nalaeram_logo.jpg
(262)

வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை

சிலிங்காரத் தால்குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி

அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை அழகுகண்டு என்மகள் ஆசைப் பட்டு

விலங்கிநில் லாதுஎதிர் நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே.

பதவுரை

வலங்காதில்

-

வலது காதில்

மேல் தோன்றிப் பூ

-

செங்காந்தள் பூவையும்

வனம் மல்லிகை மாலை

-

(திருமார்பில்) காட்டுமல்லிகை மாலையையும்

மௌவல் மாலை

-

மாலதீ புஷ்ப மாலையையும்

அணிந்து

-

அணிந்துகொண்டு,

சிலிங்காரததால்

-

அலங்காரமாக

குழல்

-

திருக்குழல்களை

தாழவிட்டு

-

(திருமுதுகில்) தொங்கவிட்டுக் கொண்டு

தீம் குழல்

-

இனிமையான வேய்ங்குழலை

வாய் மடுத்து

-

திருப்பவளத்தில் வைத்து

ஊதி ஊதி

-

வகைவகையாக ஊதிக் கொண்டு,

அலங்காரத்தால்

-

(கீழ்ச்சொன்ன) அலங்காரங்களோடே

வரும்

-

வாராநின்ற

ஆயர் பிள்ளை

-

இடைப்பிள்ளையான கண்ணபிரானுடைய

அழகு

-

வடிவழகை

என் மகள் கண்டு

-

என் மகள் பார்த்து

ஆசைப்பட்டு

-

(அவனிடத்தில்) காமங் கொண்டு,

(இவ்வடிவழகு

-

கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாறவைத்துக் கடக்க நிற்க வேண்டியிருக்க,)

விலங்கி நில்லாது

-

(அப்படி) வழிவிலங்கி நில்லாமல்

எதிர்நின்று

-

(அவனுக்கு) எதிர்முகமாக நின்று

வெள்வளை கழன்று

-

(தனது) சங்குவளைகள் கழலப்பெற்று

மெய் மெலிகின்றது

-

உடலும் இளைக்கப் பெற்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணன் பசுக்களை மேய்த்துவிட்டுப் பலவகையலங்காரங்களோடு திரும்பிவரும்போது என் பெண் அவனுடைய மநோஹரமான அழகைப் பார்த்து ஆசைகொண்டு ‘இது கண்டவர்களை வருத்தும்’ என்று கண்ணை மாற வைத்து விலங்க வேண்டியதாயிருக்க, அப்படி செய்யாமல் அவனழகைப் பார்த்துக்கொண்டு எதிரே நின்றதனால் வளைகழல உடம்பு மெலியப்பெற்றாளென்று - தன் பெண்ணின் தன்மையை வினவவந்தவர்கட்குச்சொல்லி வருந்துகின்றாளொருத்தி.

இடக்காதிற்கு ஒன்றும் சாத்திக் கொண்டதாகச் சொல்லாமையால் ஒரு காதுக்குச் சாத்திக் கொண்டிருக்குமதுதானே ஓரழகாகக் கொண்டு வந்தானென்றாவது, ஒரு காதுக்குச் சாத்தின வளவிலே மல்லிகை மௌவல் மாலைகளைக் கண்டு மற்றொரு காதிற்குத் தோன்றிப்பூவைச் சாத்திக் கொள்ள மறந்தானென்றாவது கொள்க.  உடம்பு மெலிந்ததை முன்னே சொல்லாமல் வளைகழன்றதை முன்னே சொன்னதற்குக் காரணம் - வளைகழன்றபின்பே இவளுடம்பு மெலிந்ததைத் தானறிந்ததனாலென்க.  வனம் என்று அழகுக்கும் பேர்.  மௌவல் என்று மல்லிகைக்கும் முல்லைக்கு மாலதிக்கும் பேர்; “மல்லிகை மௌவல்,”  “மௌவலுந் தளவும் கற்பு முல்லை,”  “மாலதி மௌவலாகுமென்ப என்பவை - சேந்தன்திவாகரம்.  சிலிங்காரம் - ????ம்; அலங்காரமென்றபடி.  தீம் - இனிமை; “தீமு மதுரமுந் தேமுந் தேக்கும், ஆயநான்குந்த தித்திப்பாகும்”  என்பது நிகண்டு.  மெய்மெலிகின்றது - இதுவும் கீழிற்பாட்டுக்களிற்போல, வழுவமைதி.

English Translation

Wearing a bunch of glory-lily flowers on his right ear and a tall garland of jasmine flowers on his shoulders, letting his long curly hair cascade stylishly, he played on his flute sweetly, on and on, seeing the cowherd lad come in such grandeur, my daughter desired his beauty; she stood confronting him, instead of making way. Alas, her ivory arm-rings have slipped, her body has shriveled!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain