nalaeram_logo.jpg
(257)

குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவல னாய்க்குழ லூதி யூதி

கன்றுகள் மேய்த்துத் தன்தோ ழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்

கண்டு என்றும் இவனையொப் பாரை நங்காய் கண்டறி யேன்ஏடி வந்து காணாய்

ஒன்றும்நில் லாவளை கழன்று துக லேந்திள முலையும்என் வசமல் லவே.

பதவுரை

நங்காய்

-

பூர்த்தியையுடையவனே!

ஏடி

-

தோழீ!

இவனை ஒப்பாரை

-

இவனைப் போன்றுள்ள வ்யக்தியை

என்றும்

-

எந்த நாளிலும்

கண்டு அறியேன்

-

(நான்) பார்த்ததில்லை;

வந்து காணாய்

-

(இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க, அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;)

கோவலன் ஆய்

-

இடைப்பிள்ளையாகப் பிறந்து (இந்த்ரபூஜையை விலக்க)

(பசிக்கோபத்தினால் இந்திரன் விடாமழை பெய்வித்தபோது)

குன்று

-

கோவர்த்தனமலையை

எடுத்து

-

(குடையாக) எடுத்து

ஆநிரை

-

பசுக்களின் திரளை

காத்த

-

ரக்ஷித்தருளின

பிரான்

-

உபகாரகனும்

குழல்

-

குழலை

ஊதிஊதி

-

பலகால் ஊதிக்கொண்டு

கன்றுகள்

-

கன்றுகளை

மேய்த்து

-

(காட்டில்) மேய்த்துவிட்டு

தன் தோழரோடு உடன் கலந்து

-

தனது தோழர்களுடன் கூடிக்கொண்டு

தெருவில்

-

இவ்வீதி வழியே

வருவானை

-

வருபவனுமான கண்ணபிரானை

கண்டு

-

நான் கண்டவளவிலே

துகில்

-

(எனது அரையிலுள்ள) புடவை

கழன்று

-

(அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய

வளை

-

கைவளைகளும்

ஒன்றும் நில்லா

-

சற்றும் நிற்கின்றனவில்லை;

ஏந்து

-

(என்னால்) சுமக்கப்படுகின்ற

இள முலையும்

-

மெல்லிய முலைகளும்

என் வசம் அல்ல

-

என் வசத்தில் நிற்கின்றனவில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பிரான்”  என்றவிடத்தும் இரண்டனுருபுகூட்டுக.  கண்ணபிரானெழுந்தருளுந் தெருவில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்பிள்ளை ஸம்ப்ரமவிசேஷத்துடனேவருகின்ற கண்ணனைக் கண்டு இவ்விலக்ஷண வ்யக்தியை நம் தோழியுங் கண்டு களிக்க வேண்டுமெனக் கருதி, வீட்டினுள்ளே கிடப்பாளொரு தோழியை நோக்கித் “தோழீ! இதுவரை நம்மாற் காணப்பட்டுள்ளவர்களில் ஒருவரையும் ஒப்பாகச்சொல்லப்பெறாத ஒருவிலக்ஷண புருஷன் இங்ஙனே வருகின்றான், சடக்கென வந்து காணாய்”  என்றழைக்க, அவள் ‘அவன் யார்? எக்குடியிற் பிறந்தவன்?’ என்றாற் போன்ற சில கேள்வி கேட்டுக்கொண்டு வரத் தாமஸிக்க, அதற்கு அவள் ‘ஒருவன் இவ்விடைச்சேரியில் வந்து பிறந்து பற்பல அதிமாநுஷசேஷ்டிதங்களைச் செய்துளனென்று கேட்டுள்ளோமே, அக்கண்ணபிரான் காண்’ என்ன; அதை அவள் கேட்டு ‘அவன் அத்தனை விலக்ஷணனோ?’ என்ன, அதற்கு அவள் ‘பேதாய்! இவன் விலக்ஷணனல்லனாகில் யான் இவ்வாறு விகாரமடைவேனோ? பாராய்தோழீ!  அரையில் - துகில் தங்கவில்லை. (“என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ்செய்யும்”  என்றபடி); இன்னும் என்னாக வேணுமென்கிறாள்.  (இரண்டாமடியிறுதியில்) கண்டு - எச்சத்திரிபு; காண என்றபடி.  ஏடி - தோழி . இவ்விலக்ஷண புருஷனைக் காணப்பெறாக்குறை ஒன்றுண்டுனக்கென்பாள்.  ‘நங்காய்’ என்று விளிக்கிறாளென்க.  இவனைக் கண்டவுடனே தன் மனோதரம் பலிக்கப் பெறாமையால் உடல் இளைக்கத் தொடங்கவே துகிலும் வளையுங் கழலப்புக்கன.

English Translation

The cowherd Lord who lifted the mount and protected the cows has played his flute all day long to graze his calves. He comes back with his fellows, down the street. O Sister, come and see! I have never seen such a one before! My dress has loosened, my bangles do not stay, my young risen breasts are not under my control!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain