nalaeram_logo.jpg
(258)

சுற்றி நின்றுஆ யர்தழை களிடச் சுருள்பங்கி நேத்திரத் தால்அ ணிந்து

பற்றி நின்றுஆ யர்கடைத் தலையே பாடவும் ஆடக்கண் டேன்அன் றிப்பின்

மற்றொரு வர்க்குஎன்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால்

கொற்றவ னுக்குஇவ ளாமென் றெண்ணிக் கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே.

பதவுரை

ஆயர்

-

இடைப்பிள்ளைகள்

சுற்றி நின்று

-

(தன்னைச்) சூழ்ந்துகொண்டு

தழைகள்

-

மயில்தோகைக் குடைகளை

இட

-

(தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக்கொண்டுவர,

சுருள் பங்கி

-

(தனது) சுருண்ட திருக்குழல்களை

(எடுத்துக் கட்டி)

நேத்திரத்தால்

-

பீலிக்கண்களாலே

அணிந்து

-

அலங்கரித்துக்கொண்டு

ஆயர் சடைத்தலை பற்றி நின்று

-

இடைப்பிள்ளைகளின் கோஷ்டியில் முன்புறத்தில் நின்றுகொண்டு

பாடவும் ஆடவும் கண்டேன்

-

பாட்டுங்கூத்துமாக வரக்கண்டேன்;

பின்

-

இனிமேல்

அன்றி

-

அவனுக்கொழிய

மற்று ஒருவற்கு

-

வேறொருவனுக்கு

என்னை பேசல் ஒட்டேன்

-

என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;

(ஆர்க்கொழியவென்று கேட்கிறிகோளாகில்?)

மாலிருஞ்சோலை

-

திருமாலிருஞ்சோலையில் நித்யவாஸம் பண்ணுகிற

எம் மாயற்கு அல்லால்

-

எனது தலைவனுக்கொழிய

(மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)

(ஆகையினால், தாய்மார்களே!)

இவள்

-

(‘நம்மகளான) இவன்

கொற்றவனுக்கு

-

அத் தலைவனுக்கே

ஆம்

-

உரியன்’

என்று எண்ணி

-

என்று நிச்சயித்துவிட்டு

கொடுமின்கள்

-

(அவனுக்கே தாரைவார்த்து) தத்தம்பண்ணி விடுங்கள்;

கொடீர் ஆகில்

-

(அப்படி) கொடாவிட்டீர்களேயானால்

கோழம்பமே

-

(உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்”  என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள்.  இடைப்பிள்ளைகளெல்லாம் தனக்குக் குடைபிடிக்கும்படி வீறுபாடுடைய இக்கணண்பிரானைத் தவிரித்து மற்றொரு சப்பாணிப்பயலுக்கு என்னை உரிமைப்படுத்த நினைத்தீர்களாகில் குடிகெட்டதாம்.  பிறனொருவனைக் கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் “கொம்மைமுலைக ளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச்செய்யுந் தவந்தானென்?”  என்றிருக்குமவளாகையால் அக்கண்ணனிடத்தே பேரவாக்கொண்டு அதற்கேற்பப் பரிமாறப் பெற்றிலேனாகில் சிந்தயந்தியைப் போலே தன்னடையே முடிந்து போவேன்; பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக்கவலையேயாம் என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லுகின்றாளென்க.  (சிந்தயந்தி - ஓர் ஆய் மகளின்பெயர்; இவள் குருஜநத்தின் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெறமாட்டாமல் இருந்தவிடத்திலேயே உள்ளேயுருகி நைந்து முடிந்துபோயினள்.) பங்கி - ஆண்மயிர்; “பங்கியே பிறமயிர்க்கும் பகரு மாண்மயிர்க்கும் பேராம்”  என்றான் மண்டலபுருடன்.  நே த்திரம் - ???; கண், இங்கு மயிற்கண்.  கடைத்தலை - தலைக்கடை; சொல்நிலைமாறுதல்.  மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால் = “ ‘கண்ணனுக்கு’ என்னாதே இப்படி சொல்லிற்று இவனுக்கு ஓரடியுடைமை சொல்லுகைக்காக; அடியுடைமை சொல்லும்போது ஒரு ???? (கோத்ர) ஸம்பந்தஞ் சொல்லவேணுமிறே”  என்ற ஜீயருரை அறியத்தக்கது (??? ஸம்பந்தம் - பர்வத ஸம்பந்தம் என்று சிலேடை.)  கொற்றவனுக்கு = கொற்றம்... ஜயம்; அதையுடையவனுக்கென்றபடி.  தன் பொருளைத் தானே கைக்கொள்ளவல்லவனுக்கென்க.  அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்தவனிறே.  கோழம்பம் - குழப்பம்; கலக்கம் என்றவாறு.  பெண் மாண்டால் தாய்மார்க்குக் கலக்கமேயன்றோ.

English Translation

Surrounded by cowherds holding parasols, adorning his curly hair with peacock feathers, he stands at the portico of a house singing and dancing. Ladies! After seeing the Wonder Lord of Malirumsolai thus, no more can I hear of being given to anyone else. Say yes, it is fit, and turn me over to the winner or else face chaos.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain