நீ ஆகிஎன்னை அளித்தானே

-

நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே!

பொங்கு ஐம்புலஎம்

-

கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்

பொறி ஐந்தும்

-

ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும்

கருமேந்திரிமம்

-

கருமேந்திரியங்கள் ஐந்தும்

ஐம்பூதம்

-

பஞ்ச பூதங்களும்

இங்கு

-

ஸம்ஸார நிலைமையில்

இவ் உயிர் ஏய் பிரகிருதி

-

ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும்

மான ஆங்காரம் மனங்கள்

-

மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற

உன் மா மாயை மங்க ஒட்டு

-

உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்;லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.

பிரானே! உடலுமுயிரும் மங்கவொட்டென்று வேண்டச் செய்தேயும இப்படிப் மேல் விழுகிறாயே, இது தகுமா? எ;னறு ஆழ்வார் கேட்க, அதற்கு எம்பெருமான் ‘சாந்து பூசுவார் பரண்யை;யுடைத்தோ பூசுவது? சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயமன்றோ’ என்று சொல்ல; விர்வான ளுக்திகளாலே ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறாராயிற்று. (உன் மாமாயை மங்கவொட்டு) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யா என்று கீதையில் நீ தானே சொல்லிவைத்தாயே; ஒருவராலும் தப்பவொண்ணாதபடி குருவிபிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதரம் தவிரப்பாராய். (திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே!) பரமபதத்தை விட்டு நீ திருமாலிருஞ்சோலை மலையிலே வந்து நிற்கிறது அடியார்கள் சொன்ன படியே நடந்து ஆச்ர்ற்தபாரதந்திரியத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றோ? இன்னமும் என் சொற்கேளாதே நீ ஸ்வாந்திரனாயே நின்று நினைத்தபடி செய்வ கொள்ள வேண்டாவே. (யானே நீ யாகி யென்னை யளித்தானே!) என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பாரிவு உண்டோ அவ்வளவு பாரிவு உனக்கும் இல்லையோ? யானே நீ யென்னலாம்படி யிருந்துவைத்து இ;ப்போது எனக்கு அநபிமதமானதைச் செய்யத்தகுமோ? என்று இங்ஙனே ஆழ்வார் சொல்லச்செய்தேயும் எம்பெருமான் இணங்காதிருப்பதுகண்டு, தேஹத்தின் ஹேயமான தன்மையைப் பின்னடிகளால் (8.8) என்கிற திருவாய் மொழியிலே ஜீவாத்மாவின் சீர்மையை; எம்பெருமான் ஆழ்வார்க்கு உணர்த்தினான்; இப்போது ஆழ்வார் எம்பெருமாளுக்கு அசேநந்தின் தன்மையை உணர்த்துகிறார்; சிஷ்யாசர்ய க்ரமம் மாறினதாயிற்று.

பொங்கு ஐம்புலஎம் - சப்தாதி விஷயங்கள் ஐந்தும், அவற்றிலே அகப்படுத்து கைக்கு உறுப்பான செவிகண் முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் அவ்விஷயங்களில் ப்ரவர்த்திக்கைக்கு ஹேதுவான கைகால் முதலான கருமேந்திரியங்களில் ஐந்தும், சாரிரத்திற்கு ஆரம்பங்களான நிலம்நீற் முதலான பூதங்கள் ஐந்தும் ஆகஇவை இருபது; ஸம்ஸாரதசையில் ஜீவனோடீட மிகப்பொருந்தியிருக்கிற மூலப்ரக்ருதி, வ்யவஸாய ஹேதுவான மஹான், அபிமாந ஹேதுவான அஹங்காரம், ஸங்கல்பஹேதுவான மநஸ்ஸூ ஆக இவை நான்கு; இவ்விருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டரவாக நீ கட்டிவைத்திருக்கிற மாயையிலே இப்போது நீ வீணாகப் பண்ணுகிற ஆதரத்தை விட்டுத் தொலைக்கப்;பாராய் - என்றாராயிற்று.

திருமாலிருஞ் சோலைமேய நங்கள் கோனே! யானே நீயாகி யென்னை யளித்தானே!, பொங்கைம்புலஎம்  பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களாகிற உன்மாமையை மங்கவொட்டு என்று அந்வயிப்பது. இங்து ஐம்புலன்களுக்கு பொங்கு என்று அடைமொழி கொடுக்கப்பட்டது; பரமபோக்யமென்று பிரமிக்கச் செய்யுந் தன்மைவாய்ந்த என்றபடி.

 

English Translation

O My Lord of Malirumsolai, my protector, my own self.  These five sensory fields, five sensory organs, five motor organs, five elements and the four envelopes of the soul are all part of your cosmic Lila, Pray let them die!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain