nalaeram_logo.jpg
(3915)

வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்

யாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன்

போவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா

சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே.

பதவுரை

நின் பசு நிரை மேய்க்க போக்கு

-

நீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக;

வீவன்

-

நான் முடிந்து போவேன்

ஒரு பகல் போவது அன்று

-

அந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க)

எனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம்

-

எனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது;

பொரு கயல் கண் இணை நீரும் நில்லா

-

சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன;

துணை யாவரும் இல்லை

-

துணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே)

இவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம்

-

இடைச்சிகளாய்ப் பிறந்த

ஆய் பிறந்த

-

நீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே

யான் இருந்து

-

யான் முடியாதிருந்து .

உன் அஞ்சனம் மேனியை

-

அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய

ஆட்டம் காணேன்     ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்;

-

தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய

நீ அகன்றால்

-

நீ பிரிந்து போனால்

இதனிமை தானே சாவது

-

இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * ..... பசு மேய்க்கப் போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது... வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ? பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ? இதை நான் தவிரத்தகுமோ? என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ? நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமா£யன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. Óராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள். கீழ்ப்பாட்டினீற்றடியில் ’வீவ, நின்பசுநிரை’ என்று பதவிபாகம்; இப்பாட்டில் ’வீவன்’ என்று பதவிபாகம். நீ பசு மேய்க்கப் போவது காரணமாக, வீவன் ... நான் முடிந்திடுவேன் என்றபடி.முடியும் படி வந்ததென்? என்ன; வெவ்வுயிர்க் கொண்டு எனதாவிவேமால் என்கிறாள், என்னிலைமையைப் பார்க்க மாட்டாயோ பிரானே; நீ பசு மேய்க்கப் போகப்போகிறாயென்று நினைத்தவாறே நெடுமூச்செறிந்து உலர்ந்து போன என்னுடைய ஹ்ருதயமானது விரஹாக்னி கொஉத்தி எரியா நின்றமை காணமாட்டாயோ? இதிலே ஒரு குடம் தண்ணீரைச் சொரியமாட்டாயோ வென்கிறாள்.

துணை யாவருமில்லை... துணையாவார் யாருமிலர் என்றபடி. துணைவனென்று பேர்பெற்றிருக்கிற நீயோ போகப் புகா நினறாய்; பிரிவில் துணையாகக் கூடிய தோழிமார்களோ எனக்கு முன்னே வாடி வதங்கிச் சருகாகின்றார்கள்; குயில் மயில் முதலானவையோ கொல்லப் பார்க்கின்றன; இனித் துணையாவார் யாருளர் (யானிருந்து) பிரிந்தவாறே பிராணன் சடக்கென என்னைவிட்டொழயலாமே; அதுவமில்லை; எல்லாம் பட்டும் நூறே பிராயமாகவன்றோ நானிருக்கிறேன்’’ (உன் அஞ்சன மேனியை ஆட்டங்காணேன்) “ச்ரமஹரமான வடிவைக்கொண்டு என் முன்னே ஸஞ்சரிக்க்க் காணேன்’’ என்பது இருபத்துநாலாயிர ஸ்ரீஸூக்தி. ’ஆட்டங்காணேன்’’ என்றது என்முன்னே நடையாடக் காண்கின்றிலேன் என்றபடி. இதற்கு மற்றோரு விதமாகவும் பொருளுரைக்கலாம்; * ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந்திரிந்து உன் கரிய திருமேனிவாட* என்று பெரியாழ்வாரருளிச் செய்த கட்டளையிலே, உன் அஞ்சனமேனி கல்லும் முள்ளுமான காட்டிலே நடையாட நான் காணேன்.... ஸஹித்திருக்க மாட்டேன் என்பதாக.

அல்லும் பகலுமெல்லாம் நான் காட்டிலேயா திரியப் போகிறேன்? ஒருபகல் தானே; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே பகற்போது போய்விடாதோ? என்று கண்ணன் சொல்ல, போவதன்றோரு பகல் நீயகன்றால் என்கிறாள். நீ அகன்றால் ஒரு பகல் போவான்று... உன்னோடு கூடியிருக்குங் காலத்தில் பல பல வூழிகளும ஒரு நொடிப் பொகுது போல் கழிந்துபோம்; உன்னைப் பிரிந்தாலோ ஒருபகல் ஒரூழிகாலமாகப் பெருகிச் செல்லுமேயன்றிப் பெயர்ந்து போவதன்று; பொருகயற்கண்ணிணை நீரும் நில்லா ...உன் போக்கு நினைத்துப் பாய்கிற கண்ணீர் என்னால் தகையப் போகிறதில்லை. உன்னைத் தகைந்தாலும் தகையலாம், கண்ணீரைத் தகைய முடியவில்லை காண் என்கிறாள். பிரிவை நினைத்துக் கண்துள்ளுகிறபடிக்கு மீன் துள்ளுகிறபடியைஒபபுச் சொன்னதாகக் கொள்க.

அதற்குச் செய்யவேண்டுவதென்? என்று கண்ணன் கேட்க; அதற்கு மறுமாற்றம் ஈற்றடி. இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத்தொழுததையோம் தனிமை தான் சாவது... நீ போனாலும் பேர் இருந்தாலும் இரு; இதில் விதிநிஷேதமொன்றும் நான் செய்கின்றிலேன், இவ்விடைக்குலத்தில்  இடைச்சிகளாய்ப் பிறந்த தண்ணியோமான எங்களுடைய தனிமை யொன்றே தொலையக் கடவது.. என்கிறவிதன் உட்கருத்து ஆழ்ந்து அறியத்தக்கது. “ஸாவுத்ர்யைப் போலே சொல்லுகிறாள்’’ என்பது ஈடு. ஸத்யவானுடைய உயிரைக் கொண்டு போகா நின்ற யமன், அவஉடைய மனைவியாகிய ஸாவித்ர் பின் தொடர்ந்து வருவது கண்டும் இனிய பேச்சுகள் பேசுவது கேட்டுப் பெறலாம்’ என்று கூற அப்போது கணவனுடைய உயிரைக் கேளாமல் ’இவனால் எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேணும்’ என்று கேட்டாளாம்; அது போலவே இங்குச் சோல்லுகிறபடி...’ நீ போனால் போ, இருந்தாலிரு’ என்று. அவன் பசு மேய்க்கப் போனால் இவர்களது தனிமை எங்ஙனம் தொலையும்? சி போகாமல் இருந்தே தீரவேணுமென்பதைப் பரியாயமாகச் சொன்னபடி. “இத்தனிமைதானே சாவது’’ என்றவிதற்கு மற்றொருவகையாகவம் பொருள் கூறுவர்... எங்களுக்குத் தமையென்றும் மரணமென்றும் இரண்டில்லை, இத்தனிமைதானே மரணம் என்பதாக. இப்பொருளில் சாவது என்பது விநாசமென்னும் பொருளில் வந்த பெயர்ச் சொல்; முந்தின பொருளில் ஒரு வகை வியங்கோள். “ பேசும்படி அன்ன பேசியும் போவது’’ என்ற திருவிருத்தப் பாசுரத்தில் போவது என்றது போல.

அன்றிக்கே, தனிமை சாவது... இத்தனிமை மிகவும் பொல்லாது; பொறுக்குவொண்ணாதது என்னவுமாம். இவ்வொருதலைக் காமம் தொலையட்டும் என்னவுமாம்.

English Translation

My hot breath is drying my soul.  Alas! I shall die with no companions!  Oh, I may not live to see the dalliance of your dark frame again.  Tears do not stop from these fish-eyes, the day does not pass. Curve our lowly birth as cowherd-girls, this solitude must die.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain