(3785)

சதிரமென்று நம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார்

மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர்

அதிகொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு

எதிர்கொள்ளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.

 

பதவுரை

சதிரம் என்று

சதிரையுடையோ மென்று

நம்மை நாமே சம்மதித்து

தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு

இன்மொழியார்

வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய

மதுரபோகம்

இனிய போகங்களை

அற்றவரே

அனுபவித்தவர்களே

லைகி

மற்றொரு காலத்திலே

மற்று ஒன்று உறுவர்

வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள்

(ஆனபின்பு)

அதில் கொள் செய்கை அசுரர் மங்க

அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி

வடமதுரை பிறந்தாற்கு

வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு

எதிர்கொள் ஆள் ஆய்

ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி

உய்ரல் அல்லால்

உஜ்ஜீவித்துப் போமதொழிய

இன்பம் இல்லை

(வேறு வழியில்) சுகமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– மாதர்களால்படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில். (தம்மைத் தாமே சதிமென்று சம்மதித்து) "சம்மதித்து" என்கிற வினையெச்சம் 'மதுரபோகம் துற்றவரே' என்றதில் அக்வயிப்பதாதலால், தம்மைத்தாமே சதிசமென்று சம்மதிப்பர் ஆண்களேயாவர்கள்;  "சம்மதித்தின் மொழியார்" என்றவிடத்துத் தொகுத்தலாகக்கொண்டு 'சம்மதித்த இன்மொழியார்' என்று பிரித்து, சம்மதித்தவென்று பெயரெச்சமாக்கி இன்மொழியார்க்கு அடைமொழியாக அங்வயித்து, தம்மைத்தாமே சதிமென்று சம்மதிப்பவர் இன்மொழியாராவ பெண்கள் என்று சிலர் கூறுவர்.  அதிர்சுவையொன்று மறிகின்றிலோம். ஆடவர் வாழ்ந்தகாலத்தில் சதிர் கேடாக வாழ்ந்தாலும் கூட 'சாம் சதிராக வாழாநின்றோம்' என்று தங்கள் வாழ்ச்சியாத் தாங்களே உகந்துகொண்டிருந்து பெண்களோடே போகங்களை அனுபவித்துக் கொண்டிருத்தவர்கள் தாமே, வைகி மற்றொன்று உறுவர்–வயலும் தொலைந்து பொருளும் தொலைந்தவாறே வாய்கொண்டு சொல்லவொண்ணாத அவமானம்களையுடையவர்கள் என்றபடி (இன்மொழியார்) மது திஷ்டதி வாசி போஷிநாம் ஹருதி ஹலாலமேவகேவலம் என்றான் ஒரு மஹாகவி இங்கு நம்பிள்ளையீடு– "அகலாய் மயிர்க்கத்தியாயிருக்கச் செய்தேயும் பிரணய ஸரஸமான சேச்சாலே வசீகரிக்கவல்லவர்கள்" என்று.

வைகி மற்றொன்று உறவர் என்றயிடத்து சம்பிள்ளைவீட்டின் கனவ வாசாமகோசரம் ஈ ஸ்த்ரார்த்தங்களை மாததீம் அற்புதமாக அருளிச் செய்யவல்லர் லௌகிக விஷயங்களையும் அப்படியே திடீர்.  அந்த ஸ்ரீ ஸீர்திகளைக் காண்மின்,–"[வைகி மற்றொன்றுவர்]" போகத்துக்குப் பாங்கான வௌன   அதுக்குக் கைம்முதலான த்ரவ்யமும் போமே; பிள்ளையும் ஆசை மாறாதே; வருவார்க்கு விரோதியாய் அவ்வொவிடங்களிலே போயிருக்கும் முற்பட மனித்திலே நாளிரண்டு பண்ணை 'போகலாதாதோ' என்பர்களே; போகிறோம் போகிறோமென்றிருக்குமே போகாதே; பின்னை வெள்ளாட்டியையிட்டுப் பரிபவிப்பர்கள்;  அதுகரும போகாமே; பின்னை ஆணையிட்டெழுப்பிப் பார்ப்பர்கள்;  அதுக்கு மெழுந்திரான் பின்னே காலைப்பற்றியிருப்பர்கள்; இவன் தூணைச் சுட்டிக் கொள்ளும்; இப்படியால் அவர்களாலே பரிபூதாரளர்கள், விபாகத்தில் பிறக்கும் பரிபல்த்தை யநுஸந்தித்து அது தம் வாயாலருளிச் செய்யமாட்டார்களே மற்றொன்று என்கிறார்” என்று.

வெறும் சாஸ்த்ரார்தர்களோகா யிருந்தால் காலசேஷபபரர்கள். தூங்கி விழுவர்களென்று ஆசார்யர்கள் இப்படிப்பட்ட களோச்சதிகளையும் இட்டு வைக்கிறார்கள்.  இவ்வளவு ரஸோக்திகளுக்கும் மூலம் இடம் வந்திருக்கு பழகு காண்மின்.

"ப்ராக்ருதர்கள் நமக்கு  எம்பெருமானொருவனே ரக்ஷகன்" என்னுமடத்தையருளிச் செய்துவரும் இப்பதிக்கத்தில் இப்பாசுரத்திற்கு என்ன ப்ரஸக்தியென்று சங்கிப்பர் சிலர் ஆசார்ய உறருதயத்தில்    ப்ரசுரணத்தில் ஒன்பதாம்பத்தின் தாத்பார்ய ஸாரத்தைச் சுருக்கியருளிச் செய்கிற சூர்ணையிலே இம்மடவுலகர் கண்டதோடுபட்ட அபாந்தவ அரக்ஷக அபோக்ய அஸுக அநுபாய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி என்றருளிச் செய்திருப்பது கண்டு தெளினெணும் பிறர் ரக்ஷகரல்லர், நம்பெருமானே ரக்ஷகன் என்கிற விஷயம் மாத்திரமன்று இப்பதிக்கத்திற் சொல்லப்படுவது; கேண்மின்; கண்ணெதிரே நேசிப்பதொழிய, காணுதபோது நேசமொன்று மின்றிக் கேயிருக்கிற களத்ர புத்ராதிகள் பந்துக்களன்று;  ப்ரளயாபஸ்களுனவனே பரமபந்து என்பதை முதற்பாட்டில் நிரூபித்தார்; ஸம்ஸாரிகள் தாங்கள் உபகாரகரைப் போலே ப்ரயோஜனமுள்ளபோது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர்களாகையாலே அவர்கள் ரக்ஷகரல்லர் தன்னுடைய ரக்ஷணத்தாலே அதிசங்கை பண்ணினுரையும் விச்வ விப்பித்து ரக்ஷிக்குமவனாய் அவதாக முகத்தாலே ஸுலபனாய் ரக்ஷணத்திற்கேற்ற குணங்களையுமுடையவனான எம்பெருமானே ரக்ஷகளென்பதை இரண்டு மூன்று நான்காம் பாட்டுக்களிலே நிரூபித்தார் தங்களுக்கு போக்கையகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் பிராயம் கழிந்தவாறே உபேக்ஷிப்பர்கள்;  எப்போதும் ஒரு படிப்பட ஸ்நேஹித்திருப்பான் எம்பெருமானொருவனே;  ஆகவே அவர்கள் போக்யால்லர்;  இவனே பரமபோக்யன் என்னுமிடம் இப்பாட்டில் நிரூபிக்கப் படுமதாகையாலே, எடுத்துக்காட்டின என்கைக்கு இடமில்லையென்க.  எம்பெருமானைப்பற்றுவதே ஸகீருப்மென்பதும், இதுவே உபாயமென்பதும் மேற்பாட்டுக்களில் நிரூபிக்கப்படும்.

இனி, பின்னடிகளால் எம்பெருமானைப் பற்றுவதே பரமபோக்யமென்கிறது, அதிர் கொள்செய்கையசுரர்–பிராணிகளின் செஞ்சுகள் அதிரும்படியான செய்கைகளையுடைய அசுரவர்க்கம்;  அது முடியும்படியாக வடமதுரையிலே வந்து திருவவதரித்தவனுக்கு.  எதிர் கொளாளாய்–அவன்தானே மேல்விழுந்துவாராநின்றால் வைமூக்க்யம் பண்ணியொழியாமே வருகவருகவென்று சொல்லி ஆபிமுக்க்யம் காட்டுவதே எதிர்கொளளாதல்.  இங்கே நம் பிள்ளையீடு; "அவனுக்கு நாம் செய்யவேண்டுவது இது : அவன்தானே மேல்விழாநின்றால் விமுகராகா தொழியுமத்தனையே வேண்டுவது" என்று

த்ரூதராஷ்ட்ரன் ஸஞ்ஜயனோடு சொன்னாளும் " பாண்டவபக்ஷபாதியான க்ருஷ்ணன் வருகிறான், அவனுக்குச் சில பொருகள்களைத் தந்து அவனை நமக்கு வசப்படுத்திக் கொள்ளுவோம்" என்று.  இதைக் கேட்ட ஸஞ்ஜயன் அப்பா!  வருகிறவனை அப்படிப்பட்டவனாகவா நினைத்துவிட்டாய்? அவனுக்கு வேண்டுவது இன்ன தென்று அறியாயோ [அந்யத் பூர்ணுத் அபாம் கும்பாத் அந்யந் பாதாவநேஸநாத், அந்யத் குசலஸம்ப்ரக்நாத் ந சேச்சதி ஜநார்தநஃ] அவரவர்கள் தாம் குடிக்குத் தண்ணீரைக் குளிவவைப்பதுண்டே ; அது தன்னை அவன் அவரவர்கள் தாம் குடிக்குந் தண்ணீரைக் குளிரவைப்பதுண்டே ; அது தன்னை அவன் வருகிறவழியிலே வைப்பது, அதிதிகள் வந்து புகுந்தால் கால் கழுவுவதாக ஸாமாந்யசாஸ்த்ரம் விதித்தவளவு அவன் விஷயத்தில் செய்வது; அதாவது குடத்தில் நீரையிட்டு அவன் திருவடிகளை விளக்குவது;  பல்லாண்டு பாடுவது ஆக இதற்கு மேற்பட அவன் திறத்துச் செய்யலாவதில்லை; அவனும் இவ்வளவுக்கு மேற்பட வேறொன்றும் விரும்புவானல்லன்– என்றான்.  இவைசெய்து தலைக்கட்வேணுமென்பதுமில்லை ;  செய்யவேணுமென்று நெஞ்சினால் கோலினாலும் போதும்.  "ஆபிமுக்க்யஸீசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும்" என்பது ஸ்ரீவசநபூஷணம்.  அப்படிப்பட்ட அதிகாரிகளை நோக்கியே இங்கு எதிர்கொளாளாய் என்றது.

இல்லைகண்டீரின்பமே=இங்கே ஈடு; "துக்கங்களிலே சிலவற்றே ஸுகமென்று ப்ரமிக்கிறவித்தனை போக்கி இதொழிய ஸுகரூபமாயிருப்பதொன்றில்லை.  உயிர்க்கழுவிலே யிருக்கிறவனுக்கு பிபாஸையும் வர்த்தித்து தண்ணீருங்குடித்து தாஹமும் சமித்தால் பிறக்கும் ஸுகம் போலெயிருப்பதோன்றிறே ஸம்ஸாரிகளுக்கு போகத்தால் பிறக்கும் ஸுகமாகிறது.  ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்கி, அது அள்ளிக் கொள்ளுமென்றறியாதே வெய்யிலைத் தப்பப் பெற்றோமென்று ஹருஷ்டராயிருப்பாரைப் போலேயிறே விஷயாநுபவத்தாலே களித்திருக்கிறவிருப்பு இவனுக்கு,"

 

English Translation

Those who enjoyed sweet union with pampered parrot-like- dames will also experience something else later,  The Lord of Mathura destroyed many frightening Asuras, So wait on for his servitude, that is the only joy there is

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain