nalaeram_logo.jpg
(256)

சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார்கொண் டோட

ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்

அருகேநின் றாள்என்பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டுஇவ் வூர்ஒன்று புணர்க் கின்றதே.

பதவுரை

தோழன்மார்

-

தன்னேராயிரம் பிள்ளைகள்,

சுரிகையும்

-

உடைவாளையும்

தெறி வில்லும்

-

சுண்டுவில்லையும்

செண்டுகோலும்

-

பூஞ்செண்டுகோலையும்

மேல் ஆடையும்

-

உத்தமுயத்தையும்

(கண்ணபிரானுக்கு வேண்டினபோது கொடுக்கைக்காக)

கொண்டு

-

கையிற்கொண்டு

ஓட

-

பின்னே ஸேவித்துவர,

ஒருவன் தன்

-

ஒரு உயிர்த்தோழனுடைய

தோளை

-

தோளை

ஒரு கையால்

-

ஒரு திருக்கையினால்

ஊன்றி

-

அவலம்பித்துக்கொண்டு

(ஒரு கையால்)

-

மற்றொரு திருக்கையினால்

ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்

-

(கைகழியப்போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை

(ஊன்றி)

-

ஏந்திக்கொண்டு

வருகையில்

-

மீண்டு வருமளவில்

வாடிய

-

வாட்டத்தை அடைந்துள்ள

பிள்ளை கண்ணன்

-

ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய

மஞ்சளும் மேனியும்

-

பற்றுமஞ்சள் மயமான திருமேனியையும்

வடிவும்

-

அவயஸமுதாய சோபையையும்

அருகே நின்றான் என் பெண்

-

(அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்

கண்டாள்

-

(முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;

(பிறகு, அபூர்வவஸ்து தர்சநமாயிருந்தபடியால்)

நோக்கி கண்டாள்

-

கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;

அது கண்டு

-

அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு

இ ஊர்

-

இச்சேரியிலுள்ளவர்கள்

ஒன்று புணர்க்கின்றது

-

(அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;

-

இதற்கு என்செய்வது!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கரிகை - ??? என்ற வடசொல் திரிபு.  தெறிவில் - கல் முதலியவற்றைச் செலுத்தும் சிறுவில்.  செண்டுகோல் - நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள விலாஸதண்டம்.  நிரை என்றாலும் இனம் என்றாலும் கூட்டமே பொருள்; இதனால் எண்ணிறந்த பசுக்களை மேய்த்தவாறு தோற்றும்.  தூரத்திற்சென்ற பசுக்கள் அணுகுவதற்கும் மேய்கைக்கும் பக்கங்களில் விலகாமைக்கும் மற்றுஞ் சில காரியங்களுக்கும் ஸூசகமாகக் கண்ணபிரான் வகைவகையாகச் சங்கு ஊதுவன் என்க.  இப்பாட்டின் கருத்து;-  ஒருபெண் பிள்ளையின் தாய் சொல்லும் பாசுரம் இது.  கண்ணபிரான் காட்டில் கன்றுகளை மேய்த்துவிட்டு, லீலோபகரணங்களுங் கையுமான தனது தோழன்மாருடன் மீண்டு வரும்போது வழியில் நின்று கொண்டிருந்த என்மகள் முதலில் அவனைப் பொதுவாகப் பார்த்தாள்; பிறகு ‘இவர்களில் இவனொருத்தன் விலக்ஷணனாயிருக்கின்றானே!’ என்று சிறிது உற்று நோக்கினாள்; உலகத்தில் அபூர்வ வஸ்துவைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இது இயல்பே; நெஞ்சில் ஒருவகை ஆசையைக்கொண்டு பார்த்தாளில்லை; ஆயிருக்கச் செய்தேயும் ‘இவள் அவனை உற்றுநோக்கினாளாகையால் இவளுக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கின்றது’ என்று ஊரார் வம்பு கூறுகின்றனர், இது தகுமோ? என்று முறைப்படுகின்றாள்.  (மஞ்சளும்.) கீழ் “பற்றுமஞ்சள்பூசி”  என்ற பாட்டின் உரையைக் காண்க.  நின்றாள் - முற்றெச்சம்.  “அது கொண் டிவ்வூர்”  என்ற பாடமும் சிறக்கும்; “கண்டதுவே கொண்டெல்லாருங்கூடி”  என்ற திருவாய்மொழியையுங் காண்க. ஊர் - இடவாகுபெயர்.

English Translation

The team sent to bring back the cows returns with the tired Krishna resting his one hand one hand on a fellow’s shoulder and holding a conch in the other, as companions run after him carrying his sword, bow, arrow and cape. My daughter stood close and saw his dusty golden face, then looked again. Seeing this, the town has made out of a connection.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain