(3957)

செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை

வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்

நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்

நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே

 

பதவுரை

செம் சொல் கவி காள்

-

செவ்விய சொற்களை யுடைய கவிகளே!

என்னெஞ்சுள்ளும் உயிருள்ளும் கலந்து

-

என்னெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து

உயிர் காத்து ஆள் செய்மின்

-

உங்களை ஜாக்ரத்தையுடன் நோக்கிக் கொண்டு கவி பாடுங்கள்

நின்றார் அறியா வண்ணம்

-

அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி

(ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்)

திருமாலிருஞ் சோலை

-

திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற

அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு

-

அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து

வஞ்சம் கள்வன்  மா மாயன்

-

வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான்

தானே ஆகி     (என்னைக் காண இடமின்றிக்கே)

-

தானேயாகி

மாயம் கவி ஆய் வந்து

-

“ஆழ்வாரே! ளும்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றேன்” என்றொரு மாயம் செய்து வந்து

நிறைந்தான்

-

அவாப்த ஸமஸ்த காமனாயினான் (ஆதலால் செஞ்சொற்கவிகாஉயிர் காத்தாட் செய்மின் என்ன வேண்டிற்று)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****-எம்பெருமானுடைய எந்த சீல குணத்தில் தாம் ஆழங்காற்பட்டுக் களைத்தாரோ அக்குணத்தில் பிறரும் ஆழ்ந்து வருந்தாமைக்காக எச்சாரிக்கை செய்கிறார் முதலடியால்; கவிகள், “சிறப்புடன் பூனை இறப்பிலிருந்தால், புறப்பட மாட்டாதெலி” என்னுமாபோலே கவிபாடுமவர்கள் கவிகள்.  சொற்கள்மிடைந்து ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்ன, அர்த்தபுஷ்டியுடன் கவிபாடுமவர்கள் சொற்கவிகள்.  ப்ரயோஜனத்தைக் கணிசியாமல் பகவத் விஷயத்திலே கவிபாடுமவர்கள் செஞ்சொற்கவிகள்.  “இன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” “பதியே பரவித்தொழுந் தொண்டர்” “ஆடிப்பாடியரங்கவோ வென்றழைக்குந் தொண்டர்” என்றிப்படி கொண்டாடப்பட்ட முதலாழ்வார்கள் போல்வாரையே செஞ்சொற்கவிகளர்! என்று விளிக்கிறார்.

உயிர்காத்து ஆட்செய்மின் - நீங்கள் கவிபாட வேணுமானால் முன்னம் நீங்கள் இருந்தாக வேணுமே; இத்தலையுடானாலன்றோ  அத்தலைக்கு மங்களா சாஸனம் பண்ண முடியும்.  ஆகவே முன்னம் உங்களை நோக்கிக்கோண்டு கவிபாடப் பாருங்கோள் என்கிறார்.  செஞ்சொற்கவிகள்! என்ற விளிக்குச்சேர “உயிர்காத்துக் கவிபாடுமின்* என்ன வேண்டியிருக்க ஆட்செய்மின் என்கிறது - கவிபாடுகையும் வாசிகமான ஆட்செய்கையாகையாலே “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்று பண்டே சொல்லி வைத்திருக்கிறாராழ்வார்.  எம்பெருமான் வாசிக கைங்காரியமாகிற அடிமையைக் கொள்வான் போலப் புகுந்து பின்பு நீர்மைக் குணத்தினால் உயிரைக் கொள்ளை கொள்ளுமவனாதலால் அந்த நீர்மையில் உள்குழையாதே வலிய நெஞ்சராயிருங்கோ ளென்கிறாராயிற்று.   சிற்றாள் கொண்டான் என்கிற ஸ்வாமி பணிப்பராம் - “ஆழங்காலிலே யிழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாபோலே ஆழ்வாரும் கொண்டைக்கோல் நாட்டுகிறார்” என்று.  ஆழ்வார் இப்படியருளிச்செய்வதன் பரமதாற்பாரியமென்ன வென்றால், எம்பெருமானுடைய மற்றைக் குணங்களெல்லாவற்றிலுங் காட்டில் சீல குண மொன்று மிகவும் ஆற்றவொண்ணாதது, இதற்குத் தப்பிப்பிழைப்பது அர்து - என்பதேயாம்.  அக்குணத்தின்  சீர்மையையெடுத்துக் காட்டுகிற ளுக்திசாதுரியம் “உயிர்காத்தாட்செய்மின்” என்பது.  இன்னாருயிரைக் காத்து ஆட்செய்யும்படி வ்யக்தமாகச் சொல்லாமையாலே, எம்பெருமானுயிரைக் காத்து  ஆட்செய்மின் என்பதாகவுங் கொள்ளலாமென்று உடையவர் அருளிச் செய்வராம்.  அதன் கருத்து யாதெனில், அவன் மேல்விழவிழத் தாங்கள் இறாய்த்தால் அவனை யிழக்க நேருமே; அப்படி யாகாமே அவருயிரைக் காவுங்கோள் என்பதாம்.  இப்பொருளிளல் சுவை யொன்று மில்லையேயென்று சிலர்மயங்குவர்.  கேண்மின்; என்னுடம்பில் அவன் சாபலம்காட்ட, அதை நான் தடுக்க, பின்னையும் அவன்மேல்விழ, பிரானே! உனக்குப் பாரதந்திரியம் ஜீவிக்கவேணுமேயென்று நான் விலங்கிட்டாற்போல் வார்த்தை சொல்ல் அதன்மேல் அவன் கைகூப்பி நிற்க, அந்த சீல குணத்திலே உருகும்படியான நிலைமை எனக்கு ஏற்பட்டது; நீங்களும் என்னைப்போல் அவனை விலக்கத் தொடங்கினீர்களாகில் அவனை யிழக்கவே நேரும்; பின்னை யாரைக் குறித்துக் கவிபாடுவது?  ஆகவே அவருயிரைக் காத்து ஆட்செய்மின்கள்; அவன் விரும்பிய போகத்தை நான்தான் குலைத்தொழிந்தேனாகிலும் நீங்களாவது குலைக்காதபடி அவன் வழியே யொழுகி அநுபவிக்கப்பாருங்கள் - என்பதான சுவைக்கருத்து உணர்க.

இவ்விஷயத்திலே தாமிழந்து அனர்த்தப்பட்ட படியை யருளிச்செய்கிறார் மேல் திருமாலிருஞ் சோலை வஞ்சக்கள்வனென்று தொடங்கி, தான் சேஷியாகவும் நான் சேஷபூதனாகவுமிருக்கிற இம்முறையை நிலைநாட்டுவதற்காக வருவான்போல வந்து, தன்னுடைய கள்ளச் செயல்வல்லமையினால் அத்தலையித்தலையாம்படி பண்ணி என்னைத் தன் தலைமேல் தூக்கிக்கொண்டு உலாவுவானாயிருந்தான்.  இப்படிப் பட்ட வஞ்சகக் கள்வனவன் என்பதை நான் பண்டே யறிந்துவதை;துங்கூட வலையில் சிக்கவேண்டியதாயிற்று; அவன் மாமாயனாகையாலே, மாயப்பொடி தூவி மயக்கிவிடுகிறானே! என் செய்வேனென்கிறார்போலும்.  ‘பெய்யுமா முகில்போல் வண்ணா! உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலே!” என்றார்களே இவனுடைய வஞ்சக்கள்வ மாயங்களில் பழகின கோபிகளும், அறிந்தும் தப்பவொண்ணாமை கூறினபடி மாமாய னென்று.

தம்மை அவன் அகப்படுத்தினவழியை யருளிச்செய்கிறார் மாயக்கவியாய் வந்து என்று.  “ஆழ்வீர்உலகத்தில் நடையாடாத கவிகளை ளும்மைக்கொண்டு பாடுவித்துக் கொள்வதாக விருக்கிறோம்;; இணங்குவீரே?” என்றான் ‘நாமாக ப்ரார்த்திக்கவேண்டுவதை அவானகப் பார்க்கின்றானே, இணங்குவோமே என்று இணங்கினேன்; விரல்  நுழைக்கக் கிடைத்தவிடத்திலே தலை நுழைக்கவல்லானொருவனாகையாலே பிறகு தான் செய்ய நினைத்ததையெல்லாம் செய்து தலைக்கட்டினான் என்கிறார்.  இங்கே ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின் :- “என்னை யுபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகையென்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே வந்து புகுந்து கலந்து இன்னபடி செய்தருளினானென்று அயர்வறுமமரர்க்கு மறிய நிலமல்லாத தொருபடி என்னெஞ்சையு முயிரையும் தன்னுள்ளே யடக்கித் தானே யாம்படி மாள புஜித்துப் பாரிபூர்ணனானா னென்கிறார்” என்று.

நம் ஆசாரியர்கள் ஆழ்வாரருளிச்செயல்களின் ஆழ்பொருள்களைத் தாங்கள் அறிகிறபுடையும் அப்பொருள்களை வெளியிடுவதற்கு அவர்கள் பங்க்திகளமைக்கிற அழகும் அநுபவிக்கவநுபவிக்க நீராயுருகுமென்னாவி.  அந்த திவ்ய மதுர பங்க்தி களின் சுவையை யநுபவிப்பார்ல்லையே யென்னுமழுகையோடே இப்பாட்டிஎரையைத் தலைக்கட்டி மேலே சொல்லாநின்றேன்.  இது மூன்றாவதான வதாரியாத்திரையில் கண்டமென்எங்கடி நகாரிலெழுதினது.

 

English Translation

O Sweet-tongued poets, be one your guard when you sing!  The Tirumalirumsolai-Lord is a wicked trickster.  He entered my heart and soul as a wonder-poet, then ate them, became them, and filled me without my knowing

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain