(3791)

ஆதுமில்லைமற்றவனில் என்றதுவே துணிந்து

தாதுசேர்தோள்கண்ணனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன

தீதிலாதவொண்டமிழ்கள் இவையாயிரத்துளிப்பத்தும்

ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே.

 

பதவுரை

தாது சேர்தோள் கண்ணனை

மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து

அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து

அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு

குருகூர் சடகோபன் சொன்ன

ஆழ்வாரருளிச் செய்

ஒனா தமிழ்கள்

அழகிய தமிழினாலான

தீது இல்லாத இவை

தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள்

இப்பத்தும் ஒதவல்ல

இப்பதிகத்தைக் கற்கவல்ல

பிராக்கள்

உபகாரர்களான் ஸ்வாமிகள்

பண்டே நம்மை ஆளுடையார்கள்

ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***–  இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது.  "இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்" என்கிறார்.  இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார். இது இப்பதிகத்திற்குப் பலன் கூறினவாறாக எங்ஙனே யாருமென்று சங்கிக்க நேரும்.  "இப்பதிகம் கற்பார் என்போன்றவர்களை ஆட்படுத்திக் கொள்ள பெறுவர்" என்பது பரமதாற்பரியமாகையாலே பாகவதர்களை வசப்படுத்திக் கொள்வதே இப்பதிகம் கற்கைக்குப் பலனாகச் சொல்லிற்றாயிற்றென்று கொள்க.  இப்பதிகத்தை யோதுவ தென்றால் வெறும் சப்தராசிகளைக் கற்கையன்றே;   பொருளுணர்ந்து அதுதானும் அனுஷ்டான பர்யந்தமாகுமே;  அதுதானே ஆழ்வார்க்கு உகப்பு;  ஆழ்வார்க்கு மாத்திரமன்று;  ஆழ்வார் போல்லாரெல்லார்க்குமே உகப்பு;  ஆகவே இப்பத்து மோதவல்லவர்கள் பாகவதோத்தமர்களை உகப்பிக்க வல்லவரா களென்று பயனுரைத்ததாயிற்று.

ஆழ்வார் இப்பதிகமருளிச் செய்ததற்குக்காரணம் ஒரு துணிவு;  அதாவது "ஆதுமில்லை மற்றவனில்" என்ணுந்துணிவு.  எம்பெருமானையொழிய வேறு ப்ராப்யப்ராபகங்களில்லையென்கிற அத்யவஸாயமே இப்பதிகமாகப் பரிணமித்த தென்னலாம்.  இரண்டாமடியை நோக்கி நம்பிள்ளையருளிச்செய்து காணீர்– "இவர்க்கு இப்படி இந்த வ்யவஸாயத்தைக் கொடுத்தார்.  ஆனென்றால், வேறுண்டோ? அவனுடைய தோளும் தோள்மாலையுமன்றோ அவனுடைய ஸெளந்தர்யமாயிற்று இவரையிப்படி துணியப் பண்ணிற்று" என்று.

தீதிலாதவாயிரம் – ஸ்ரீ ராமாயணம் மஹாபாரதம் முதலாவனவை போல பகவத் கதைகளோடு இதர கதைகளையும் சேர்த்துப் பேசுகையாகிற தீதில்லாமை விவக்ஷிதம்.  ஒன்தமிழ்கள் –"உள்ளுண்டான அத்தத்தையடைய வெளியிட்டுக் கொடுக்கவற்றாயிருக்கை" என்பது ஈடு.

 

English Translation

This decad of the faultless thousand songs by kurugur Satakopan who took refuge of the feet of garland –chested Krishna, -those who can sing it will be our eternal masters!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain