(3787)

(3787)

 

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும்

சிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ

குற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான்

குற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே.

 

There is nothing else, I have said so, have no doubt. For all beings on Earth, even thinking of him will do, Alas! At least in bearing his names there is nothing wrong.  So recite the names of the perfect cowherd-lad of Mathura

 

மற்றொன்று இல்லை

உபாயாந்தரமில்லை

மாநிலத்து, எவ் உயிர்க்கும்

பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும்

சுருங்க சொன்னோம்

இது சுருக்கமாகச் சொல்லுகிறோம்

சிற்ற வேண்டா

ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா

சிந்திப்பே அமையும்

மாநஹிகமான அத்யவஸாயமே போதும்

கண்டீர் அந்தோ-;

கூட மதுரை பிறந்தான்

வடமதுரையிலே அவதரித்தவனான

எங்கள் பெற்றத்து ஆயன்

எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய

குற்றம் இல்சீர்

குற்றமற்ற திருக்குணங்களை

வைகல் கற்று வாழ்தல் இது

எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது

குணம்

குணமாகுமே தவிர

குற்றம் அன்று

குற்றமாகாது.

 

***– கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார்.  எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கிறன்ர்.  மற்றொன்று இல்லை= இத்தொடொக்க வேறொன்று எண்ணலாவதில்லை;  அன்றியே;  எத்தனை தடவை சொன்னாலும் இது தவிர வேறொருவார்த்தை சொல்லலாவதில்லை என்னவுமாம். சுருங்கச் சொன்னோம்= உங்கள் நெஞ்சில் தேக்கிக் கொள்ள வொண்ணாதபடி காடு பாய்ந்து சொல்லுகை பன்றிக்கே ஸாரஸம்சேஷபமாகச் சொல்லுகிறோமொகை. சொன்னோமென்றது–சொல்லுகிறோமென்றபடி. மாநிலத்து எவ்வுயிர்க்கும் = கடல் சூழ்ந்த மண்ணுலகிலுள்ளாரெல்லாரும் இது கேட்க அதிகாரிகள். "இவ்வர்த்தத்துக்கு அணியார்" பரமபதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்திலுள்ளாரென்கை" என்பது ஈடு.

 

ஸித்தோபாயஸ்வீகாரஞ் சொல்லுகிற இப்பாட்டில் சிற்றவேண்டா என்பதே உயிரானது;  கிற்றுதல், சிதறுதலாய், ப்ரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்கை. இவ்வுபாயத்திவிழியுமவனுக்குப் பரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்னுமிடம் சரமச்லோகஸித்தம். ஸகலப்ரவ்ருத்தியினுடையவும் நிவ்த்தியே இவனுக்கு வேண்டுமென்பது ஸர்வதர்மாந் ப்ரித்யஜ்ய என்பதனால் சொல்லிற்றன்றோ. சிந்திப்பே அமையும் = ரக்ஷித்தருண வேணுமென்று வாயாலே சொல்லி ப்ரார்த்திக்கவும் வேண்டா; அஞ்சவி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸதநி என்கிறபடியே பகவத்ப்ரஸாத ஹேதுபூதமான அஞ்ஜவியைப்ரயோகிப்பதோ. குஹன் காகம் முதலானாரைப்போலே ரக்ஷசுவஸ்து இருந்தவிடத்தே வருவதோ இவையும் செய்யவேண்டா:  *ஜ்ஞாநாந் மோக்ஷ:* என்று ஞானத்தாலே மோக்ஷமென்று சொல்லி யிக்கையாலே மாநஸிகமான பற்றுதலே போதும் என்றவாறு, த்ருடாத்யவஸாய ரூபமாயிருப்பதொரு ஜ்ஞாநவிசேஷத்தைத் திருவுள்ளம்பற்றிச் 'சிந்திப்பேயமையும்' என்கிறார்.  முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் "வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு அழிவில்லை;  ஜ்ஞாநாந் மோக்ஷ மாகையாலே மாநஸமாகக் கடவது" என்றுள்ள சூர்ணிகை இங்சு அநுஸந்தேயம்.

 

"சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்" என்கிற இவ்வளவையே நோக்கி "மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்"  என்றருளிச் செய்தாரென்க.

 

சிந்திப்பே அமையுமென்றால் இனி வாய்திறந்து ஒன்றும் சொல்லவேண்டாலே: வாயைமூடிக்கொண்டு மௌனியாயிருக்க வேண்டியது தானோ? கீழே வடமதுரைப் பிறந்த வின் வண்புகழே சொல்லியுய்ய என்று வாயாலே சில சொல்லும்படி நியமித்தீரே, அதுவும் இப்போது தள்ளுண்டதோ? என்று சிலர் கேட்க:  அவர்கட்குப் பின்னடிகளால் விடையளிக்கிறார்.  வடமதுரைப் பிறந்த எங்கள் கோபாலக்ருஷ்ணனுடைய திருக்குணங்களை வாயாரச் சொன்னால் என்ன குற்றமுண்டாம்?  பாய புத்தியினால் செய்ய வேண்டிய தொன்று மில்லை யென்று சொன்னதேயொழிய ஸ்வயம் ப்ரயோஜந புத்த்யா செய்யத்தகாததுண்டோ? அது குற்றமோ? என்கிறார். "குற்றமன்றெங்கள்" என்பதோ பாடம்; "குற்றமென் எங்கள்" என்றும் பாடமுண்டென்பர் சிலர்.  குற்றம் என்?–என்ன குற்றமுண்டு?

 

குற்றமில் சீர்கற்றுஹ வைகல்வாழ்தல் குணங்கண்டீர்= அகிலஹேயப்ரத்யநீக கல்யாண குணங்களைக் கற்பது ஒருகால்; அதன் பலனான வாழ்ச்சி நித்யமாயிருக்கும்; இதுவே ப்ராப்தம், இது தவிர்ந்தெல்லாம் அப்ராப்தம்.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain