nalaeram_logo.jpg
(265)

வழுவொன் றுமிலாச் செய்கைவா னவர்கோன் வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்டு

மழைவந்து எழுநாள் பெய்துமாத் தடுப்ப மதுசூ தன்எடுத் துமறித் தமலை

இழவு தரியாத தோரீற் றுப்பிடி இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும்

குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

(இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்)

ஒன்றும் வழு இல்லா செய்கை

-

ஒரு குறையுமற்ற செய்கைகளையுடைய

வானவர் கோன

-

தேவேந்திரனுடைய

வலிபட்டு

-

பலாத்காரத்துக்கு உள்பட்டும்

முனிந்து விடுக்கப்பட்ட

-

(அவ்விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள

மழை

-

மேகங்களானவை

வந்து

-

(அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து

ஏழு நாள் பெய்து

-

ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து

மா தடுப்ப

-

பசுக்களை (வெளியே போகக்கூடாதபடி) தகைய

மதுசூதன்

-

கண்ணபிரான்

எடுத்து

-

(ஸர்வஜநங்களையும் காப்பதற்காக அடிமண்ணோடு கிளப்பி) எடுத்து

மறித்த

-

தலைகீழாகப் பிடித்தருளின

மலை

-

மலையானது (எது என்னில்;)

இள சீயம்

-

சிங்கக்குட்டியானது

தொடர்ந்து

-

(யானைக்குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்துவந்து

முடுகுதலும்

-

எதிர்த்தவளவிலே,

இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி

-

(தன்குட்டியின்) வருத்தத்தைப்பொறுக்கமாட்டாத (அக்குட்டியைப்) பெற்ற பெண்ணானையானது

குழவி

-

(அந்தக்) குட்டியை

கால் இடை இட்டு

-

(தனது) நான்கு கால்களின் நடவில் அடக்கிக்கொண்டு

எதிர்ந்து

-

(அந்தச் சிங்கக்குட்டியோடு) எதிர்த்து

பொரும்

-

போராடப்பெற்ற

கோவர்த்தனம் *** குடையே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்கு இந்திரனை வழுவொன்று மில்லாச் செய்கையனாகக் கூறினது - தான் இந்திர பதவியைப் பெறும்போது அதற்குச் செய்யவேண்டிய ஸாதநங்களில் ஒன்றுங் குறைவில்லாமல் செய்தவனென்பதற்காக.  இப்படி வெகு வருத்தப்பட்டு ஸம்பாதித்த இந்திரபதவிக்குப் பிறர்களிடத்தில் பூஜை பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக இவன் கொண்டிருப்பதனால் அம்மரியாதைக்குக் குறைவுவரவே கோபங்கொண்டனனென்க; ஆகவே, “வழுவொன்றுமில்லாச் செய்கை”  என்பது கருத்துடை யடைமொழியாம்.  “மாத்தடுப்ப”  என்பதில் ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர் இங்கு.  பசுக்களையும் கன்றுகளையுங் குறிக்கும்; இடையர்கட்கும் உபலக்ஷணம்.  மதுசூதன் - மது என்ற அஸுரனைக் கொன்றவன்; மது - வேதத்தை அபஹரித்துக் கொண்டு சென்ற அஸுரர்களில் ஒருவன்.  பின்னிரண்டடிகளின் கருத்து;- ஒரு பெண் யானையானது தன் குட்டியை ஒரு சிங்கக்குட்டி நலிவதாக வந்து சீறினவளவிலே அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக்கொண்டு அச்சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தற்கிடமான கோவர்த்தனமலை என்க.  இனி, இழவு என்பதற்கு, விட்டுப்பிரிதல் என்று பொருள்கொண்டு வேறுவகையாகவும் கருத்துக் கூறலாம்; குட்டியுந் தானுமாயிருந்த ஒரு பெண்யானை, தன்னை நலியவந்த ஒரு சிங்கக் குட்டியோடு தான் பொர நினைத்து அப்போது தன் குட்டியை இறைப்பொழுதும் தனித்து விட்டிருக்கமாட்டாத தான் அக்குழவியைத் தன் காலிடையடக்கிக் கொண்டு போர் செய்ததாகக்கொள்க.

இதற்கு உள்ளுறைபொருள்;- தன்னைப் பற்றிக் கிடக்கும் சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்கமாட்டாத ஆசார்யனானவன், அச்சிஷ்யனைத் தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற வாஸநாரூபகருமங்களுக்கஞ்சி, அவனைத் தன் திருவடிகளுக்கு அந்தரங்கனாக்கிக் கொண்டு அக்கருமவாஸனையை நீக்கி முடிக்குந்தன்மையைச் சொல்லிற்றாகிறது.

English Translation

The rains sent under the authority of Indra of faultless Karmas, came and poured for seven days causing misery. Madhusudana lifted a mount and held it upside down like an umbrella. That mount is Govardhana, where a baby elephant when pursued by a young lion takes refuge between the legs of the mother elephant, which fights back the attacker with vengeance.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain