(3790)

கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து

மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்

திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ

எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே.

 

பதவுரை

கண்ணன் அல்லால் சரண் இல்லை அது நிற்க

ஸ்ரீக்ருஷ்ணனல்லது வேறு சரணில்லை யென்னுமர்த்தம் நிலைநிற்கைக்காகவும்

மண்ணின்பாரம் நீக்குதற்கு

பூபாரத்தைப் போக்குகைக்காகவும்

வட மதுரை பிறந்தான்

வட மதுரையில் வந்து அவதரித்தான்

(ஆன பின்பு. ஸம்ஸாயிகளே)!

அம் உடைமை உண்டேல்

உங்களதாக நினைத்திருக்கிற பொருளுண்டாகில் (அதை)

திண்ணமா அவன் அடி சேர்த்து உய்ம்மின்

திடமாக அவன் திருவடிகளினே ஸமர்பித்து உஜ்ஜீவியுங்கள்

எண்ண வேண்டா

ஆலோசிக்க வேண்டா

நும்மது ஆதும்

உங்களுடையதான எப்பொருளும்

அவன் அன்றி மற்று இல்லை

அவனதேயன்றி மற்றமடியாயில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– *பரித்ராணுய ஸாதூநாம்* என்கிற கீதாச்லோகத்தை நிற்வஹிக்கும் நம்மாசார்யர்கள் வெவ்வேறு வகையான சாஸ்த்ராத்தங்களை வெளியிட்டருளினார்கள். எம்பெருமாளுடைய அவதாரம் ஸாது பரித்ராணத்திற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவும் என்று மூலத்தில் மொழிந்திருந்தாலும் ஸாது பரித்ராணந்தான் முக்கமாக ப்ரயோஜனமென்றும் துஷ்க்ரூத்விநாசஙம் அப்படி முக்ய மன்றென்றும், அது ஸங்கல்பத்தாலும் செய்து முடிக்கத் தக்கதாகையாலே அதற்காக அவதாரம் அபேக்ஷி தமன்றென்றும் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றினர்.  ஸ்ரீவசநபூஷணத்தில் "ஈச்வான் அவதரித்துப்பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயாருளிச்செய்வர்" என்ற சூர்ணையையும் அதன் வியாக்கியானத்தையும் நோக்குமளவில் துஷ்க்ருத் விநாசநத்தை நோக்கியே எம்பெருமானது அவதாரமென்று நஞ்சீயர் திருவுள்ளம் பற்றினதாகப் புலப்படுகின்றது.  இனை பரஸ்பர விருத்தங்களல்ல. இரண்டு படியாகவும் சொல்லலாம் போலேயுள்ளது.  இரண்டும் ஆழ்வார் திருவுள்ளத்திலோடியிருப்பதாக விளங்காநின்றது.  இப்பதிக்கத்திலேயே கீழ் எட்டாம்பாட்டில் ஸாதுபரித்ராணமே வேதாரத்திற்கு ப்ரயோஜனமென்னுந் திருவுள்ளத்தை வெளியிட்டார்.  இப்பாட்டில் "மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்" என்பதனால் துஷ்க்ருத்விநாசமே அவதாரப்ரயோஜன மென்கிற திருவுள்ளத்தை வெளியிடுகிறாரயிற்று.  உண்மையில் ;  துஷ்க்ருத்விநாசந மென்பீதும் ஸாதுபரித்ராணத்தின் பாகுபாடேயென்பது அண்ணிதி னுணரத்தக்கது.   ரக்ஷிக்கையாவது அநிஷ்டங்களைத் தவிர்க்கவும் இஷ்டங்களைக் கொடுக்கையுமாதலால் துஷ்க்ருத விநாசநம் பண்ணுகவனவில் ஸாதுபரித்ராணம் பூர்ணமாக வித்திக்கமாட்டாதன்றோ.

அன்றியும், ஸாது பரித்ராண துஷ்க்ருத்விநாசகங்களுக்கு மேலே "தர்மஸம்ஸ்தாப கார்த்தாய" என்று மூன்றாவதான வொரு ப்ரயோஜனமும் சொல்லப்பட்டுள்ளது.   தர்மஸ்தா பனத்திற்காக அவதரிக்கிறேனென்ற திருவாக்கினாலேலே "ஸர்வதர்மாந் பரித்யஜ்ய" என்றும் மேலே சொல்லியிருக்கையாலே இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் முரண்பாடில்லாமை ஆராயத் தக்கது.  இன்று புதிதாக நாம் ஆராயவேண்டாவே;  முமுக்ஷுப்படி சாமச்லோகப்ர கரணத்தில் "தர்மஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன் தானே ஸர்வதர்மங்களையும்விட்டு என்னைப் பற்றென்கையாலே ஸாசஷாத்தர்மம் தானே பென்கிறது" என்றருளிச் செய்தார் பிள்ளையுலகாசிரியர்.  ஆகவே "தர்மஸம்ஸ்தாபநார்த்தாய" என்றவிடத்தில் விவக்ஷிதமான தர்மஸ்தாபனம் ஆபாஸதர்மான ஸாத்ய தர்மங்களின் ஸ்தாபனமன்றிக்கே க்ருஷ்ணம் தர்மம் ஸ்நாதநம் ராமோ விக்ரஹவாந் தர்ம;  என்று ஸாசஷாத்தர்மமாகவும் ஸித்ததர்மமாகவும் சொல்லப்பட்ட தன்னையே ஸ்தாபிப்பது என்று தேறிற்று.  இவ்விஷயமும் இப்பாட்டில் முதலடியில் தெரிவிக்கப்படுகிறது–"கண்ணனல்லாலில்லைகண்டீர் சரணது நிற்க" என்று இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;–க்ருஷ்ணனையொழிய வேறு சரணமாவாரில்லையென்னு மிவ்வர்த்தம் நிலைநிற்கைக்காக.  இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும், அதுக்குறுப்பாக பூபாரத்தைப் போக்குகைக்காகவும் திருவவதாரம் பண்ணினான் என்று.

ஆனபின்பு, நீங்களும் உங்களுடைமையென்று நினைத்திருந்தன வுண்டாகில் அவன் திருவடிகளுக்கே சேஷமாம்படி ஸமர்ப்பித்திடுங்கள் என்கிறார் மூன்றாமடியால் "நும் முடைமைகளை அவனடி சேர்த்து" என்னாமல் ".நும்முடைமையுண்டேல்" என்கையாலே, நும்முடைமையென்று சொல்லக்கூடிய வஸ்து ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தால் இல்லையென்பது போதரும்.  அவர்களுடைய அங்யாதாஜ்ஞானத் தாலுள்ளதத்தனை. எண்ண வேண்டா = இது தான் அவனதோ நம்மதோ வென்று விசாரிக்கவேண்டா;  உங்களோடு உங்களுடைமையோடு வாசியற எல்லாம் அவனுக்கே சேஷப்பட்டதாகையாலே மருளவேண்டா என்றபடி, அவனன்றியென்றது – அவனுக்கு சேஷபூதமாக வல்லது என்றபடி, ஈற்றடிக்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்; இனிச் செய்ய வேண்டுவதில் உங்கள் தலையிலே சுமையொன்றும் கிடக்கின்றதன்று: எல்லாம் அவன்பக்கலிலே கிடக்கிறது= என்பதாக மற்றில்லை யென்றவிடத்திற்கு ஈடு:– "பலஸித்திக்கீடான ஸாதனமும் அவனையொழிய இல்லை ;  ஸமிதைபாதி ஸாவித்ரி பாதியாக நீங்களும் ஒரு தலை கூட்டுப்பட வேண்டுவதில்லை"

 

English Translation

There is no refuge other than Krishna, "It is certain, to prove it he took birth in Mathura and rid the world of its burden.  If you consider anything as yours.  Sacrifice it to him.  Have no doubt, devotees, all is by his grace

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain